மதுக்கோப்பை

 மதுக்கோப்பை

மதுக்கோப்பை

மதுக்கோப்பை

ராஷித் தனது நண்பன் மைக்கை குறிப்பிட்ட தினத்தன்று உணவகத்தில் சந்தித்தார். இருவரும் தமது கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்காக அமர எத்தணிக்கவே மைக்கல் றாஷிதை நோக்கி :

இன்று நான் முன்வைக்கப்போகும் விடயத்தில் எனது கருத்திற்கு நீங்கள் உடன்படுவீர்கள் என நிணைக்கிறேன்.

றாஷித்: நண்பரே! சற்று பொறுங்கள்... ஏதாவது பருகிக்கொண்டே பேசலாமே!

மைக்கல்: மன்னிக்கவும், அவ்வாறே..

மைக்கல் சிற்றூழியரை அழைக்கவே அவர் அவர்களிடம் வந்தார்; ராஷித் அவருக்குத்தேவையானதைக் கூறினார்.

றாஷித்: தேனீர்...

சிற்றூழியர் (ஆச்சரியமாக): தேனீரா?!!

றாஷித்: எலுமிச்சப்பழச்சாறினாலான

சிற்றூழியர் (மேலும் ஆச்சரியமாக): எலுமிச்சப்பழச்சாறிலா?!!

சற்று சிரித்தவராக {மைக்கல் சிற்றூழியரைப் பார்த்து): ஆம், அவர் முஸ்லிம் , மதுபானம் அருந்துவதில்லை. எனக்கும் அவ்வாறே எலுமிச்சப்பழச்சாறினாலான தேனீர்.

சிற்றூழியர் அவர்களுக்கு தேவையானவற்றை கொண்டுவருவதற்காக சென்றுவிட்டார். அந்நேரத்தில் சற்று முனுமுனுத்தவராக றாஷித்: இதில் என்னதான் புதுமையோ தெறியவில்லை ?!

மைக்கல: எனது நண்பரே எமது நாட்டில் மதுபானம் பருகுவதென்பது தண்ணீர் குடிப்பதைப்போல, இங்கே பல்வேறுபட்ட மதுபானங்கள் உள்ளன. அவற்றைப்பருகும் வழிமுறைகளும் உள்ளன. நீங்கள் விரும்பும் ஓன்றும் அவற்றில் இல்லையைன்பதாலே சிற்றூழியர் சற்று ஆச்சரியப்பட்டார்... மன்னிக்கவும் நண்பரே...

றாஷித்: என்றாலும், புதுமை..

மைக்கல்: இதிலென்ன புதுமை இருக்கிறது? இதுவொன்றும் எங்களுக்கு புதுவிடயமல்ல, இங்கு மட்டுமல்ல மேற்குலகு புராகக் கானப்படும் ஓர் சாதாரண விடயம்.

றாஷித்: ஆம், ஆச்சரியமாக உள்ளது.

மைக்கல்: அதெப்படி?!

றாஷித்: எப்படிஎன்றால்... உங்களில் அதிகமானோர் கிரிஸ்தவர்கள்;. பரிசுத்த வேதாகமத்தை நம்புவது உங்களது கடமை. மதுபானம் தீங்குவிளைவீக்கக்ககூடியது என தவ்ராத் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; அதை எச்சரித்துமுள்ளது. {மதுபானப்பிரியரையும் மாமிசப்பெருந்தீணிக்காரரையும் சேராதே! } [ நீதிமொழிகள்: அதிகாரம்23: வசனம்20 ] {சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து மதுபானம் தங்களை சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகும் அளவு குடித்துக்கொண்டே இருக்கிறவர்களுக்கு ஐயோ! } [ஏசாயா: அதிகாரம் 5: வசனம்11]

{ நீரும் உன்னோடே கூட உன்குமாரரும் சாகாதிருக்க வேண்டுமானால், ஆசாரிப்புக்கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது திராட்சரசத்தையும், மதுவையும் குடிக்க வேண்டாம் } [லேவியராகமம்::அதிகாரம்10:வசனம்9] {திராட்சைச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும், மதுபானமும் குடியாமல் தீட்டானதொன்றும்

புசியாமலும் நான் அவளுக்கு கட்டளையிட்டதெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.} [நியாயாதிபதிகள்:அதிகாரம்13:வசனம்14] மதுபானம் அருந்துவதை இகழ்ந்து இவையல்லாத பல அத்தியாயங்களும்; போதையில் இருப்பவர்களுடன் சேர்ந்து இருப்பதையும் அவர்களைப் பார்பவர்களையும் இகழ்ந்து பல அத்தியாயங்களும் உங்கள் வேத்திலேயே வந்துள்ளன.

மைக்கல்: றாஷிதே! மண்னிக்கவும்... உங்களுக்கு மட்டும்தான் வேதாகம்ம் நன்றாகத்தெறியும் என்று நீங்கள் நிணைக்க வேன்டாம். எங்களிடம் உள்ள மார்க்க அறிஞர்கள் பலரும் மதுபானம் அருந்துவது தொடர்பாக பலஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்தான். அவர்களுள் சிலர் சில நபிமார்கள் போதையேறும் அளவு மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என தவ்ராத் வேதத்திலிருந்தே ஆதாரங்களை முன்வைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் போதைமட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது எனகூறுகிரார்கள். இயேசுகிறிஸ்துவும் மது அருந்தினாரென இன்ஜீல் வேதத்திலேயே உள்ளது.

{ எப்படியெனில் யோவான்ஸ்நாணன் அப்பம் புசியாதவனும், திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான், அதற்கு நீங்கள் அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.} { மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார், அதற்கு நீங்கள் இதோ போஜனப்பிரியனும், மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும், பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.}

[லுகா: அதிகாரம்7: வசனம்:33,34 ]

றாஷித்: நண்பரே! நீங்கள் சொல்லும் விடயம் மேற்கத்திய சமூகத்தை பாதிக்கக்கூடிய வேறு இரு பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்கிறது.

முதலாவது: கூறுவதற்கே கவலையளிப்பது என்னவென்றால், தற்போதுள்ள உங்கள் வேதாகமத்தில் பல திரிபுகளும், உட்பூசல்களும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தானுக்கு பணிபுரியும் சில கரங்கள் செய்த மாற்றத்தினால் அவற்றில் பல கோட்பாடுகள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றன. அதில் ஓன்றுதான் மதுபானத்தை ஆகுமாக்கலும், தடை செய்தலும். அதாவது: இயேசு கிறிஸ்து அவர்கள் மதுபானம் அருந்தினார் என்று கூறிய அதே நேரத்தில் அவர் அதை அருந்துபவர் இல்லையென்றும் இன்னோர் இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் வேதாகமத்தை படிக்கும் போதே... புரியும். ஜிப்ராயீல்(அலை) அவர்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி கூறும்போது { அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். } [லூக்கா: அதிகாரம்1: வசனம்15]

இரண்டாவது விடயம்: உங்கள் மார்க அறிஞர்கள் (பாதிரியார்கள்) சிலர் வேதாகமத்தை பதுக்குகிறார்கள்; (அவற்றில் உள்ளவற்றை மறைக்கிறார்கள்) அவற்றில் சிலர் தமக்கு வேதவாக்கு வருவதாகவும் (ஹலாலாக்குதல்,ஹராமாக்குதல்) ஆகுமாக்கல், தடைசெய்தல் போன்ற அதிகாரங்கள் தமக்கிருப்பதாகவும் வாதிடுகிறார்கள். நீங்கள்தான் அவர்களை பின்பற்றுகிறீர்கள்

மைக்கல்: இதில் நீங்கள் கூறுவது உண்மைதான். அதனால்தான் உங்களுக்கு ஓரு விடயத்தை வேளிப்படையாகச்சொல்கிறேன்: எங்களில் அதிகமானோர் வேதாகமத்தையும், பாதிரியார்களையும் நம்புவதில்லை. எமது சமூகம் எழுச்சி பெற்ற காலம் தொடக்கமே பெரும்மாற்றம் நிகழ்ந்துவிட்டது. நாங்கள் நம்புவதெல்லாம் சடரீதியான இவ்வறிவியலையும், சிந்தனையையுமே. இந்த வேதம்,வேதாகமங்களை ஓரு புறம் வைத்துவிட்டு சிந்தனைரீதியாக ஏதாவது பேசலாம்.

றாஷித்: மன்னிக்கவும்... இந்த உங்களுடைய பிரச்சினைகளெல்லாம்; குறிப்பாக மத்திய காலப்பகுதியில் ஏற்பட்ட திருச்சபையின் அறிவியலுக்கெதிரான போராட்டம் நீங்கள் இடம் கொடுத்ததன் விளைவால் ஏற்பட்டவை. அதில் கவலையலளிக்கக் கூடிய விடயம் என்னவென்றால்; அதே போன்றே எல்லா மதங்களையும் நினைக்கிறீர்கள். ஆனால் இஸ்லாத்தை பொறுத்தமட்டில் நாங்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. இஸ்லாம் அறிவைப் போற்றுகிறது. மார்க்கஅறிஞர்கள் மறைத்து வைக்குமளவு அதிலே எவ்வித அபூர்வ இரகசியங்களும் இல்லை.

சரி, அது ஒருபுறம் இருக்கட்டும் நீங்கள் விரும்பியவாறே.. அறிவியல், சிந்தனைரீதியாகப் பேசலாம். என்றாலும் நான் பின்பற்றும் மார்க்கத்திற்கு அது ஓன்றும் முரணானது அல்ல. அதை நிரூபித்தும் காட்டுவேன்.

மைக்கல்: அப்படியா?.. தயவுசெய்து

றாஷித்: சற்றுமுன் நீங்கள் அறிவு, சிந்தனை முதலியவற்றையே நம்புவதாகக் கூறினீர். எனவே உங்களிடம் ஓரு கேள்வியைக் கேட்கிறேன்; சிந்தனை இவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருந்தால், மதுபானம் அருந்துவது அதை பாதுகாக்குமா அல்லது மங்கச் செய்யுமா?

மைக்கல்: இதுவொரு கேள்வியே அல்ல..

றாஷித்: அல்லாஹ் மனிதனை அவனுடைய ஏனைய அதிகமான படைபுக்களை விட சிறப்பாக்கியுள்ளான். அவனுக்கு சிந்திக்கும் ஆற்றலை வழங்கியுள்ளான். இஸ்லாத்தில் சிந்தனையாற்றல் (புத்தி) இல்லாதவர் மார்க்கக் கடமைகளைவிட்டும் நீங்கியவராகவே கருதப்படுவார். எனவேதான் இம்மகத்தான அருக்கொடையை பாதிக்கும் எந்தவொன்றையும் தீண்டக்குடாதென அல்லாஹ் நமக்கு ஏவியுள்ளான். அதுமட்டுமன்றி இஸ்லாத்தில் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டிய ஐந்து அம்சங்களில் ஓன்றாகவும் அது திகழ்கிறது. இதனால்தான் இஸ்லாம் மதுபானம், போதைப்பொருள் என புத்தியை மங்கச்செய்யும் எல்லாப்பொருட்களையும் தடைசெய்துள்ளது..

மைக்கல்: அந்த ஐந்து அம்சங்களும் எவை?

றாஷித்: அவற்றைப்பற்றி விரிவாக பேசுவது எங்களுடைய தலைப்பிற்கு அப்பாற்பட்டவொன்று. என்றாலும்... அவற்றை சுருக்கமாகச் சொல்கிறேன்: மார்க்கம், ஆனமா, சிந்தனை, மானம், செல்வம்.

மைக்கல்: பிரமாதம் .

றாஷித்: அறிவியல்ரீதியான ஒன்றுதான்: மதுவிலுள்ள அல்கஹோல் குடல் வழியாக சென்று, நாளங்களில் உறிஞ்சப்பட்டு . இரத்த ஓட்டத்தால் உடலின் அனைத்துப் பாகங்களையும் சென்று மிகவிறை தாக்குகிறது. இதனால் மைய நரம்புத்தொகுதியில் கோளாறுகல் ஏற்படுகின்றன. .

அல்கஹோல் அற்ப அளவு இருந்தாலும் நரம்புத்தொகுதியின் தொழிற்பாடுகளில் துரிதகதியில் தாக்கம் செலுத்தும்;. அவற்றிலுள்ள நரம்பலைகளின் ஓட்டத்தில் தாமதத்தை ஏற்படுத்தும். இதனால் கவனயீனம், மந்தநிலை, அசைவில் தடுமாற்றம் போன்றன ஏற்படும். இதனாலேயே நம் வேதநூலான அல்குர்ஆன் அதைத்தடுத்துள்ளது. {நிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம், மதுவிழும், சூதாட்டத்திலும் (அதன்மூலம்) உங்களுக்கிடையில் விரோதத்தையும், வெறுப்பையும் உண்டுபண்ணவும், அல்லாஹ்வை நினைவுகூறுவதை விட்டும், தொழுகையை விட்டும் உங்களை அவன் தடுப்பதையுமேயாகும்; (அவைகளிலிருந்து ) நீங்கள் விலகிக்கொள்கிரீர்களா? } [அல்மாஇதா:90]

மைக்கல்: என்றாலும் மதுபானத்தில் புத்துணர்ச்சி மற்றும் குளிரை தடுப்தற்கான உஷ்ணம் போன்ற பல பயன்களும் உள்ளன.

றாஷித்: ஆம், சில நன்மைகள் இருக்கின்றன என்பதை குர்ஆன் மறுக்கவில்லை. { (நபியே!) மதுவையும், சூதாட்டத்தையும்பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: “அவ்விரண்டிலும் பெரும் பாவமும், மனிதர்களுக்கு (சில) பயன்களுமிருக்கின்றன. மேலும், அவ்விரண்டின் பாவம், அவ்விரண்டின் பலனை விட மிகப்பெரியதாகும்; (“தர்மத்திற்காக) எதைச்செலவு செய்வது?” என்றும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் “எஞ்சியிருப்பதை” எனக்கூறுவீராக! இவ்வாறே நீங்கள் சிந்தித்துணர்வதற்காக, உங்களுக்கு அல்லாஹ் தெளிவாக்குகிறான். } [அல்பகரா: 219] ஆனால் அதிலுள்ள நன்மைகளை விட தீமைகளே அதிகமென்பதால் அதனை தடை செய்துள்ளது. ஹ்ம்... சரி, வாருங்கள் நீங்கள் கூறிய அறிவியலைப்பற்றி சற்று பேசலாம்.

மதுபானம் அறுந்துதல் பிறரை துன்புறுத்துதல், தனிமனித, சமூக, பொருளாதார தீங்குகளுக்கு இட்டுச்செல்லல் போன்ற நடத்தைசார் பாதிப்புகளை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் பின்வரும் ஆரோக்கிய ரீதியான தீங்குகளுக்கும் இட்டுச் செல்கிறதென்பதை அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது.

1- பொதுவாக உடம்பிலுள்ள சுரப்பிகளை பாதிப்படையச் செய்வதோடு உடல் மற்றும் இருதய அழுத்தங்களுக்கு காரணமாக அமைகிறது.

2- இனப்பெருக்கத் தொகுதியை பாதிப்படையச் செய்வதால் ஆண்மையை இழக்க நேரிடலாம்.

3- குடல், முன்சிறுகுடல், மற்றும் சமிபாட்டுத் தொகுதி போன்றவற்றில் புன் ஏற்படல்

4- வாய், தொண்டை, குடல்,சிறுகுடல்கள், நரம்புகள் மற்றும் நாளமில்லாசுரப்பிகள் போன்றன நேரடியாக கடும் பாதிப்புக்குள்ளாகின்றன.

5- ஈரல் சின்னாபின்னமாகி புற்றுகள் ஏற்பட காரணமாக அமைகிறது. பின்னர் அது உரையவே ஈரல் நோய், ஈரல் புற்று நோய் போன்ற குனப்படுத்த முடியாத கட்டத்திற்கு இட்டுச்செல்லும்.

6- சுவாசத்தொகுதி உருப்புகளை மட்டிட முடியாதளவு பாதிப்படையச் செய்கிறது.

ஆனால் நீங்கள் கூறுய உஷ்ணம் இரத்த நுண்குழாய் பரந்து காணப்படும் தோளில் மது கலந்த இரத்தம் செல்வதால் ஏற்படுவதாகும். உடம்பின் அனைத்து பாகங்களிலிருந்தும் உஷ்னம் மற்றும் குளிரை சுமந்துவரும் குருதியினால் உடல் நிரம்பியிருப்பதை க்காணலாம். இதன்போது மது பாவனையாளர் போலியான உஷ்ணத்தை உணர்வார். இவ்வாறு அவரின் தோள் உஷ்ணமடையவே அவர் குளிரை உணரமாட்டார். உடலின் அனைத்து பாகங்களிலிருந்தும் தோளைநோக்கி தன் வழமையான சுற்றில் இவ்வுஷ்ணக்குருதி தொடர்ந்தும் பாய்வதால் அன்றாட உடலியற்தொழிற்பாடுகளுக்கு அத்தியவசியமான உளஉஷ்ணத்தை இழக்க நேரிடும்.

குளிரைத்தனிக்க மதுபானம் தவிர்ந்த பல வழிமுறைகள் உள்ளன. குளிர்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் அதற்காக மதுபானம் அருந்துகிறார்களா?! நிச்சயமாக இல்லை .

மைக்கல்: தலைவர் றாஷித், சற்று கவனியுங்கள்!... நீங்கள் சொல்வதைப்பார்த்தால் போதையேறும் அளவு மது அருந்துவதால்தான் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அந்தவகையில் மது கொஞ்சமாக அருந்துவதை நான் குற்றமாக நினைப்பதில்லை.

றாஷித்: மதுமானத்தைப் பொருத்தமட்டில் அதைப்பருக ஆரம்பிப்பதிலேயே பிரச்சினை தோன்றுகிறது; மனதிற்கு புத்துணர்ச்சியளிக்கிறது. பின்னர் உடலுக்கு அல்கஹோலின், தேவை அதிகரிக்க மது அருந்துபவருடைய மதுவின் தேவையும் அதிகரிக்கிறது. இவ்வாறு அல்கஹோலின் தன்மை உடலின் அதிகரிக்க மதுவை நோக்கி உடலின் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

நியூஸீலாந்தின் வைத்தியக்குறிப்பொன்றை கூறுகின்றேன். அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது: அல்கஹோல் குடிபானங்கள் அவை கொஞ்சமாக இருந்தாலும், அவற்றினால் எதிர்ப்பார்க்கப்படும். நன்மைகளை விட தீமைகளே அதிகம். இது ‘நாள்தோறும் பருகும் ஒருகோப்பை மதுபானம் உளநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.’ என்ற மேற்கத்திய வாதத்திற்கு முற்றிலும் புறம்பானது. நியூஸிலாந்தின் ஒக்லான்து பல்கலைக்கழக தொற்றுநோய்க்கலை விரிவுறையாளர் கலாநிதி ரோட் ஜெக்க்ஷன், “லண்சித்” என்ற வைத்திய சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட அவருடைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் உளநோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவதென்பது மடத்தனமானவொன்று. அவைகளால் ஏற்படும் தீயவிளைவுகளுக்கு எவ்விதத்திலும் சமனாகாது.

ஏன் , ஹதீஸிலும் இந்த அறிவியல் அற்புதம் மறைந்திருக்கிறது; நபி(ஸல்) அவர்கள் ((போதையூட்டும் அனைத்தும் ஹராமாகும் (தடைசெய்யப்பட்டதாகும்) அதில் சொற்பமோ அதிகமோ அனைத்தும் ஹராம்.)) எனகூறினார்கள்.

மைக்கல்: ஓஹ்ஹ்...! இது சூடு பிடிக்கும் வாதம் மட்டுமல்ல சற்று வெதுவெதுப்பானதும்கூட. குளிரான ஒருகோப்பை எழுமிச்சச்சாரை குடித்து விட்டு இத்தோடு முடித்துக்கொள்ளலாம்.

றாஷித் (சிரித்துக்கொண்டு சற்று நகைச்சுவையாக): எழுமிச்சச்சாறா, தேனீர் இல்லாமலா?! என்றாலும் நீங்கள் ஆரம்பத்தில் கூறவந்த விடயத்தை கூறவே இல்லை.

மைக்கல்: சரி.. அதை அடுத்த சந்திப்பில் பார்ப்போம்.

றாஷித்: இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்).




Tags: