மகத்தான மனிதர்

மகத்தான மனிதர்

மகத்தான மனிதர்

மகத்தான மனிதர்

ராஷித் ஒரு புத்தகத்தை சுமந்தவராக தனது மடிக்கணனியுடன் நண்பர்கள் இருவரையும் நோக்கி வந்தார். அவ்விருவரிடமும் வந்தனம் தெரிவித்தவராக பதிலைக்கூட எதிர்ப்பார்க்காமல் விரைந்து கொண்டே:

நண்பர் மைக்கல்! நீங்கள் கேட்டதற்கான விளக்கத்தை இன்று தரப்போகிறேன். இஸ்லாத்தின் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களை நம்புதல் என்ற கருத்து முரண்பாடற்ற இஸ்லாத்தின் மிக முக்கியமான அம்சத்தை விளக்கப்போகிறேன். உங்களுக்காக மேற்கத்திய சிந்தனையாளர் ஒருவருடைய புத்தகத்தைக்கொண்டு வந்திருக்கிறேன்.முஹம்மத் (ஸல்) அவர்களைப்பற்றி அவர் என்ன குறிப்பிட்டுளார் என விவரிக்கிறேன், கேளுங்கள்.

மைக்கல்: ராஷித் சற்றுப்பொறுங்கள் நான் கேட்டது கடவுள் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தைப்பற்றியே.

றாஷித்: ஆம், அது சரி. என்றாலும் சில காரணங்களுக்காக நீங்கள் கேட்டவற்றிற்கு அப்பால் செல்லவேண்டி இருக்கிறது அவற்றில் மிக முக்கியமானவை.

இஸ்லாம் நபி (ஸல்) அவர்களுடைய தூதுத்துவத்தை அடிப்படையாகக்கொண்டதெனினும், அதன் இறைமை பற்றிய கண்ணோட்டம் புதிதாக உருவான ஒன்றல்ல. மாறாக ஆதம் (அலை) அவர்கள் தொடக்கம் ஈசா (அலை), முஹம்மத் (ஸல்) அவர்கள் வரைக்குமுள்ள அனைத்து நபிமார்களும் போதித்த முழு மனித சமுதாயத்தினதும் அடிப்படை மார்க்கமாகும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் மனித சமுதாயம் அவ்வியற்கை மார்க்கத்தை விட்டும் நெறிபிறழ்ந்து விட்டது. எனவே அதை சீர்செய்து மனிதர்களை மீண்டும் அல்லாஹ் ஒருவனையே வணங்கவேண்டுமென வலியுறுத்தியது. இஸ்லாத்திலுள்ள இவ்வேகத்துவக்கொள்கை மனிதப்படைப்பின் ஆதி முதல் உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும். காலாகாலம் புது வடிவம் பெரும் ஒரு சுற்று... நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னரான மார்க்கமாகும்.

இரண்டாவது விடயம்: சென்ற கலந்துரையாடல்களில் நாங்கள் உடன்பட்ட அம்சங்கள் இப்புள்ளியை கடந்துசெல்ல போதுமானவை என நினைக்கிறேன்.

ரஜீவ்: அதாவது... ஏற்கனவே நாங்கள் கலந்துரையாடிய உண்மையான கடவுளின் பண்புகள் இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனக்கூறுகிரீர்களா?

றாஷித்: ஆம், சரியாக சொன்னீர்.

ரஜீவ்: அப்படியென்றால், நீங்கள் சொல்லவந்த விடயத்திற்கு முன்னர் இறைமை பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தை சுருக்கமாக கூறுவது சிறந்தது.

றாஷித்: நல்லது.. .இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து படைப்பினங்களையும் படைத்தவன் ஒருவனே. அவன் தனித்துவமானவன், அவனைப்போன்று இப்பிரபஞ்சில் எதுவுமில்லை, இயற்கை நியதிகள் எனக்கூறக்கூடிய அனைத்து சட்டங்களையும் உருவாக்கியவன். அவனே.ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய தனித்தனி நியதிகளையும், அளவு கோல்களையும் உருவாக்கியவன், அவன் யாவற்றையும் விட மேலானவன்.

அவனுடைய தனித்துவத்திலும்,பண்புகளிலும், செயற்பாடுகளிலும் அவனுக்கு ஒப்பான எதுவுமில்லை. அவன் பரிபூரணமானவன், எவ்வித குறைகளுமற்றவன், அவன் யாரையும் பெறவுமில்லை, எவராலும் பெறப்படவுமில்லை, அவனுடன் வணங்கப்படக்கூடிய அமைச்சர், ஆலோசகர் என எவருமில்லை, அவன் நிகரற்றவன்; உயிர்ப்பிப்பவன்; மரணிக்கச்செய்பவன், அவன் படைப்பினங்களில் தங்கியிருப்பவனல்ல.

ஆட்சி, அதிகாரம் என அனைத்திலும் நிகரற்ற இந்த ஏக இறைவனையே வணங்க வேண்டும். அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைப்பவரோ நெருக்கத்தை எற்படுத்தக்கூடிய இடைத்தரகரோ எவருமில்லை. வணக்கத்துக்குரிய நாயன் அவன் மாத்திரமே.

மைக்கல்: நீங்கள் கொண்டுவந்த புத்தகம் எதைப்பற்றி?

றாஷித்: மனித வரலாற்றில் சாதனை படைத்தவர்களைப்பற்றி குறிப்பிடுகிறது; இந்தப்புத்தகம் அமெரிக்க விண்வெளி ஆய்வுமையத்தில் பணிபுரிபவரும், வானியல் மற்றும் கணிதவியல் அறிஞருமான வரலாற்றாசிரியர் கலாநிதி”மைக்கல் எச் ஹார்ட்”குரியது

மைக்கல்: வரலாற்று ஆய்வைப்பற்றி என்ன குறிப்பிட்டிருக்கிறார்?

றாஷித்: இவ்வரலாற்றாய்வு இவ்வுலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக கணிப்பிடப்படுகிறது. .கவனியுங்கள்... கலைக்கலஞ்சியங்கள்(encyclopedia) பல்லாயிரம் மில்லியன் மக்களில் வெறும் (20000)இருபாதாயிரம் பெயரைப்பற்றியே குறிப்பிடுகின்றன, அவர்களில் மிக முக்கியமான 100 பேரை சில அடிப்படை விதிகளுக்கமைய தெரிவு செய்திருக்கிறார். குறிப்பிட்ட நபர் எல்லோராலும் அறியப்பட்ட உண்மையான ஆளுமை மிக்கவராக இருத்தல் வேண்டும். மனித வரலாற்றில் அவருடைய தாக்கம், மோசமானதோ அல்லது நல்லதோ ஆனால் நீண்டதாகவும், ஆழமானதாகவும் இருத்தல் வேண்டும், என்பன அவ்வடிப்படைகளில் முக்கியமான சிலவாகும்.... எனவே எங்களுடைய தலைப்பிற்கு சிறந்தவொன்று எனக்கருதுகிறேன்.

றாஜீவ்: இந்த நூலாசிரியர் பார்வையில் மிகச்சிறந்த ஆளுமை எது?

றாஷித்: இந்நூலாசிரியர் அவர் தெரிவு செய்யத 100 பேரில் முதலிடத்தை முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கியுள்ளார். அதற்காக சில காரணங்களையும் தெளிவுபடுத்துகிறார்....

என்று கூரியவராக ராஷித் புத்தகத்தை திறந்து வாசிக்கலானார்.

((இதில் முதலிடத்தை முஹம்மதுக்கு வழங்கியுள்ளேன். இத்தெரிவிற்காக பலர் ஆச்சரியப்படுவது நியாயம் தான். எனினும் உலக மற்றும் சமய பகுதிகளில் வரலாற்று ரீதியாக மிகப்பெரும் வெற்றிகண்ட மனிதர் முஹம்மத் அவர்களே.

அவர் இஸ்லாத்தின் பால் மக்களை அழைத்தார். மிகப்பெரிய சமயங்களில் ஒன்றாக மாறும் அளவு அதைப்பரப்பினார். மார்க்கத்தலைவராக மட்டுமல்லாது இராணுவ, அரசியல் தலைவராகவும் விளங்கினார். அவர் இறந்து 13 நூற்றாண்டுகளின் பின்னரும் அவருடைய தாக்கம் பலமானதாகவும் புதுப்பிக்கப்படக்கூடியதாகவும் இருக்கிறது)).

மேலும் கூறுகிறார் ((கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களைவிட இருமடங்கினராக இருந்த போதும் முஹம்மத் முதளிடத்தைப்பிடித்திருப்பது ஆச்சரியமாகத்தோன்றலாம். இயேசு கிறிஸ்து மூன்றாம் இடத்தையும், மோசஸ் (மூஸா (அலை) ) 16 ஆம் இடத்தையும் பிடித்திருக்கின்ற அதேவேளை முஹம்மத் (ஸல்) அவர்கள் முதலிடத்தை பிடித்திருப்பது புதுமையாக இருக்கலாம்.

அதற்கு சில காரணங்கள் உள்ளன: கிறிஸ்தவ மதத்தில் இயேசு கிறிஸ்து அவர்களுடைய பங்களிப்பைவிட இஸ்லாமிய மதத்தில் அதைப்பரப்புவதிலும், வேரூண்டச்செய்வதிலும், மார்க்கசட்டதிட்டங்களை சீராக அமைப்பதிலும் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய பங்களிப்பு மகத்தானது. இயேசு கிறிஸ்து அவர்கள் கிறிஸ்தவ மதத்தின் பண்பாட்டு அடிப்படைகளில் பெரும்பங்காற்றியுள்ளபோதும், புனித பவுல் அவர்களே மார்க்க சட்டவாக்கங்களை சீரமைப்பதிலும் பைபிளில் (புதிய ஏற்பாட்டில் அதிகமானவற்றை எழுதுவதிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.

ஆனால் இஸ்லாத்தைப்பொருத்தமட்டில் அதன் சட்டவாக்க அடிப்படைகள், மார்க்கசட்டங்கள், மற்றும் மனித சமுதாயத்தின் இம்மை, மறுமை வாழ்க்கைக்கான சமூக பண்பாட்டு விழுமியங்கள், நடைமுறை அலுவல்கள் முதலியவற்றை கட்டியெழுப்புவதில் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய பங்களிப்பே மிக முக்கியமாகும். முஸ்லிம் சமூகத்தின் இம்மை, மறுமை வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் போதித்துள்ள அல்குர்ஆன் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒருவருக்கே இறக்கப்பட்டது)) என்ன.. இவர் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறதா?

ரஜீவ்: ம்...சற்று சந்திக்க வேண்டிய விடயமே, என்றாலும் நான் ஒன்றைக்கூற அனுமதியுங்கள், அதாவது: இந்த ஆசிரியர் (மைக்கல் எச் ஹார்ட்) ஒரு மனிதவியலாய்வு நிபுனர் அல்ல.

றாஷித்: ம்...அவர் ஒரு மனிதவியலாய்வு நிபுனர் இல்லாவிடிலும் அவர் கூறுவது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவொன்று. ஒரு யூதனாக இருந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் விடயத்தில் பாரபட்சம் காட்டுவார் என்றால் அதை எவராலும் நம்பமுடியாது. நீங்கள் மேலும் பல ஆதாரங்களை விரும்பினால் அவற்றையும் கூறுவேன்.

பின்னர் ராஷித் தனது மடிக்கணணியை இயக்கச்செய்து தனது நண்பரை நோக்கி:

நண்பரே இதோ பாருங்கள் (எனக்கூரியவராக அதிலுள்ளவற்றை வாசிக்கலானார்)

ப்ரான்சியக்கவிஞர் லமர்தைன் குறிப்பிடுகையில் ((முஹம்மத் (ஸல்) அவர்கள் அடைந்த உயர்ந்த அந்தஸ்தையும் மதிப்பையும் அடைந்தவர் யார்? அவர் இறைவனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் இடைத்தரகர்களை ஆக்கிக்கொள்ளல் போன்ற போலியான கோட்பாடுகளை தகர்த்தெறிந்தார்.))

ஜேர்மனிய கவிஞர் முதலாம் கொத் (GOETHE) குறிப்பிடுகையில் ((மனித இனத்தில் மிகச்சிறந்த உதாரணம் யாரெனத்தேடினேன் அரபுதேசத்தைச்சேர்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களை கண்டு கொண்டேன்.))

ரஷ்யாவைச்சேர்ந்த தத்துவமேதையும், இலக்கியவாதியுமான டோல்ஸ்டோய் கூறுகையில்: ((நான் முஹம்மத் நபியால் கவரப்பட்டவன்; இறுதி இறை செய்தியை வழங்குவதற்காகவும், இருதித்தூதராகவும் அல்லாஹ் அவரை தெரிவு செய்துள்ளான்.))

இஸ்லாத்திற்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்தைச்சேர்ந்த எழுத்தாளரும் சிறந்த சிந்தனையாளருமான ஜோர்ஜ் பெனர்ட் குறிப்பிடுகையில் ((இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் நபியின் சரித்திரத்தை நான் பலதடவை வாசித்தேன். இஸ்லாம் அறிஞரின் வழிமுறை என்று என்னும் அளவுக்கு நற்குனங்களால் நிரம்பியிருந்தது. முஹம்மத் ஓர் ஆச்சரியமான மனிதர் என எண்ணி அவரைப்பற்றி ஆய்வு செய்தேன்.மனிதாபிமானத்தை பாதுகாத்தவர் என்று போற்றப்படும் அளவு இயேசு கிரிஸ்துவைவிட மேலானவராகக்கண்டேன்)).

மைக்கல்: நீங்கள் கூறிய அனைத்தும் முஹம்மதுடைய மகத்துவத்தைப்பற்றியாகும். அவர் ஒரு தூதர் என்பதற்கு என்ன ஆதாரம்?

றாஷித்: அருமை நண்பரே! சுவிஸ் நாட்டைச்சேர்ந்த தேய்வீகக்கோட்பாட்டாளர் கலாநிதி ஹென்ஸ் கொங் குறிப்பிடுவதையும் சற்று கேளுங்கள் ((முஹம்மத் ஒரு உண்மையான நபியாவார், அவர்வெற்றிக்கான பாதையை நோக்கி வழிநடத்தக்கூடிய ஒரு தளபதி என்பதை எம்மால் மறுக்க முடியாது))

முஹம்மத் இறைதூதர் என்பதற்கு இவையல்லாத பல ஆதாரங்கள் உள்ளன.

மைக்கல்: நீங்கள் கொண்டு வந்திருந்தால் அவற்றில் சிலதை சமர்ப்பிக்கலாம்.

மடிக்கணினியில் பதியப்பட்டிருந்த சில பக்கங்களை ராஷித் புரட்டியவராக:

முஹம்மத (ஸல்) அவர்கள் ஓர் உண்மையான இறைத்தூதர் என்பதற்கு இறைவனால் அருளப்பட்ட வேதங்களில் பல ஆதாரங்கள் உள்ளன தவறாத் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது {உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப்பன்னி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவரூக்குக் கற்பிப்பதை எல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.} [உபாகமம் 18 : அத்தியாயம் 18] பனூ இஸ்ரவேலர்களுடைய சகோதரர்கள் அரேபியர்கள். அவர்கள் (அரேபியர்களே) பனூ இஸ்மாயீல் என்றழைக்கப்படுவர். அவ்வாறே மோசஸ் (மூசா அலை), முஹம்மத் (ஸல்) ஆகிய இருவருக்குமிடையிலுள்ள பொருத்தப்பாடுகள் ஏனைய தூதர்களை விட மிக நெருக்கமானவை. ((என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்)) என்ற வசனத்தின் மூலம் அவர் ஒரு உம்மி (எழுதப்படிக்கத்தெரியாதவர்) என விளங்கிக்கொள்ளலாம்.

இன்ஜீல் வேதம் யோவான் 14 : அத்தியாயம் 15: இதில் குறிப்பிடப்பட்டுள்ள வர்க்யுலைட் (VARKULAIT) என்ற பதத்தின் அடிப்படையில் யூனானிய மொழியில் பெரிக்யூளைடஸ் (PERIQLYTOS) என்பதாகும். இச்சொல் புகழுக்குரியவர் அல்லது புகழப்பட்டவர் என்ற அர்த்தத்தை வழங்கும்.அரபியில் நபி (ஸல்) அவர்களுடைய (محمد) பெயரின் அர்த்தமும் புகழுக்குரியவர் என்பதே.

இது தவிர மறைவான விடயங்களை அறிவித்தல், ஒன்றின் ஆரம்பத்திலேயே அதன் முடிவுகளை அறிவித்தல், அவருடைய தூதுத்துவத்தின் அறிவியல் அற்புதம் என ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

மைக்கல்: எங்கே? எங்கேயுள்ளன? எங்களுக்கு காட்டுங்கள்.

றாஷித்: நபி முஹம்மதுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் அற்புதமான அல்குர்ஆனில் ஏராளமாக உள்ளன.

ரஜீவ்: அவ்வாறெனின் உங்களுடைய மார்க்கத்தையும், தூதரையும் பற்றியறிய முதலில் குர்ஆணைப்பற்றி அறியவேண்டும்.

றாஷித்: ஆம் , சரியாக சொன்னீர்... அடுத்த உரையாடல் அதைப்பற்றிதான்.

மைக்கல்: பிரிந்துசெல்லமுன் ஒருவிடயம்... உங்களுடைய அந்தப்புத்தகத்தை.. எங்கு பெற்றுக்கொள்ளலாம்?

றாஷித்: இது என்னிடம் நீண்ட நாட்களாகவுள்ளது; இதன் புதிய பதிப்பொன்றை விடுதிக்கு அருகாமையில் உள்ள நூலகத்தில் கண்டேன். அடுத்தமுறை வரும்போது அங்கே சென்றுவிட்டு வரலாம்.




Tags: