முஹம்மதுக்கு தனது தூதுத்துவத்தின் மீதான உறுதி

முஹம்மதுக்கு தனது தூதுத்துவத்தின் மீதான உறுதி

சாதாரண மனிதரிடம் இருந்து தனக்கு வழிபடுமாறு சென்ற கடிதங்களைக் கண்டதும் அன்றைய அரசர்களுக்கு நிச்சயம் போதையேறி இருக்கும் என்றாலும் இப்படி அவர் அனுப்பி வைத்த கடிதங்கள் மூலம், அவரின் தைரியத்தையும், தன் மீதும், தனது தூதுத்துவத்தின் மீதும் அவர் கொண்டிருந்த உறுதியை எம்மால் உணர் முடிகின்றது இத்தகைய தைரியத்தையும், உறுதியையும் தான் அவரது சமூகம் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டது பாலை வனத்தில் வாழ்ந்து வந்தவர்கள் துணிவுள்ளவர்களாய் மாறி பல பிரதேசங்களை வெற்றி கொண்டு, தலைமைப் பொறுப்பை தமதாக்கிக் கொண்டனர் பிரிந்து கிடந்த சமூகத்தை ஒற்றுமைப் படுத்தி, ஒன்றுபடுத்தியதன் பின் தான் முஹம்மத் மரணித்தார்”