மனித சமுதாயத்தில் முஸ்லீம்களின் ஒளிக்கீற்றுகள்

 மனித சமுதாயத்தில் முஸ்லீம்களின் ஒளிக்கீற்றுகள்

மனித சமுதாயத்தில் முஸ்லீம்களின் ஒளிக்கீற்றுகள்

மனித சமுதாயத்தில் முஸ்லீம்களின் ஒளிக்கீற்றுகள்

நண்பர்கள் மூவரும் வநதனங்களை ஒருவருக்கொருவர் தெரிவித்த பின்னர், மைக்கல் பேச்சை துவங்க ஆவலாக இருப்பதை றாஷிதும் ராஜீவும் அவதானித்தனர். உடனே றாஷித் மைக்கலை நோக்கி பரிகாசமாக.

ஹா.. என்ன மைக்கல் இன்று ஒரு அம்பை தயார் செய்து வைத்திருக்கிறீகள்போல் தெரிகிறது. பாதுபாப்புக்காக ஒரு திரையை போட்டுகொள்ள முயற்சிக்கிறேன்.

மைக்கல்: இல்லை இல்லை, சற்று பொருங்கள். இந்த தடவை நீங்கள் திரைக்கு பின்னாலிருந்தே எவ்வித பயமுமின்றி எதிகொள்ளலாம் உண்மையிலே சென்ற கலந்துரையாடல் என்னை ஒரு கலாச்சார ஆய்வை நோக்கியும், மனித முன்னேற்றத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பை பற்றியும் அறிந்துகொள்ள தூண்டியது “ஆயிரத்தோர் கண்டுபிடிப்புகளும், இரகசிய நூல்களும்” என்ற 13 நிமிடங்களை கொன்ட திரைபடத்தை பெற்றுகொன்டேன். பார்ப்பதற்கு மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது. மனிதனின் விஞ்ஞான முன்னேற்றத்தில் இஸ்லாமிய நாகரீகத்தின் பங்களிப்பை படம்பிடித்து காட்டுகிறது அது மட்டுமன்றி இத்திரைபடம் இருபதுக்கும் மேற்பட்ட உலகலாவிய ரீதியிலான பரிசில்களை பெற்றது.

கல்வி சுற்றுலாவொன்றில் ஒரு நூலகத்தை பார்வையிட வந்த சிறார்களுக்கு நூலக பொருப்பாளர் வழிகாட்டுவதை போன்ற ஒரு திரைப்படம். நூலக பொருப்பாளரின் உதவியுடன் இருள் சூழ்ந்த பகுதியைபற்றி .cirebon kingsley -என்ற கதைபுத்தகத்தை கண்டெடுக்கின்றனர். அதில் ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் பதினேழாம் நூற்றாண்டு வரையுள்ள அறிவியல் புரட்சி காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் அல்ஜூஸ்ரியைப்பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

றாஷித்: திரைபடத்தின் சுருக்கமென்ன? எதைநோக்காக கொன்டிருக்கிறது?.

மைக்கல்: ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புராதன காரனி இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட அறிவியல், கலாச்சார முன்னேற்றமே என்பதை அத்திரைக்கதை நிரூபிக்கிறது. அத்தோடு இதுவொரு மறக்கடிக்கப் பட்ட வரலாற்று உன்மை என்பதையும் உணர்த்துகிறது

ரஜிவ்: மைக்கல் நீங்கள் சொல்வதைக் கேட்டால், அதைபற்றி மேலும் அறிந்து கொள்ள ஆசையாக உள்ளது..

மைக்கல்: இது தொடர்பாக பல தகவல்கள் உள்ளன அவற்றில் சிலதை கூறுகிறேன்: இரசாயன வியலாளரும், பொறியியலாளரும் வரலாற்றில் மிகப்பெரும் விஞ்ஞானியுமான அல் ஜூஸ்ரி blephantautech என அழைக்கபடும் மிகப்பெரும் கடிகாரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர். அது மட்டுமன்றி நாம் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய வீட்டு உபகரணங்களில் அதிகாமானபற்றை கண்டுபிடித்தவர் அவரே. மேலும் அவரால் கண்டுபிடிக்கபட்ட இலத்திரணியல் கருவிகள், நீர்வழி விவசாய உலகில் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தலாம் என்பதை தெளிவு படுத்துகிறது. .ஸ்பைனை சேர்ந்த வைத்தியர் ஸஹ்ராவி நூற்றுக்கணக்கான அறிவியல் கருவிகளை உலகிக்கு அறிமுகப்படுத்தினார். அக்கருவிகள் இன்றளவும் நவீன வைத்திய சாலைகளில் பயண்படுத்தபட்டு வருகின்றன. இவ்வாறே ஹஸன் இப்னு ஹைஸம் கண் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கண்டுபிடித்தார். படப்பிடிப்பு, புகைப்படம் முதலிய வற்றூடாக அவர் கண்டுபிடித்த அடிப்படைகளை பற்றி அறிந்துகொள்ள நாம் இன்று பார்க்கூடிய திரைப்படங்கள் சிறந்த உதாரணமாகும்.

ரஜீவ்: நண்பர் மைக்கல் பெருமதியான தகவல்களை தந்தீர்கள். என்றாலும் இவ்விடயத்தில் நீங்கள் மட்டுமல்ல நானும் பல ஆய்வுகளை மேற்கொன்டேன். sigrid hunke என்ற ஜேர்மனிய பெண்னெழுத்தாளர் ஒருவருடைய மேற்கில் உதிக்கும் சூரியன் என்ற புத்தகத்தை படித்தேன்.

மைக்கல்:அதில் புதிதாக என்ன இருந்தது.

ரஜிவ்: ம்ம்.. நான் எதிர்பார்க்காத பல விடயங்களை அறிந்து கொண்டேன். உங்களுக்கொன்று தெரியிமா ஐரோப்பிய மோழிகளில் உள்ள அதிகமான சொற்கள் அரபு மொழியில் இருந்து மருவி வந்தவை.

மைக்கல்:ஆ.. அப்படியா?! ஆச்சரியமாக இருக்கிறதே. நீங்கள் கூறுவது உண்மையா?.

ரஜீவ்: ஆம் உன்மைதான், நான் பரிகசிக்கவில்லை. உதாரணமாக Coffee என்ற ஆங்கில பதத்தை எடுத்து கொள்ளுங்கள். இச்சொல்லுற்பட இப்பதத்தை குறிக்கும் ஏனைய ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் “கஹ்வா” (ةقهو)என்ற அரபு பதத்திலிந்து எடுக்க பட்டவை. அவ்வாறே ஆங்கிலத்தின் Rice என்ற சொல் அரபுமொழியில் உர்ஸ் حأرز என்ற பதத்திலிந்தும் SOFA என்ற சொல் ஸூப்பா என்ற பதத்திலிந்து எடுக்க பட்டவை. இதுமட்டுமன்றி “அல்கொஹோல்” அறிவியல் தொடர்பான சொற்களில் அதிகமானவை அரபு மொழியில்லிருந்து மறுவிவந்தவையே.

எனக்கு தெரியாத எத்தனையோ உன்மைகளை அப்புத்தகம் அறியப் படுத்துகிறது. நூலாசிரியர் மிகச்சுருக்கமாக குறிப்பிடுவது யாதென்றால் ((ஐரோப்பா அரேபியர்களையும் அவர்களுடைய நாகரீகத்தையிம் பின்பற்றுகிறது. ஐரோப்பியர்களும் ஏனைய கண்டங்களில் இருப்போரும் அரேபியர்களுக்கு செய்யவேன்டிய கைமாறு என்னிடங்காதவை. இதை ஐரோப்பா எப்பொழுதும் ஏற்றிருக்க வேண்டும். ஆனால் பிடிவாதமும், கொள்கை பிளவுகளும், திரையிட்டு எங்கள் கண்களை குருடாக்கிவிட்டன.))

றாஷித்:நீங்கள் இவ்வளவு காலமும் அறியாத உன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ள நானும் ஆவலாக உள்ளேன்.

ரஜீவ்: அவற்றில் இன்னும் சில வற்றை கூறுகிறேன்; குருதிச்சுற்றோட்டம் தொடர்பாக கலனின் தவறான கருத்துகளை முதலில் சுட்டிகாட்டி அதை சரியான வடிவில் அறிமுகபடுத்தியவர் யார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அவர் ஸ்பைனை சேர்ந்த சொர்விடஸ்ஸோ, இங்கிலாந்தை சேர்ந்த ஹார்வியொ அல்ல மாறாக கி.பி.13 ஆம் நூற்றான்டில் வாழ்ந்த அரேபியர். அவர்தான் மனித வரலாற்றில் வைத்திய துறை இவ்வளவு முன்னேர காரனமாக இருந்த இப்னு நபீஸ் ஆவார். செர்விடஸ் ,ஹார்வி ஆகியோருக்கு பல நூற்றான்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் “கண்களே ஒளிர்கதிர்களை விம்பங்களில் செலுத்தி அதை பார்க்க செய்கின்றன“ என்ற இக்லிட் ,தொளமி போன்றோருடைய இக்கருத்தை தவறென சுட்டிக்காட்டி சரியானதை உலகிட்கு அறிமுகப்படுத்தியவர் இப்னு கைசம் என்ற அரபு முஸ்லிம் விஞ்ஞானி என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இப்னு கைசம் விம்பங்களை பார்க்கசெய்வதற்கான ஒளிக்கதிர்கள் கண்களில் இல்லை. ,மாறாக (பொருட்கள்).

விம்பங்களில் பிரதிபலிக்க செய்கின்றன என்ற விஞ்ஞான உண்மையை உலகுக்கு அறிமுக ப்படுத்தியவர். அவ்வாறே புவி தன்னைதானே சுற்றிகொன்டு சூரியனையிம் சுற்றிவருகிறது என்ற விஞ்ஞான உண்மையை முதன் முதலில் உலகிக்கு அறிமுகப்படுத்தியவர் கொபர் நிகஸ் அல்ல மாறாக அல் பூரூனி என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வரலாற்றில் இதுவரைகாலமும் தோன்றிய வைத்தியர்களில் மிகப்பெரும் வைத்தியர் அர்ராஸி என்ற முஸ்லிம் அரேபியரென கீழைத்தேயம் கூறுகிறது. தட்டம்மை பெரிய்யம்மை தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை குடல்நோய் சம்பந்தமான உண்மைகளை உலகுக்கு அரிமுகபடுத்திய முதல் வைத்தியக் குறிப்பாகும். மருத்துவ பகுப்பாய்வில் தனித்துவமான இடத்தையும் பெற்றுகொன்டது. கி.பி.1866 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஆங்கில மொழியில் மாத்திரம் நாற்பது பதிப்புகள் வெளியாகி ஐரோப்பாவில் பிரபல்யம்மடைந்தது. ஐரோப்பா அறியாமை இருளில் மூழ்கி இருந்த காலத்தில் அரேபியர் நவீன கண்டுபிடிப்புகளில் நன்றாக முன்னேறி, மயக்க மறுந்தேற்றி சிகிச்சை செய்யும் முறையையும் அறிந்திருந்தனர் என வரலாறு சான்று பகர்கிறது. இவ்வறு பல உரையாடல்கள் உள்ளன. அனைத்தையும் ஒரு உரையாடலில் கூறவிட முடியாது .

றாஷித்: வரலாற்று உண்மைகளை சரியாக அறியாதவர்கள் மற்றும் அறிவியல் பரிசோதனைகளில் முஸ்லீம்களின் மற்றும் அரேபியர்களின் பங்களிப்பை மறுப்பவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுத்தீர்கள். பரிசோதனை முறையை (experimental method) உலகுக்கு அறிமுக ப்படுத்தியவர்கள் முஸ்லீம்களே. இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் சிலரின் வார்த்தைகளைக் கூறுகிறேன் :

ப்ரான்ஸிய கீழைத்தேயவாதி claude gahen குறிப்பிடுகையில் ((இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து கலத்தில் யூனானியர்களை விட பலம் குன்றியவர்களாக இருப்பினும் பரிசோதனை கலத்தில் முஸ்லீம்களே பலம் வாய்ந்தவர்களாக கருதப்பட்டனர். அறிவியலில் பரிசோதனையின் முக்கியத்துவத்தை விஞ்ஞான முன்னேற்றம் தெழிவு படுத்துகிறது அரேபியர் அடைந்த இவ்வறிவியல் முன்னேற்றம் தொடர்ந்திருப்தற்கான காரணம் அவர்கள் அன்றாட வாழ்வில் அவற்றை அமுல்படுத்தியதே.)) விஞ்ஞான முன்னேற்றம் எவ்வாறு தொடந்தியங்கும் என்பது தொடர்பாண சிறந்த விளக்கத்தை மிகப்பெரும் அறிஞரான அற்றாஸி விளக்கிகிருந்தார். மத்திய கால அறிஞர்களில் பெரும்பாளானோர் அதை விசித்திரமாகவே நோக்குகின்றனர். இத்தாலிய ஆய்வாளர் - laura vichea vaglevi- சில வினாக்களை தொடுக்கிறார் ((பரிசோதனை வழிமுறை அவசியமென பேகன் கூறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அரேபியர்கள் அதில் ஈடுபாடு காட்டினர். இரசாயனம், அபிவிருத்தி ,வானியல் ,கிரேக்க அறிவியல் பரவலாக்கம் ,வைத்திய துறை வலுவாக்கம் ,இயற்பியல் விதிகளின் கண்டுபிடிப்பு முதலியன அரேபியர்களின் முதுமொழியல்லவா.)) அமெரிக்க வரலாற்றாசிரியரும் தத்துவஞானியுமான பட்டுரன்ட் குறிப்பிடுகையில் ((இரசாயன முறையில் அரேபியர் மேற்கொன்ட பரிசோதனை வழிமுறை, இன்றைய நவீன சிந்தனை கருவிகளில் மிக முக்கிய மானதொன்றாகும். ஜாபிர் இப்னு கைஸான் இத்துரையை உலகிக்கு அறிமுக படுத்தி ஐந்து நூற்றாண்டுகளுக்கு பின்னரே rogal bagon அதை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார். எனினும் ரொகர் பேகனே ஐரோப்பாவை ஒளிமயபடுத்திய பிரகாசமாக திகழ்ந்தார். அவர் அவ்வொளியை கீழைத்தேய முஸ்லீம்களிடமே பெற்றுகொன்டார் என்பதை மறுக்கமுடியாது.))

இவையணைத்தும் மனித சமூதாயத்திற்கு இஸ்லாமிய நாகரீகம் வழங்கிய கண்டுபிடிப்புக்களில் ஒரு பகுதியே.

மைக்கல்: ஆம்.. இவைகள் மறுக்க முடியாத சாதனைகள். எனினும் இஸ்லாமிய நாகரீகம் யூனானி போன்ற முன்னைய நாகரீகங்களிடமிருந்தும் சிலதை பெற்றுகொண்டது என்பதையும் மறத்நு விட முடியாது.

றாஷித்: நண்பரே! அது அறிவியல் முன்னேற்றத்தின் இயல்பே. நாகரீக சுழற்சிகள் என்றழைக்கபடும் மனித சாதனைகளுக்கிடையிலான தொடர்புச்சங்கிலி என்றும் கூறலாம். இதை பிரான்ஸிய கீழைத்தேயவாத ஆல்டோ மிலேயினுடைய கூற்று வலுப்படுத்துகிறது. ((அரேபியர்களின் அறிவியல் பண்டைய நாகரீகங்களையும் நவயுகத்தையும் இனைக்கும் தொடர்புசங்கிலியாகும். அதை நாம் பெற்றிருக்க வில்லையெனின் இவை இரன்டுக்கும் மத்தியில் வெறுமையானதாகவே இருந்திருக்கும் நவ நாகரீகத்தையிம் அடைந்திருக்க மாட்டோம் ))

Har fard பல்கலைக்கழக அறிவியல் வரலாற்றுப்பிரிவு பேராசிரியரும் “:நவீன விஞ்ஞானத்தின் உதயம், .இஸ்லாம் ,சீனம் ,மேற்கத்தயம்” என்ற நூலாசிரியரு மான டொபி ஹெவினின் கருத்து கனிப்பீட்டின் படி ((அறபு, இஸ்லாமிய நாகரீகத்தில் செறிந்து காணப்பட்ட தத்துவார்த்த மற்றும் அறிவியல் பொக்கிஷங்கள் மத்திய கால ஐரோப்பியர்கள் மேற்கொன்ட மொழிபெயர்ப்பு நடவடிக்கையினால் மேற்கத்தியத்தை வந்தடைந்தன. மேற்கத்தய சிந்தனை விரிவாக்கத்தில் அதற்கென பாரிய பங்களிப்புண்டு.)) என்கிறார்.

அது ஒரு புரம் மிருக்க இன்னொன்றையிம் கூறுகிறேன் கேளுங்கள்: வேறெந்த நாகரீகமும் பெற்றிராத சிறப்பியல்புகளை இஸ்லாமிய நாகரீகம் பெற்றிருக்கிறது

இஸ்லாமிய அறிவியற்கலையை தூண்டும் உந்து சக்தியாக இஸ்லாம் காணப்பட்டதே இம்முன்னேற்றத்திட்கான முக்கிய காரணியாகும்.

. அதுவே இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய நாகரீக அறிவியல் முன்னேற்றத்திற்குமிடையிலான நெருங்கிய தொடர்பு. அது மட்டுமன்றி இஸ்லாம் அறிவியலை தூண்டும் ஒரு பிரதான உந்து சக்தியாகவும் இருந்தது.

ம்.. இந்தநாகரீகத்தை சேர்ந்தவன் என்றடிப்படையில் எனக்கும் பெறுமையாக இருக்கிறது




Tags: