நற்குணங்களின் மார்க்கம்

நற்குணங்களின் மார்க்கம்

அல்குர்ஆனில் அல்லாஹ்வின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற பொருளில் அமையாத எவ் வசனத்தையேனும் கண்டுகொள்ள முடியாது அதில் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றுவோருக்குக் கிடைக்கும் சிறப்புக்கள், உணர்வுகளைப் பரிமாறிக்கொள்வதற்கான அழைப்பு, நல்லெண்ணங்கள் பக்கம் தூண்டுதல், கோபம், பொறாமை போன்றவற்றை அப்புறப்படுத்தல் போன்ற அனைத்தும் கூறப்பட்டுள்ளன சிந்தனைகளும், பார்வைகளும் சில வேளைகளில் பாவமாக மாறலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது அனைவருடனும் எவ்வித வேறுபாடுகளுமின்றி, சமத்தவமாகவும், சந்தோசமாகவும் வாழ வழிகோலியுள்ளது நற்பண்புகளை அடுக்கடுக்காகக் கூறியுள்ள இப் புனித அல்குர்ஆன் அனைத்தும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது”