வில் ட்யூரன்ட்

quotes:
  • பெண்ணின் நிலை
  • அரேபிய நாட்டில் பெண்களின் நிலைப்பாடுகளை இஸ்லாம் உயர்த்தி விட்டது பெண் பிள்ளைகளைப் புதைக்கும் பழக்கத்தைத் தடுத்து நிறுத்தியது செல்வம் சம்பந்தப்பட்ட விடயத்தில் ஆண், பெண் இரு பாலாரையும் சமத்துவப்படுத்தியது பெண்ணுக்கு இஸ்லாம் ஆகுமாக்கியிருக்கும் வேலைகளை செய்ய அனுமதி வழங்கியது தன் சொத்துக்களைப் பாதுகாத்திடவும், விரும்பியவாரு செலவு செய்யவும் உரிமையை வழங்கியது ஓர் பெண்ணின் கனவன் மரணித்தால் அவரின் மகனுக்கு அப்பெண் சொந்தமாகும் வழமையை இல்லாதொழித்தது அனந்தரச் சொத்தில் பெண்ணின் பங்கை ஆணின் பங்கில் அரைவாசியாய் ஆக்கியது பெண்களின் அனுமதியின்றி திருமண ஒப்பந்தம் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தியது”


  • முதலில் மார்க்கம் தான்
  • முஸ்லிம்களின் அடிப்படை அம்சங்களாக நற்குணங்களும், அவர்களின் சட்டங்களும், அவர்களின் அரசாங்கமும் திகழ்ந்தது இவை அனைத்தும் அவர்களின் மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தன இஸ்லாம் மார்க்கம் ஏனைய மார்க்கங்களை விட இலகுவானதும், தெளிவானதுமாகும் இதன் அடிப்படை அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை எனவும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் எனவும் சான்று பகர்வதாகும்”


  • அல்குர்ஆனின் அந்தஸ்தும், அதன் சிறப்பும்
  • நூற்றாண்டுகளாக அல்குர்ஆன் முஸ்லிம்களில் உள்ளத்தில் பாதுகாப்புடன் இருக்கின்றது அது அவர்களின் சிந்தனைகளைப் பதப்படுத்தி, நற்குணங்களை உருவாக்குகின்றது பல்லாயிரக்கணக்கான மக்களின் திறமைகளை கூர்மையாக்குகின்றது மக்களின் உள்ளத்தின் இலகுவான கொள்கைகளை நட்டிவிடுகின்றது ஓரிறைக் கோட்பாட்டை நிருவி, பல தெய்வ வழிபாட்டை அவர்களை விட்டும் தூரமாக்கி விடுகின்றது அவர்களுக்கு மத்தியில் சமூக ஒழுங்கு விதிமுறைகளை உருவாக்கி, ஒரே சமூகமாக என்றும் நிலைபெற உதவி செய்கின்றது மூட நம்பிக்கைகள், வீண் சந்தேகங்ள், கல்நெஞ்சத் தனங்கள், அநீதிகள் போன்ற அனைத்தையு அவர்களின் உள்ளத்திலிருந்து கிள்ளியெறிந்து விடுகின்றது முஸ்லிம்களின் உள்ளத்தில் பணிவையும், கண்ணியத்தையும் விதைக்கின்றது”


  • சிறந்த மனிதர்கள்
  • நிச்சயமாக முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை விட உயர்ந்தவர்கள், தமது வாழ்நாளை பொக்கிஷமாக பாதுகாப்பவர்கள் அவர்களில் அதிகமானவர்கள் தமக்குக் கீழால் உள்ளவர்களோடு இரக்கமாக நடந்து கொள்கின்றனர் வரலாறுகளில் அவர்கள் செய்த கொடுரங்கள் விரல் விடு எண்ணும் அளவே இருக்கின்றன ஆனால் கிறிஸ்தவர்கள் கிபி 1099 ஆம் ஆண்டு பைத்துல் மக்திஸை ஆக்கிரமிக்கும் போது காட்டுமிராண்டித்தனமாக நடந்து, தமது பெயரை வரலாற்றில் கொடியவர்கள் எனப் பதிந்துவிட்டனர்”