பெரிஸ் உணவகத்தில் FRUED உடன் சில நிமிடங்கள்

 பெரிஸ் உணவகத்தில் FRUED உடன் சில நிமிடங்கள்

பெரிஸ் உணவகத்தில் FRUED உடன் சில நிமிடங்கள்

பெரிஸ் உணவகத்தில் FRUED உடன் சில நிமிடங்கள்

நன்பர் இருவரும் பெரிஸ் நகரை வந்தடைந்ததும் பொருத்தமான உணவகமொன்றை தேடித்திரிந்தனர். இறுதியாக பெரிஸிலுள்ள வாலிபர் விடுதியொன்றை வந்தடையவே, அதில் தங்க தீர்மானித்தனர். களைப்பால் இரவு முழுவதும் நன்றாக உறங்கி காலையில் நகரைச்சுற்றிப்பார்க்க இருவருமாக வெளிக்கிளம்பினர். இவ்வாறு உலாவிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சிற்றுண்டிச்சாலை தென்படவே...

மைக்கல்: றாஷித்! இந்த சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று தேனீர் அருந்தி சற்று இளைப்பாரலாமே.

றாஷித்: தாராளமாக, எனக்கும் சற்று ஓய்வு தேவை.

மைக்கல்: இந்த சிற்றுண்டிச்சாலைக்குத்தான் பிரபல மனோத்த்துவியலாளர் FRUED வந்து போவாராம். என்ன.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

றாஷித்: ஆம், மனோதத்துவவியலில் உலவியல் பகுப்பாய்வுத் துறையில் பெயர்பெற்றவர், பண்பாட்டு விழுமியங்கள் அவசியமில்லையெனவும் பல்லினச்செர்க்கை ஆகுமெனவும் வாதிட்டவர்.

மைக்கல்: அவர் எங்களுடைய மிகப்பெரும் அறிஞர். நீங்கள் இவ்வாறு கூறுவது பொருத்தமில்லை.

றாஷித்: darvin, kant, mark,durkhein, Sartre போலவே இவரும் நவீன மேற்கத்தய நாகரீகத்தை தோற்றுவிப்பதில் பெரும் பங்காற்றியவர் என நினைக்கிறேன். இவர்கள் அனைவரும் சமயம், பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை இல்லாதொழிப்பதில் பெரும் பங்காற்றியவர்கள்.

டார்வினுடைய பரிமானக்கோட்பாடு இரு அபாயகரமான சிந்தனைகளை தோற்றுவித்தது. முதற்கொள்கை: நிலையான தன்மையை மறுக்கும் கூர்ப்புக்கொள்கையை பரப்புதல். இரண்டாவது: மனிதனின் ஆன்மீகப்பகுதியை முற்றாக மறக்கடித்து லெளகீகத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குதல்; மனிதனின் மிலேச்சுத்தனமான உணர்வுகளுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரமளித்தல். மனிதன் இறைவனின் படைப்பு என்பதையும் கடவுள், மனிதன், பிரபஞ்சம், மீண்டு செல்லுமிடம் போன்றவை தொடரபான தத்துவார்த்த கோட்பாடுகளையும் முற்றாக நிராகரிப்பதை இக்கோட்பாடுகள் நோக்காகக்கொண்டன.

மனித சிந்தனைக்கான வழிகாட்டி அவனுடைய பண்பாடு அல்ல மாறாக இச்சையே; அதுவே அவனை நாளாந்தம் இயக்க வைக்கிறது, என்பதே FRUED இன் வாதமாகும். பண்பாட்டு விழுமியங்களை முற்றாகப்புறக்கனிக்கும் இக்கோட்பாடு நடைமுறைக்கும், அறிவியலுக்கும் முரணானது.

மைக்கல்: மனித நாகரீகங்களின் கூறுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும் அவற்றில் சில ஒரேமாதிரியானவையே என நம்புகிறேன். இறைவன், மனிதன் பிரபஞ்சம் போன்ற கோட்பாடுகள் எல்லா நாகரீகங்களிலும் காணப்பட்டன ஆயினும் இவற்றின் ஒழுங்கு முறையில் ஒன்றுக்கொண்டு வித்தியாசப்படலாம்.

அந்த வகையில் மறுமலர்ச்சிக்கும் பின்னராக ஐரோப்பிய நாகரீகத்தில் பிரபஞ்சக்கோட்பாடே மிகப்பிரதானமாக விளங்கியது அறிவியல் சிந்தனை மேலோங்கி மனிதன் இறைவனின் படைப்பு என்ற கொள்கை நிராகரிக்கப்பட்டது; சடவாதம் மேலோங்கி ஆண் மீகவாதம் புதைக்கப்பட்டது இக்கொள்கைக்கு அத்திவாரமிட்ட மிகப்பெரும் சிந்தனையாளர்களில் ஒருவராக டார்வின் திகழ்ந்தார்.

றாஷித்: ஆம், அதை ஏற்கிறேன் என்றாலும் இது தொடர்பான மேலும் பல விடயங்களை அறியத்தருகிறேன்.

முதலாவது: இக்கொள்கை மாற்றத்திக்கான பிரதான காரணி மேற்கத்திய சமூகத்தில் காணப்பட்ட ஆண்மீக அறிவியல் வெறுமையாக்கமே. அத்தோடு திருச்சபையிடம் காணப்பட்ட படைப்பினங்கள், வாழ்க்கை பற்றிய தவரான கண்ணோட்டம்.

இரண்டாவது: மேற்கத்திய முன்னேற்றத்திற்கான காரணம் இக்கோட்பாடுகளே, என்ற அவர்களுடைய தவறான நம்பிக்கை.

மூன்றாவது: இந்த சிந்தனையாளர்களின் கொள்கைகள் அறிவியல் எழுச்சியின் பின்னர் தோற்றம் பெற்றவை. அவைகள் தவறென தெரிந்தும் மேற்குலகில் அதிகமானோர் சரியென வாதிடுகின்றனர்.

நாகரீகங்களுக்கிடையிலான அடிப்படை ஒற்றுமைபற்றி குறிப்பிட்டீர்கள். எனவே மனித நடத்தைகள் பற்றிய FRUED இனுடைய கண்ணோட்டத்திற்கும் சுமார் எழுநூறு வருடங்கள் பழமைவாய்ந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கு இஸ்லாமிய அறிஞர் ஒருவருடைய கருத்சிற்குமிடையிலான ஒரு வேடிக்கையான ஒப்பீட்டு முறை ஞாபகத்திற்கு வந்தது.

மைக்கல்: இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் ப்ரொட்டினுடைய கண்ணோட்டத்திற்குமிடையில் ஒருமைப்பாடா?! வேடிக்கையாக இருக்கிறதே...

றாஷித்: கோட்பாடு ரீதியான ஒருமைப்பாடு எனலாம். உளவியல் தொகுதியைப்பற்றி ப்ரொட் என்ன கூறியிருக்கிறார் எனத்தெரியுமா? தெரிந்திருந்தால் எனக்கும் தெளிவுபடுத்த எழிதாக இருக்கும்.

மைக்கல்: ஆம், நன்றாகத் தெரியும்; குருதிச்சுற்றோட்டத்தொகுதி, நரம்பியற்றொகுதி என மனிதனிடம் காணப்படுகின்ற உறிரியல் சாதனங்களைப் போன்று உளவியற்சாதனங்களும் உள்ளன என வாதிட்டார்.

அவ்வுளவியற்றொகுதி இன்பம், ஆளுமை பேராளுமை(நாசிசஆளுமை) என்பவற்றால் ஆனது.

இன்பம் அடக்கமுடியாத ஆசைகள், கட்டுக்கடங்காத இச்சைகள் மற்றும் உணர்வுகளால் ஆனது; மனிதப்பிறப்புடன் சேர்ந்து வரக்கூடிய உளவியற்றொகுதியில் மிகப்பழமையான கூறாகும்.

பேராளுமை சமூக விலுமியங்களால் ஆனது. அதாவது: மனிதன் பிறரிடம் இருந்து பெற்றுக்கொள்பவற்றைக் குறிக்கும். ஒரு குழந்தை பெற்றோர், பள்ளி, சமூகம் ஆகியவற்றிலிருந்து பெறக்கூடிய குடும்ப, சமய சமூகம்சார் பண்பாட்டுவிழுமியங்களை இது உள்ளடக்கும். அக்குழந்தை வளரும் போது குடும்ப மற்றும் சமூக உருப்பினர்களால் . தாக்கத்துக்குள்ளாகும். FRUED இன் கருத்தின் பிரகாரம் இக்கூறு(பேராளுமை) அனைத்து விதமான பாலியல் உணர்வுகள், இச்சைகளைவிட்டும் தூரமானது எப்பொழுதும் பூரணத்துவத்தையே வலியுருத்தும்.

ஆளுமை இச்சைகளுக்கும் பண்பாட்டு விழுமியங்களுக்கும் மத்தியில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தக்கூடியது. இன்பம், பேராளுமை ஆகியவற்றை சமநிலைப்படுத்தக்கூடியது, என்றும் கூறலாம். ஒரு மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் எழக்கூடிய பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.

பேராளுமை ஒரு மனிதன் இன்பத்தில் மூழ்காமலிருக்க ஆளுமையை எச்சரிக்கிறது அதற்கு(ஆளுமை) புறம்பாக நின்று அதை அவதானிக்கக்கூடியது.

றாஷித்: பிரம்மாதமான விளக்கம் மைக்கல்! ப்ரொட்டே நேரில் வந்து விளங்கியதைப்போன்றிருந்தது..

நானும் சில விளக்கமளிக்கிறேன்; உளவியற்றொகுதியில் மிக கடினமான பனி ஆளுமை மேற்கொள்வதே என frued ஏற்றுக்கொள்கிறார். ஏனெனில் இரு முரண்பட்ட கூறுகளான பேராளுமையையும், இன்பத்தையும் ஒருங்கினைக்கிறது. மனிதனின் பாலியல் இச்சைகளையும் சமூக பண்பாட்டு விழுமியங்களையும் சமநிலைப்படுத்துகிறது. ஒன்றையொன்று மிகைக்குமானால் சிக்கல் உருவாகி ஆரோக்கியமற்ற நிலைக்கு இட்டுச்செல்லும்.

இதிலுள்ள அபாயம் என்னவென்றால்; ஆரோக்கியம் வேண்டுமெனின் ஆளுமையையே தேவைக்கேற்ப மாற்றவேண்டும். அதற்க்கு மாற்றமாக நம் வாழ்க்கையிலுள்ள சமூக பண்பாட்டு விழுமியங்களை தினிப்போமானால் என்ன நேரும்? இதுவே மேற்கத்திய சமூகத்திற்கு நிகழ்ந்தது. அதன் நாகரீகமும் அவ்வடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவே குடும்பக்கட்டமைப்பு மனிதாபிமானம் தொலைந்து போனது... நாம் ஆரம்பித்த டார்வினின் கோற்பாட்டிற்கே திரும்பவும் வந்துவிட்டோம்.

மைக்கல்: FRUERD இன் கோட்பாடு பற்றிய உங்கள் விளக்கத்தின்படி, இச்சைகளும், ஆசைகளும் அடக்கப்பட்டு பண்பாட்டு விழும்மியக்கள், கொள்கைகளால் ஒரு நாகரீகம் எழுச்சி பெருமானால் அது அடக்கு முறை கொண்ட நாகரீகமாக இருக்கும்.

றாஷித்: ஆம், மேற்கத்திய நாகரீகம் இறையியல் கோட்பாட்டை நிராகரிக்கும் பண்பாட்டு விழுமியங்களால் உருவானது. அதே நேரம் இஸ்லாமிய பண்பாட்டின் அடிப்படை மூலாதாரம் மனித சிந்தனையின்றி இறைசட்டத்தால் உருவானது. சிந்தனையால் மாத்திரம் ஒரு நாகரீகம் கட்டியெழுப்பப்படுமானால், அது நெறிபிறழும் என்பதில் எவ்வித சந்த்தேகமுமில்லை. ஆனால் அதே சிந்தனை சமயத்தை அடிப்படையாகக்கொண்டு எழுச்சி பெருமானால் பண்பாடும் உண்னதமாக அமையும்.

மைக்கல்: ஆனால் றாஷித், நீங்கள் கூறிய அந்த இஸ்லாமிய அறிஞரின் கருத்தை குறிப்பிடவில்லையே. அவருடைய கூற்று FRUED இன் கருத்துடன் உடன்படுகிறதா அல்லது முரன்படுகிறதா?

றாஷித்: அவர் கூறியது சில கோட்பாடுகளில் உடண்படுகிறது. ஆனால் நேரம் போதாமையால் அதை அடுத்த உறையாடலில் பார்க்கலாம்.




Tags: