மனிதன் நிராகரிக்கப்பட்டால் ...

 மனிதன் நிராகரிக்கப்பட்டால் ...

மனிதன் நிராகரிக்கப்பட்டால் ...

மனிதன் நிராகரிக்கப்பட்டால் ...

ரஜீவும் ,றாஷிதும் மைக்கலை முந்தி கொன்டு கேட்போர் கூடத்திற்கு சென்று உரையாட ஆரம்பித்தனர்.

றஜீவ்: எனக்கு ஒரு விடயத்தை பற்றி பேசவும், அது தொடர்பான இஸ்லாமிய கண்ணேட்டத்தை அறியவும் ஆவலாகவுள்ளேன். ஏனென்றால் அவை இரன்டிற்குமிடையில் நெருங்கிய தொடர்புள்ளன.

றாஷித்: (புன்முறுவலோடு) தயவுசெய்து .

றஜீவ்: இந்தியாவில் ஹர்ஜன் என்ற (பிரம்மனின் மக்கள் அழைக்கப்படும்) கீழ்சாதிப்பிரிவினர் வசிக்கின்றனர். இந்தியாவில் வரலாற்று புகழ்மிக்க தலைவர் மகாத்மா காந்தியே அவர்களுக்கு அப்பெயரை சூட்டினார் கி.பி.1949 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் கீழ்சாதியினர் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுவதை சட்ட ரீதியாத தடுத்துநிருந்தாலும் இந்தியாவில் இன்னும் சில இடங்களில் சாதிபிரிவினைவாதம் இருந்து கொன்டுதான் இருக்கிறது.

றசஷீத்: அதில் என்ன பிரச்சினை?

ரஜீவ்: ஒரு பிரச்சினையுமில்லை, ஆனால் அவ்வார்த்தை மணித உரிமை மீறலை பிரதிபலிக்கிறது என்பதை நினைத்தால் சோகமாக இருக்கிறது.

அந்த நேரத்தில் மைக்கல் நன்பர் இருவரிடமும் வந்தனத்தை தெரிவித்தவராக வந்து சேர்ந்தார்.

றாஷித்: ஆ.. மைக்கல் வாருங்கள் சொற்ப நேரத்திற்கு முன்னரே றஜீப் ஒரு விடயத்தை பேச ஆரம்பித்தார். அவர் உரையாற்றும் போது அதை உங்களுக்கும் அறிந்து கொல்ளலாம். ரஜீவ் தயவு செய்து.

ரஜீவ்: இந்து வேதத்திலுள்ள சாதிபிரிவினை பற்றி கூறிகொன்டிருந்தேன். அதில் அதியுயர் சாதியாக பிரம்மர்கள் கருதபடுகின்றனர். இந்துக்களின் கோட்பாட்டின் அடிப்படையில் அவர்கள் பிரம்மனின் வாயினால் அல்லது நெற்றியினால் படைக்கபட்டவர்கள். சோதிடர்கள், நீதிபதிகள் மதகுருமார்கள், ஆசான்கள் என சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்துடையவர்களாக காணப்பட்டனர். இவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்களாக சத்திரியர்கள் காணப்பட்டனர். அவர்களின் கோட்பாட்டின் படி அவர்கள் இறைவனின் மார்பினால் படைக்கப்பட்டவர்கள். மந்திரி சபையினராகவும், போர்வீரர்களாகவும் திகழ்ந்தனர்.. இவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள வைசியர்கள் பிரம்மனின் தொடையினால் படைக்க பட்டவர்கள், வியாபாரம் ,விவசாயம் ,வணக்கஸ்தலங்களில் பணிபுரிவோர் போன்ற சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் இவர்களை அடுத்துள்ள சமூக கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் சூத்திரர்கள் பிராமனின் இரு பாதங்களிலிருந்து படைக்கபட்டவர்கள் சமூகத்தில் கீழ் சாதியினர் என அழைக்கபட்டவர்கள் மேற்குறிபிட்ட உயர்சாதியினர் மூவருக்கும் பணிவிடை செய்வதே இவர்களின் தொழிலாகும் சமூகத்தில் மிக கேவலமான தொழில்களை புரிபவர்கள்.

றாஷித்:ம் நீங்கள் எதை நாடுகிறீர்கள் என புரிகிறது.

ரஜீவ்: மன்னிக்கவும் அதன் பிறகு எனக்கு தெரியாது.

மைக்கல்:இது என்ன அநியாயம் இப்பிரிவினைவாதம் இன்றும் உள்ளது.

ரஜீவ்: ஆம் கீழ்சாதி ,உயர்சாதி என்ற பிரிவினைவாதம் இந்தியாவில் குறிப்பாக கிராமபுரங்களில் இன்றும் தொடர்ந்திருக்கிறது சமுதாயத்தில் மனிதர்களாகவே கணக்கெடுக்கப்படுவதில்லை கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்து மத சட்டங்கள் சூத்திறர்களை முற்றுமுழுவதாக இழிவாகவே கருதுதின எந்தளவுக்கெனில் சூத்திர வம்சத்தை சேர்ந்த ஒருவனுக்கு யார் இந்து மத அணுஸ்டானங்களை கற்றுகொடுக்கிறாரோ அவரும் அவர்களுடன் நரகில் நுளைவார் என நம்பபட்டது அவர்கள் கிராம புறங்களின் ஒதுக்கு புறங்களிலேயே வசிக்கவேண்டும் உடைந்த பாத்திரங்களையோ பாவிக்க வேண்டும் கழுதை ,நாய் முதலியவற்றை தவிர வேறொன்றையிம் அவர்கள் உடமையாக்கிகொள்ள முடியாது இறந்தவர்களின் ஆடையை மட்டுமே அணியவேண்டும் எப்பொழுதும் பாதணியற்றவர்களாகவே செல்ல வேண்டும் அவர்களின் பெண்கள் இரும்பு ஆபரணத்தையே அணிய வேண்டும் தங்கம் வொள்ளி தடை செய்யபட்டவை சூத்திரர்கள் சூத்திரர்களையே திருமனம் செய்யவேண்டும் என்றெல்லாம் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அது மட்டு மன்றி அவர்களிள் யாராவதொருவர் மத அனுஸ்டானங்களிள் தலையிடவோ அல்லது அதை பற்றி பேசினாலோ கொதிக்கும் என்னையை அவர் முகத்தில் ஊற்றப்படும் எனவும் அச்சட்டதில் குறிப்பிடபட்டுள்ளது அதையிம் தாண்டி கிராம புரங்களில் காணப்படும் சோக நிலை என்னவென்றால் சூத்திரர்கள் காலை ஆறு மனிக்கு முன்னரும் மாலை ஆறு மனிக்கு பின்னரும் வீட்டை விட்டு வெளியேற முடியாது தடையெய்யபட்டுள்ளனர் ஏனெனில் அவர்களின் நிழல் அந்நேரங்களில் மிகவும் நீள மாவதாக என்னுகின்றனர் பிரம்மர்கள் அவர்களின் நிழல் படுவதை அழுக்காக கருதுவதால் குளித்து அவ்வழுக்கிழுருந்து சுத்தமாகும் வரை எந்த உணவும் உண்ண மாட்டார்கள் எந்தவொரு பானத்தையிம் அருந்தமாட்டார்கள் .

மைக்கல்:என்னால் நம்பவே முடியவில்லை இக்காலத்தில் அவ்வாறு இருக்கிறதா இந்திய சனத்தொகையில் அவர்கள் எத்தனை வீதம் .

ரஜீவ்: முழு இந்திய சனத்தொகையில் 45 வீமானவர்கள் கீழ்சாதியினர் சூத்திரர்கள் இந்துக்களிள் அவர்கள் 80 வீதமானவர்களாகவும் ஏனைய மூன்று சாதியினர் வெறுமனே 11 வீதம் சதவீதத்திணர்களாக திகழ்கின்றனர்.

ராஷீத்: சென்ற நூற்றாண்டு நாற்பது காலப்குதியில் கீழ் சாதியினர் என்ற வார்தை பிரயோகத்தை இந்திய அரசாங்கம் தடைசெய்தது என்று கூறினீர்கள் அவ்வாறாயின் அவர்களை இவ்வாறு வழிநடாத்துவதையும் சட்ட ரீதியாக தடை செய்திருக்க வேண்டும் .

ரஜீவ்: ஆம் நீங்கள் கூறியது சரி ஆனால் பிரச்சினை தூயசாதி தீண்டத்தகாத சாதி என்ற பிரிவினைவாத கொள்கையில்தான் மறைந்திருக்கிறது ஏனெனில் இக்கோட்பாடு இந்து மத அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது இந்து அல்லாதவர்களையிம் உயர்சாதிபிரிவினர்களண பிரம்மர்கள் ,சத்திரியர்கள் ஆகியோர்களையிம் தீண்டத்தகாதவர்களாக கருதுகின்றனர்.

ராஷித்:இப்பிரிவினைவாதம் மனிதாபிமானத்திற்கு முற்றிலும் எதிரானவொன்று ஆனால் இதற்கும் இஸ்லாமிய கண்ணோட்டத்திற்கும் இடையில் என்ன தொடர்பிருக்கிறது.

ரஜீவ்: கீழ் சாதியினர் பெரும்பாலானோர் குறிப்பாக நான் ஏலவெ கூறிய தடைச்சட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்னர் இநிதியாவில் எத்தனையோ மதங்கள் இருக்க இஸ்லாத்தை நோக்கிசென்றார்கள் கிரிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதை கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கான எவ்வளவோ முயற்சிகள் மேற்கொன்ட போதும் ஏன் இஸ்லாத்தை நோக்கி விரைந்தார்கள்.

ராஷித்:ரஜீவ் சிலவேளை அவர்கள் இஸ்லாத்தில் ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை கண்டிருப்பார்கள் இஸ்லாத்தின் உன்மை தண்மை ஒரு மனிதன் என்றடிப்படையில் அவனுக்கு அதில் வழங்கப்பட்ட உரிமைகள் சிரியவர் பெரியவர் பணக்காரர் ஏழை என்ற பாகுபாடின்றி ஒரு மனிதனுக்கு வழங்கபட்டிருக்கும் சுதந்திரங்கள் முதலியவற்றை அறிந்திருப்பாராயின் நிச்சயமாக இஸ்லாத்தில் நுழைய வாய்ப்பிறுக்கிறது முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ்வதனூடாக இவற்றை அறிந்து கொள்ளலாம்.

மைக்கல்:இஸ்லாத்தில் மனித உரிமைகளை பற்றி எங்களுக்கு விளக்கபடுத்த பார்க்கிறீர்கள் உரிமைகளும சுதந்திரங்களும் மதங்களால் வழங்கபடவில்லை மாறாக மேற்கத்தய சிந்தனையாளர்களாலும், தத்துவநானிகளின் வழிகாட்டல்களாலும் அநியாயத்திற்கெதிறான நீண்ட நாள் போராட்டத்தின் விளைவால் மக்கள் தாங்களாகவே பெற்றுகொன்டனர் இந்த உண்மைகள் எல்லாம் இஸலாத்தில் எங்கே இருக்கிறது இஸ்லாத்தைவிட்டும் மதம் மாறும் உரிமை இருக்கிறதா இஸ்லாத்தில் கொள்கை சுதந்திரம் எங்கே இருக்கிறது கருத்து சுதந்திரம் எங்கே இருக்கிறது பெண்ணுரிமை எங்கே பேணப்டுகிறது மார்க்கத்தில் உள்ள உங்களின் உறுதியான நம்பிக்கையை மறைக்க முடியாது.

ராஷித்:நண்பரே மனித உரிமைக்கு முன்னுதாரணம் மேற்கத்தயமே என்ற தொனியிலல்லவா பேசுகிறீர்கள் நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் எத்தனையோ சிந்தனையாளர்களும் வரலாற்றாசிரியர்களும் எழுத்தாளர்களும் தங்களின் கருத்தை தொரிவித்தால் சட்டத்தால் தண்டிக்கபடுவார்களே அதற்கென்ன கூறுகிறீர்கள் இது மட்டுமென்ன ஆய்வு சுதந்திரமா ,கருத்து சுதந்திரம் முதலியவற்றுக்கு எதிரானதில்லையா ,பிரித்தானியாவின் குடியடிரசு கட்சியில் அல்லது ஜெர்மனியின் நாசிச கட்சியில் ஒருவர் தன்னுடைய சுதந்திரங்களை பெற்றுகொள்ள முடியுமா ஏன் நான் ஒரு முஸ்லீமாக இருந்து கொன்டே என்னுடைய மதம் அணுமதியளித்திருக்க இங்கிலாந்தில் சட்டரீதியாக இரண்டாம் திருமணம் செய்ய முடியிமா அரசாங்கம் என்னுடைய தனிப்பட்ட உரிமைகளில் தலையிடுகிறது.

மைக்கல்: இந்த சுதந்திரம் உரிமைகளெல்லாம் அடிப்படையில் மனித உரிமைகளுக்கு முரணானவை, நாம் அணைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. உங்கள் இரண்டாம் திருமணம் பற்றி விபரம் கொள்கை சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டது மனித உணர்வுகளுக்கு முரணானது நீங்கள் வாழக்கூடிய சமூகமுமோ ,சட்டமோ அதை அனுமதிக்காது அது மட்டுமன்றி அதிலே தணிநபர் உரிமை மீறபடுகின்றன ஆனால் அதே நேரம் நீங்கள் பெண்களோடு உரவாட நாடினால் திருமனமல்லாத முறையில் அதை நிறைவெற்றலாம் .

ராஷித்:ம் பிரமாதம் அப்படியென்றால் நான் அநியாயம் உரிமை மீறல் என நினைப்பதை நீங்கள் நியாயம் என்கிறீர்கள் இந்து உயர்குலத்தவர்கள் எங்கள் அனைவரையிம் கீழ்த்தரமாகவே கருதுகின்றனர் என ரஜீவ் கூறினார் அவர்கள் அதை பிறர் உன்மைகளுக்கும் ,சுதந்திரத்துக்கும் எதிராணது என நினைக்கிறீர்களா நிச்சயமாக இல்லை.

ரஜீவ்: அவர்கள் இந்து உ.யர்குலத்தினர் செய்வது சரியா.

ராஷித்: பொதுவாக நோக்கினால் அப்படித்தான் தோன்றும் ஆனால் நான் நாடியது அதுவல்ல மாறாக சுதந்திரம் மற்றும் உரிமைகளை அவற்றை அறிமுகபடுத்திய கலாச்சார ஒழுங்கு முறையை விட்டோ அல்லது அவற்றை அமுல்படுத்தும் பொதுச்சட்ட முறையினை விட்டோ பிரித்து விட முடியாது எனவே இவ்வுரிமைகள் சுதந்திரத்தை பற்றி நாம் அறிய நாடினால் அவை அமைக்கபட்டுள்ள கொள்கைகள் கோட்பாடுகளையோ ஆராயவேண்டும்,அவற்றின்பயன்பாடுகளையல்ல இந்தடிப்படையில் நாம் உடன்படுவோமாயின் இஸ்லாமிய கண்ணோட்டதிற்கும் மேற்கத்தய கோட்பாட்டிற்கும் தெளிவான வேறுபாடு இருப்பதை காணலாம் இவ்வேறுபாடுகள் மனிதன் பிரபஞ்சம் ,வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்திணூடாக மனிதன் என்றால் யார்? உரிமைகள் என்றால் என்ன? சுதந்திரம் என்பதன் அர்த்தம் என்ன? முதலியன மனித கண்ணோட்ட வித்தியாசத்தின் விளைவால் ஏற்பட்டவை இதே விடயம் தான் எனக்கும் எனது நண்பர் மைக்கலுக்கும் இடையில் மார்க்கம் சகோதரத்துவம் ,சமத்துவம் முதலியவற்றுக்கான வியாக்கியானம் வழங்குவதில் ஏற்பட்டது ஏனெனில் இவை தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டம் மேற்கத்தய சிந்நணையை விட்டும் வேறுபட்டது.

இஸ்லாத்திலுள்ள மனித உரிமைகளை பற்றிய கருத்தை நோக்கினால் ஒரு சமூகம் பின்பற்ற வேண்டிய அத்தியவசியமானவை என கண்டு கொள்ளலாம் இஸ்லாம் அதன் சட்ட ஒழுங்கு முறையோடு சேர்ந்த நற்குணம் மற்றும் நலன் போன்றவற்றை அடிப்படையாக வைத்தே உரிமைகளை வரையறுத்துள்ளது அது மட்டு மன்றி இஸ்லாத்திலுள்ள உரிமைகள் மனிதனோடு சுருக்கி கொள்ளபடாமல் மிருகங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மைக்கல்:உங்களுடைய மார்க்கத்தில் விலங்குகளுக்கென உரிமையும் உண்டு என்பதை நான் நினைத்து கூட பாரக்கவில்லை.

ராஷித்:விலங்குகளால் தீங்கு ஏற்படும்மென பயந்தாலே தவிர வெறுமனே பொழுது போக்கிற்காகவும் கேளிக்கைகளுக்காகவும் அவற்றை கொள்வதை இஸலாம் தடை செய்துள்ளது அவற்றில் சிலவற்றை உணவுக்காக இல்லாமல் வீணாக அறுக்கப்படுவதை இஸலாம் தடைசெய்துள்ளது அவ்வாறு அறுக்கும் போது ஒரு முஸ்லிம் இஸ்லாம் காட்டிதந்த வழிமுறையில் இறைவனின் அனுமதியுடன் அவன் பெயர் கூறி அறுக்க வேண்டுமென கட்டாயபடுத்தியுள்ளது இறை வழிகாட்டலின்றி ஒருவர் இன்னொருவருக்காக ஒரு விலங்கை அறுக்கும் போது காணமுடியாத, அவ்விலங்கின் உள்ளுணர்வுகளுடன் தொடர்புபட்ட ஒழுங்கு முறைகளை இஸ்லாமிய அறுப்பு முறையில் காணலாம் குறிப்பிட்ட விலங்கின் முன்னால் கத்தியை தீட்டகூடாது அதற்கு முன்னால் வேறொன்றை அறுக்க கூடாது என்பன சிறந்த உதாரணங்களாகும் ஒரு விலங்கிற்கு இவ்வளவு உரிமையை வழங்கும் மாரக்கம் மனிதன் விடயத்தில் குறைசெய்து விடுமென நினைக்கிறீர்களா.

ரஜீவ்: ஹ்ம் அடுத்த சந்திப்பில் இது தொடர்பான மேலதிக விளக்கங்களை அறிய ஆவலாக உள்ளேன்.




Tags: