என்னைப் பற்றி நான் அறிந்ததை விட அல்குர்ஆன் என்னைப் பற்றி அறிவித்துத் தந்தது தான் அதிகம்

என்னைப் பற்றி நான் அறிந்ததை விட அல்குர்ஆன் என்னைப் பற்றி அறிவித்துத் தந்தது தான் அதிகம்

அல்குர்ஆன் என்னை பலமாகக் கவர்ந்துள்ளது என் உள்ளத்தை அது ஆட்கொண்டு, என்னை வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனுக்கு வழிபட வைத்துள்ளது அல்குர்ஆனை ஆழமாக வாசித்தால் தான் ஒருவர் தன்னிடம் பல மாற்றங்களைக் காண முடியும் அதை சாதாரணமாக வாசித்தால் எதையுமே அதிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாது அல்குரஆனை நீ வாசிக்கும் போது அது உன்னை ஆட்கொள்கின்றது உன்னுடன் வாதங்கள் புரிகின்றது உன் சிந்தனையைக் கிளரி விடுகின்றது நீ யார் என்பதைக் கூட தெளிவாக உனக்கு புரியவைக்கின்றது நான் கூட என்னைப் பற்றி அறியாத பல விடயங்களை அல்குர்ஆன் வாயிலாக அறிந்து கொண்டேன் ஒவ்வொரு நாள் இரவிலும் என்னுள் பல கேள்விகள் உதயமாகும் அவற்றிற்கான விடைகளை மறுநாள் காலையிலேயே நான் பெற்றுக்கொள்வேன் அல்குர்ஆன் ஒவ்வொரு பக்கத்தையும் நான் நேருக்கு நேராக சந்தித்து வந்தேன்”