டெபோரா பாட்டர்

quotes:
  • மனிதனை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளமை
  • இஸ்லாமிய மார்க்கம் என்பது அல்லாஹ்வின் சட்டக்கோர்வையாகும் எம்மைச் சூழ உள்ள இயற்கை அம்சங்களில் இதை நாம் கண்டுணர்ந்து கொள்ளலாம் அல்லாஹ்வின் ஏவல் காரணமாகத் தான் மலைகள், கடல்கள், கோல்கள், நட்சத்திரங்கள், இவ்வுலகிலுள்ள அணுக்கள் உட்பட அனைத்தும் ஓர் அமைப்பில் செல்கின்றன இவை அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதனாலேயே இவ்வாறு செயல்படுகின்றன ஆனால் மனிதன் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றான் அல்லாஹ் அவனுக்கு தேர்வுச் சுதந்திரத்தை வழங்கியதன் காரணமாக அவனுக்கு அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு செவிசாய்க்கும் அதே சமயம், அல்லாஹ்வுக்கு வழிபடாமல் தனக்கென ஓர் வழிமுறையை அமைத்துக்கொண்டு அதில் பயணிக்கவும் முடிகின்றது ஆனால் –கவலைக்கிடமான அம்சம்- மனிதன் இரண்டாவது தேர்வையே அதிகமாக தன் வழியாக எடுத்துக்கொள்கிறான்


  • நபித்துவத்தின் அடையாளங்களில் ஒன்று
  • பாலைவனத்தில் எழுதப்படிக்கத் தெரியாமல் பிறந்த ஒருவரால் எப்படி இப்பிரபஞ்சத்தின் அற்புதங்களை அல்குர்ஆன் வாயிலாகக் கூற முடியும் அவற்றில் பலவற்றை இன்றைய அறிவியல் உலகு இன்னமும் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு தான் வருகின்றன நிச்சயமாக இது அல்லாஹ்வின் வார்த்தைகளாகத் தான் இருக்க முடியும்


  • தூய்மையான அடிப்படை
  • இஸ்லாம் என்பது முஹம்மத் புதிதாகக் கொண்டுவந்த மார்க்கம் கிடையாது அவர், ஏசு அவர்கள் வானுலகிற்கு உயர்த்தப்பட்டு 600 வருடங்களின் பின்னர் இவ்வுலகில் தோன்றி, முன்னர் வானுலகிலிருந்து இறக்கப்பட்ட மார்க்கங்களை புதுப்பிக்கும் வகையில் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்தார் அசுத்தமாகிக் கிடந்த சட்டதிட்டங்களைத் தூய்மைப்படுத்தினார் இவருக்கு முன்னர் வந்த அனைத்து நபிமார்களும் முஸ்லிம்களாகவும், ஒரே போதனையையே இவ்வுலகிற்கு பிரச்சாரம் செய்வோராயும் இருந்தனர்”


  • அல்லாஹ்வின் வார்த்தை
  • நான் அல்குர்ஆனை பூரணமாக வாசித்து முடித்த பின்னர் படைப்புக்கள் சம்பந்தமாக எழுகின்ற அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில்களை அதில் கண்டுகொண்டேன் ஏனைய வேதங்களில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளுக்கு முரணாகவும், மாற்றமாகவும் அல்குர்ஆன் மிகவும் துள்ளியமாகவும், நேர்த்தியாகவும் இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகின்றது இது உண்மையான தகவல் தானா என சந்தேகங்கள் எழாத வண்ணம் தெள்ளத் தெளிவாக இவை பற்றி விளக்குகின்றது இது அல்லாஹ்விடமிருந்து வந்த வார்த்தைகள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது”


  • பிரபஞ்சத்தின் அற்புதங்கள்
  • அறீவீனர்களுக்கு மத்தியில் பிறந்து, எழுத வாசிக்க முடியாமல் இருந்த முஹம்மதால் எவ்வாறு இப்பிரபஞ்சத்தின் அற்புதங்கள் பற்றிக் கூற முடியும் தற்போதைய நவீன அறிவியல் கூட அவற்றைத் தான் கண்டுபிடிக்க இன்னும் முயற்சிகள் மேற்கேண்டுள்ள வண்ணமுள்ளன அப்படியென்றால் நிச்சயம் இது அல்லாஹ்வின் வார்த்தைகளாகும்”