பாதையின் கலங்கரை விளக்கங்கள்

 பாதையின் கலங்கரை விளக்கங்கள்

பாதையின் கலங்கரை விளக்கங்கள்

பாதையின் கலங்கரை விளக்கங்கள்

கேட்போர் கூடத்திலுள்ள வட்ட மேசையொன்றில் (மைக்கல், ரஜீவ், றாஷித்) நன்பர்கள் மூவரும் அமர்ந்த வண்னம் தங்களுக்கு விருப்பமான குடிபானத்தை வேண்டிக்கொண்டனர். பின்னர் ரஜீவ் உரையாட ஆரம்பித்தார்.

சென்ற எக்களுடைய சந்திப்பில் உண்மையான கடவுளுக்குறிய பண்புகள், மற்றும் சத்திய மார்க்கத்தை எவ்வாறு அடையாளம் காணலாம் சம்பந்தமாக உரையாட தீர்மானித்தோம்.

மைக்கல்: நான் ஒரு நியாயமான கேள்வி எழுப்ப அனுமதி தாருங்கள். அதாவது: சடவாத அறிவியல் பல்வேறுபட்ட துறைகளில் பிரம்மிக்கதக்க அளவை எட்டியுள்ளது; இன்றைய வைத்தியதுறையை எடுத்துகொண்டால் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தை விட பன்நூறுமடங்கு முன்னிலையில் உள்ளது. தகவல் தொழிநுட்ப சாதனங்கள் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளன. அவ்வாறே இரசாயனவியலினூடாக பல சடவாத நியமனங்களை அறிகிறோம். புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப துரிதகதையில் விஞ்ஞான கற்கைமுறை விருத்தியடைந்துள்ளன; உலகம் உருண்டை இல்லை என்று சொல்லக்கூடிய எவ்வித சடவாத விஞ்ஞானிகளையும் இன்று காணமுடியாதுள்ளது. அதேநேரம் சிந்தனைவாத அறிவியலோ அல்லாஹ் இருக்கிறான், மதங்களிள் சரியானது, மனித வாழ்க்கைக்கு பொருத்தமான அமைப்பு, நீதம், இவையல்லாத இன்னோறன்ன கோட்பாடுகள் என ஆயிரம் வருடங்களாக பழைய புரானங்களையே பாடிக்கொண்டிருக்கிறது ஆகவே ஏன் விஞ்ஞானம் விருத்தியடைந்ததை போன்று மார்க்கமும் விருத்தியடையவில்லை?

றாஷித்: பல்லாயிர வருட காலம்தொட்டு இன்றுவரை மறைமுகமாகவோ, நேரடியாகவோ கருத்து மற்றும் கொள்கை மோதல்கள் இடம்பெற்றுகொண்டுதான் இருக்கின்றன. அதற்கான காரணம் மனித சிந்தனை சடவாத அறிவியல் அடைந்த முன்னேற்றத்தை சிந்தைவாத அறிவியலில் அடையவில்லை யென்பதுவே. ஏனெனில் மனிதனின் அடிப்படை உருவாக்கம் மாற்றமடையவில்லை. அவ்வாறே மனித சிந்தனையை இயக்கவைக்கும் மிகப் பெரிய சிக்கல்களும் மாற்றமடையவில்லை. மனித உருவாக்கத்தின் பூரன வியாக்கியானத்தை எப்பொழுதும் அவன் ஆய்வு செய்துகொன்டுதான் இருக்கிறான். அதனுடன் தொடர்புபட்ட மிகப் பெரும் உண்மைகளை (நாங்கள் ஏன் மனிதர்களாக படைக்கப்பட்டோம், இறைவனுக்கும் எங்களுக்கும் இடையிலான தொடர்புகள் என்ன) அறிந்து கொள்ள பல ஆய்வுகளை மேற்கொள்கிறான். முன்னய காலத்திலும் இதே நிலை தான் காணப்பட்டது. எனவே இதுபோன்ற சிக்கல்களில் சமகாலத்தவர்களிடம் இருந்து பயன்பெறுவதை போன்று முன்னோர்களிடம் இருந்தும் பயன்பெறலாம். மனிதன், பிரபஞ்சம், வாழ்க்கை தொடர்பாக தற்போது எழுந்த அதே கேள்விகளைப்பற்றித்தான் அக்காலத்திலும் விவாதிக்கப்பட்டன. மனிதன் சடவாத அறிவியல் உண்மைகளோடு உடன்படுவதை போல் சிந்தனைவாத கொள்கை, கோட்பாடுகளோடு தொடர்புபட்ட உண்மைகளை நம்புவதில்லை. இந்நிலை மனித இனம் அழியும் வரை தொடரும்.

மைக்கல்: அப்படியாயின், இதுபோன்ற விடயங்களில் உன்மையை எட்ட முடியாது எனலாம் .

றாஷித்: யார் அவ்வாறு கூறினார்? அவ்வாறாயின் அதை பற்றி விவாதிப்பதில் என்ன பயன்?! பிடிவாதங்களை விட்டு உன்மையை அடைவதில் முழுமூச்சாக ஈடுபடுவோமேயானால் சிந்தனை ரீதியாக உண்மைகளை எட்ட முடியிம் என எண்ணுகிறேன். யார் தூய்மையான முறையில் யதார்தத்ததை அடைவதற்கு அதன் பாதையில் செல்கிறாறோ, அல்லாஹ் அவருக்கு நேர்வழி காட்டுவான். நபிமார்கள், நல்லடியார்கள், சிந்தனைவாதிகள் வாழ்ந்த பல்வேறு பட்ட காலப்பகுதியில் இதுபோன்ற சிக்கல்கள் காணப்பட்டபோதிலும் அவர்களினுடைய சிந்தனை கோட்பாடுகள் முன்னேற்றமடைந்திருந்தன என்பதை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். முரண்பாடுகள், குழப்பங்கள் என்பன பண்டைய காலத்திலும் நவீனகாலத்திலும் சிந்தனையோடு தொடர்புபட்ட பிரச்சினைகளுடன் சேர்ந்துவரக்கூடியவை.

எனினும் இது சம்பந்தமாக இரு முக்கிய குறிப்புகளை உங்கள் கவனத்திற்கு கொன்டுவர அனுமதிதாருங்கள்.

முதலாவது: சடவாத அரிவியல் எய்தியுள்ள வளர்ச்சியானது கொள்கைகள், சிந்தனைகள் என்பவற்றின் வளர்ச்சியை வழியுறுத்தாது. (சடவாதத்தில் அடைந்த முன்னேற்றத்தை கொள்கையிலும் அடைய வேண்டிய அவசியமில்லை) ஏனெனில் அவ்விரண்டும் இருவேறுபட்ட அம்சங்கள். ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் சம அளவில் இருப்பினும் அவைகளின் கொள்கைகள், கோட்பாடுகள், மார்க்க சிந்தனைகள் முற்றிலும் வேறுபட்டவை. இதுவே மிகச் சிறந்த சான்று. ஒரு சமூகம் அதன் சடவாத அறிவியலில் அடைந்துள்ள விருத்தியை சிந்தனைவாத அறிவியலிலும் அடைந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இரண்டாவது: மணிதர்களில் ஒரு பிரிவினர் ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்வதால் அது உண்மையாகவோ அல்லது மறுப்பதால் பொய்யாகவோ மாறிவிடாது. மனித சமூகத்தில் அதிகமானோர் வீழ்ந்திருப்பது அசத்தியத்திலே. மனித வர்க்கத்தில் பெரும்பாலானோர் தவறான கொள்கைகளிலும் பண்பாடற்ற நடவடிக்கைகளிலுமே ஒன்றுபட்டிருக்கின்றனர் என வரலாறும் சான்று பகர்கிறது.

ரஜீவ்: அதை நான் ஏற்றுகொள்கிறேன். எனினும், நாங்கள் ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட கலாச்சார மட்டத்தில் உள்ளவர்கள். பல்லினக்கோட்பாடு மற்றும் கொள்கைகள் உடையவர்கள். அதனால் முதலில் உன்மையை வழிகாட்டக்கூடிய ஒரு அடிப்படையில் நாம் ஒன்றுபட வேண்டும்.

மைக்கல்: அறிவியல் அல்லது சிந்தனை ஆகிய இரு வழிகளால் மாத்திரமே சாத்தியப்படும் என கருதுகிறேன். இதில்... நாம் அனைவரும் உடண்படுகிறோமல்லவா?

றாஷித்: நானும் உங்களுடன் உடன்படுகிறேன். ஆனால், சிந்தனை என எதை நாடுகிறீர்? ஏனெனில் நம் இவருடைய சிந்தனையும் முற்றிலும் வேறுபட்டவை. அவ்வாறே அறிவியலும், நடைமுறை அறிவியலையா?.

மைக்கல்: நாம் அனைவரும் ஏற்றுகொள்ள கூடிய அறிவியல் சான்றுகளையே நாடினேன் அறிவியல் ரீதியாக உறுதிபடுத்தப்பட்ட உன்மையை ஏற்றுகொள்வதில் நான் உடன்படுகிறேன். எனினும் அவை இது வரைக்கும் நீரூபிக்கப்படாத நடைமுறை கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவை. என்ன இவற்றை ஒப்புக்கொள்கிறீர்களா?.

றாஷித்: ஆம் அதில் உடண்படுகிறேன். அதேபோன்று அவ்விரண்டின் முக்கியத்தில் சற்றும் குறைந்திடாத இன்னொரு சான்றையும் குறிப்பிடுகிறேன். அதுதான் இயற்கைநிலை. அத்தோடு சிந்தனை, அறிவியல் தொடர்பான ஒரு குறிப்பொன்றை சுட்டிக்காட்டுகிறேன். அதாவது; சிந்தனையால் ஒருவிடயத்தை தவறாக விளங்குவதற்கும், விளங்க முடியாமல் போவதற்கும் பாரிய வித்தியாசமுண்டு.

ரஜீவ்: இயற்கைநிலை சான்று என எதை கூறுகிறீர்?

றாஷித்: ஆதி மனிதன் உட்பட முழு மனித வர்க்கத்தின் பிறப்போடு அமையப்பெற்ற உள்ளுனர்வாகும். உலகிலுள்ள விலங்குகள், தாவரங்கள், சடப்பொருட்கள் என அணைத்துவஸ்துக்களுக்கும் அவற்றிக்கே உரித்தான சிறப்பியல்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக தண்ணீர் கொதிப்பதற்கு 100.c அளவு வெப்பம் தேவைபடுகிறது. அதேநேரம் ஒரு மனிதன் உயிர் வாழ 34.- 42c அளவுகளுக்கிடையிலான வெப்பம் அவசியமாகும். இவ்வாறு ஒவ்வொரு வஸ்துக்களிலும் இயல்பாக அமையப்பெற்ற சில சிறப்பியல்புகள் உள்ளன.

மைக்கல்: மனிதன் மற்றும் ஏனைய விலங்கினங்களிடமுள்ள உனர்ச்சிகள், குணதிசயங்களை நாடுகிறீர்களா?

றாஷித்: உணர்ச்சிகள் குணாதிசயங்கள் என்பன மனிதன் மற்றும் விலங்குகளிடம் இயல்பிலே உள்ளவை; அவற்றின் வாழ்க்கையில் வழிகாட்ட கூடியவை. கொடிய விலங்குகளிடம் உள்ள வேட்டையாடும் குணத்தை யாராலும் மாற்ற முடியாது. சில மீண்களும், பறவையிணங்களும் அவற்றின் இடப்பெயர்வின் பின்னர் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வருகின்றன.அவ்வாறே தாய்மை என்பது பெண்ணிற்குரியது. இவை ஒவ்வொன்றும் அவற்றிக் குரிய பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

ஆனால் இயற்கை நிலை மனிதனிடம் மாத்திரம் இருக்கக்கூடிய ஓர் அடிப்படை அம்சம். (பித்ரா) இயற்கை நிலைக்கும் பண்புகளுக்கும் மத்திலுள்ள வித்தியாசங்களாவன: பண்புகள் சட ரீதியான காரியங்களுடன் தொடர்புபட்டவை, அதே நேரம் இயற்கைநிலை கல்வியில் ஆர்வம் கொள்ளல், உன்மையைத் தேடுதல், கண்டு பிடிப்புகளில் ஈடுபடல், மிகச்சிறந்தவற்றை விரும்புதல் போன்ற சிந்தனை சார் காரியங்களுடன் தொடர்புபட்டவை. மனிதன் எவ்வாறு சூழல், சமூக, தாக்கமின்றி தானாகவே தேடிச்சென்று அவற்றால் கவரப்படுகிறான்? அவனுடைய இயல்நிலை (பித்ரா) அம்சங்கள் ஏனைய மிலேச்சத்தனமான பண்புகளை போன்று விதைக்கப் பட்டிருப்பினும் அவைகள் உளவியல் விடயங்களோடு தொடர்புபட்டவை. இவ்வியல்பு நிலையே நல்லவற்றை ஏற்கவும், தீயவற்றை தடுக்கவும் ஒரு மனிதனுக்கு வழிகாட்டுகின்றன. நறுமனத்தை விட்டு துர்நாற்றத்தை நோக்கி செல்லகூடிய அல்லது நல்ல தோற்றத்தை விட்டு மிகமோசமான தோற்றத்தை நோக்கி விரையும் ஒருவரிடம் நாம் சீரான இயல்புகளை நாம் காண முடியாது.

ரஜீவ்: என்றாலும் ஒரு விடயம் இயல்பானது அல்லது இயல்பற்றது என தீர்மானிக்க கூடிய இயல்நிலை அம்சங்களை வறையறுப்பது எப்படி?.

றாஷித்: மனிதனுடைய இயற்கைநிலை பல்வேறுபட்ட பண்புகளை உடையன, அவற்றில் மிக முக்கியமான சில.

- அனைவருக்கும் பொதுவானது மற்றும் பூரனமானது.

- நிலையானது, காலத்தால் மாறாதது.

- மனிதனுக்குள்ளே இருந்து உதிக்கக்கூடியது. கற்றல் ,கற்பித்தல்மூலமாக உட்புகுத்த முடியாதது. ஆயினும் கற்பதின் ஊடாக அதனை விருத்தியடையச் செய்யலாம்

- சில நிலைமைகளை தவிர சூழல் தாக்கத்திற்கு உள்ளாகாதது. மனிதனுடைய புலனுறுப்புக்கள் பாதிக்கப்படுவதால், இயற்கை நிலை அம்சங்களின் தூய தன்மை சில வேளை கலங்களாம். ஆனால் அவற்றின் அடிப்படை என்றும் நிலையானது.

மைக்கல்: இவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். என்றாலும் நீங்கள் கூறிய இறுதி குறிப்பில் எங்களுடைய தலைப்பில் (சத்தியத்தை அறிந்து கொள்வதில் வழிகாட்டும் சாதனமாக) இயற்கை நிலை அமையுமா என்பதில் எனக்கு சந்தேகம்.

ரஜீவ்: அப்படியென்றால் இது சம்பந்தமாக நாங்கள் உடண்பட்ட விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கலாமே.. நாம் அனைவரும் ஏற்றுக்கொன்டால் உடன்படுவோம். அவ்வாறு இல்லையெனின் வேறோரு விடயத்தை ஆய்வு செய்வோம்.

றாஷித்: இவ்வழிகாட்டி சாதனங்களைப் பற்றி அறிந்து கொன்ட நாம் இன்னொரு விடயத்தையும் இங்கே குறிப்பிடுவது பொறுத்தமானது என நினைக்கிறேன். அதாவது இஸ்லாத்தைப் பற்றி அறியாத சிலர் (சத்தியத்திற்கான இவ்வூடக சாதனங்களில்) நாம் உடண்பட்டுள்ள விடயங்கள் இஸ்லாத்துடன் தொடர்புபடாது என நினைக்கலாம், அது தவறாகும் .

மைக்கல்: மார்க்கம் என்றால் பரிசுத்த வேத நூலில் உள்ளவற்றை நம்புவதும் அவற்றிக்கு முழுமையாக அடிபணிவதுமாகும் என நான் அறிந்த மட்டில் அதன் வாதப்பிரதிவாதங்களை ஏற்றுகொள்வதில்லை. இதன் காரனமாகத்தான் ஐரோப்பிய வரலாற்றில் அறிவியல் புரட்சிக்கு பின் பெரும் யுத்தங்கள் நிகழ்ந்தன. பரிசுத்த வேதாகமத்தை விட்டு முற்றிலும் விலகிய சிந்தனை, மறுமலர்ச்சி,கண்டுபிடிப்புகள் முதலியவற்றை திருச்சபை எதிரத்து வந்தது.

றாஷித்: ஒரு புறத்தில் நீங்கள் கூறுவது சரிதான். என்றாலும் அவ்விடயம் இஸ்லாத்திற்கு பொருந்தாது. மார்க்கத்தைப்பற்றி நீங்கள் கூறியது சரி. என்றாலும் இஸ்லாம் அத்தோடு ஆரைய்ச்சிகளால் பெறப்பட்ட சிந்தனையை அல்லாஹ், திருக்குர்ஆன், திருத்தூதர் ,நபி ஸல் அவர்கள் ஆகியோரைக் கொன்ட நம்பிக்கைகுரிய வழிமுறையாகவும் மாற்றியுள்ளது. நீங்கள் கூறும் மார்க்கம் மற்றும் சிந்தனை கிடையிலான மோதலை இஸ்லாமிய வரலாற்றில் எங்குமே காணமுடியாது.

ரஜீவ்: என்ன ஒரு ஆச்சிரியம்! உங்களுடைய வேதநூல் அறிவு, சிந்தனை, ஆராச்சி முதலியவற்றிட்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறதா?!

மைக்கல்: மண்டபம் மூடுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என நினைக்கிறேன். உறையாடலை இத்தோடு நிறுத்திவிட்டு நாளை தொடருவோம்.

ரஜீவ்: நாளை எனக்கு வேளையிருக்கிறது. நாளை மறுதினம் சின் நதிக்கரையோரம் நான் செல்லவிருக்கும் சுற்றுலாவுக்கு நீங்களும் என்னோடு வந்தால் மிக்க சந்தோசமாக இருக்கும்

மைக்கல், றாசித்: நல்லது, அவ்வாறே




Tags: