தாமஸ் கார்லைல்

quotes:
  • நபித்துவத்தின் பண்புகள்
  • நான் முஹம்மதை விரும்புகிறேன் அவரின் கருத்துக்களும், கூற்றுக்களும் மிகவும் கம்பீரம் வாய்ந்தது இவர் தன்னைப் பற்றி சிந்திக்காமல் தனது சமூகத்தைப் பற்றியே தினமும் சிந்திப்பார் இவருக்கு பெருமை என்பது கிடையாது எப்போதும் பணிவாகவே இருப்பார் ரோமப் பேரரசுக்கும், பாரசீகப் பேரரசுக்கும் இம்மை, மறுமை சம்பந்தப்பட்ட வாழ்வின் பக்கம் வருமாறு கம்பீரமாய் அழைப்பு விடுத்தார் அவர் நேற்று நடந்தவற்றை சிந்தித்து, இன்றைய செயற்பாடுகள் யாவற்றையும் நாளை வரை பிற்போடாதவர்”


  • அல்லாஹ்வுக்கு எவ்வித இணையுமில்லை
  • அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை அவனே உண்மையாளன் அவன் தவிரந்த அனைத்து கடவுள்களும் பொய்யானவர்கள் அவனே எம்மைப் படைத்தான் எமக்கு உணவளிக்கின்றான் அவனிடம் சரணடைவதற்காக இஸ்லாம் மார்க்கத்தை வழங்கினான் அவனிடமே நாம் உதவி தேடி, எமது பாரங்களை சாட்டிவிட வேண்டும் அவன் எமக்குத் தரும் அனைத்தையும் நாம் மனமாற ஏற்றுக்கொள்ள வேண்டும் அவனைத் தவிர எமக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை, நல்லவற்றை ஏற்படுத்தித் தருவோர் எவரும் இல்லை ஆனால் மனிதன் இவற்றை மறந்து வாழ்கிறான் இவ்வுலகை நிச்சயம் ஒருவன் இயக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் உணர வேண்டும் அவன் அல்லாஹ் தான் என்பதைப் புரிய வேண்டும் அவனையே அஞ்ச வேண்டும்”


  • கட்டுக்கதைகள்
  • முஹம்மத் பதவி ஆசைக்காகவும், சமூகத்தில் சுய பிரபலத்தையும் நாடினார் என அவரை பலர் நினைக்கின்றனர் அவ்வாறல்ல, சத்தியமாக அம்மனிதரின் மனதில் ஒரு துளியேனும் அவ்வாறு தோன்றியிருக்க வாய்ப்பில்லை அவரின் உள்ளம் அன்பு, உதவி மனப்பான்மை, சமூக அக்கறை போன்ற பல சிறந்த நற்பண்புகளால் நிரம்பிக் காணப்பட்டது அவர் எப்போதும் இவ்வுலக பேரின்பகளை அடைந்துகொள்ள முயற்சிகள் மேற்கொண்டதில்லை இத்தகைய மனிதர் எப்படி பிரபல்யத்தை நாடியிருக்க முடியும்”