ஜாக் ரேஸ்லர்

quotes:
  • “அல்குர்ஆனும், ஹதீஸும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையாகும்”
  • அல்குர்ஆனைத் தான் ஹதீஸும் போதிக்கின்றது அது முஹம்மத் நபியின் சொல், செயல், வழிகாட்டல் போன்றவற்றால் உருவான ஒன்றாகும் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்குமான முழுமையான செயல் வடிவை ஒருவர் ஹதீஸிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் ஹதீஸ் அல்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றது அதற்கு விளக்கமாகவும், அது இல்லாமல் இதுவும் இல்லை என்னும் நிலையிலும் ஹதீஸ் காணப்படுகின்றது”


  • ஹதீஸ்கள் ஒன்றுதிரட்டப்படல்
  • ஹதீஸ்கள் எனப்படுபவை நபி முஹம்மத் கூறியதாக அவரது தோழர்கள், அல்லது முஹம்மதிடமிருந்து கேட்டோரிடமிருந்து நீண்ட அறிவிப்பாளர் தொடருடன் காணப்படும் கூற்றாகும் இது தீவிர ஆய்வின் பின்னர் ஏற்றுக்கொள்ளத்தக்க அம்சமாக கருதப்படும் இவ்வாறு தான் அதிகமான ஹதீஸ்கள் தொகுப்பட்டன”


  • விரிவான நுட்பம் மிக்க சட்டங்கள்
  • அல்குர்ஆனில் அனைத்து விடயங்களும் கூறப்பட்டுள்ளன இது சட்டவிழுமியங்களையும், பண்பாட்டம்சங்களையும் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கின்றது இது தனிமனித, சமுதாய சட்டதிட்டங்களை தெளிவாக விபரிக்கின்றது மனிதர்களிடம் குடிகொண்டுள்ள கரடுமுரடான அம்சங்களை இல்லாதொழிக்கின்றது அவர்களுக்குத் தேவையான நாளாந்த செயற்பாடுகள், வாராந்த செயற்பாடுகள், மாதாந்த செயற்பாடுகள் என ஒவ்வொரு அம்சங்களையும் வகுத்துக்கொடுத்துள்ளது மனைவி மக்கள், பிள்ளை குட்டிகள் போன்றோருடனும், உறவினர்கள், நண்பர்கள் போன்றோருடனும், மனிதனல்லாத ஏனைய ஜீவராசிகளுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்ற அம்சங்களையும் தெளிவாக விளக்கியிருக்கின்றது”