ஸ்டான்லி லேன் போன்

quotes:
  • பள்ளிவாயல் பல்கலைக்கழகம்
  • அக்காலத்தில் பள்ளிவாயில்கள் பல்கலைக்கழகங்களாகத் திகழ்ந்தன அறிவுத் தாகம் உள்ளவர்களால் பள்ளிவாயல் நிரம்பி வழியும் இஸ்லாமிய கற்கை நெறி, தத்துவம், வைத்தியம், கணிதம் போன்ற பல வகையான துறைகள் பள்ளிவாயில்களில் பாடங்களாகப் போதிக்கப்பட்டன உலகின் பல பாகங்களிலிருந்தும் பலர் வந்து இக்கல்விகளைக் கற்றுச் சென்றார்கள் அங்கு யாருக்கு மத்தியிலும் இன வேற்றுமைகளோ, பிரதேச வேறுபாடுகளோ காணப்படவில்லை”


  • கலாச்சார உணர்வு
  • நகரமயமாக்கல் வரலாற்றில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டது மிகவும் குறைவு ஆனால் முஸ்லிம்களிடம் இது மிகவும் விரைவாகப் பரவி, அவர்களை, இஸ்லாமிய கலாச்சாரத்தை இப்புவியில் நிலைநாட்ட வலிகோலியது கவர்னர் முதல் தொழிலாளி வரை அனைத்து முஸ்லிம்களும் கல்வித்தாகம் கொண்டவர்களாக இருந்தார்கள் பலர் தம் நாட்டை விட்டும் தூரப் பிரதேசங்களுக்குச் சென்று கல்வியைத் தேடலானார்கள் அந்நேரம் அறிவின் சிகரமாக பக்தாத் காணப்பட்டது அதன் பின் பல இடங்களில் பல கல்வி மையங்கள் எழுச்சி பெறவே பல்கலைக்கழகங்களும் உருவாகின ஐரோப்பியர்கள் கூட முஸ்லிம்களிடம் வந்து நவீன அறிவியலைக் கற்றுச் சென்றார்கள் இவ்வாறு முஸ்லிம்களின் கலாச்சாரம் புவியெங்கும் பரவ ஆரம்பித்தது”