டேல் கார்னகி

quotes:
  • அல்லாஹ்விடமே உதவி தேடு
  • சிலவேளை, மனநோய் மருத்துவமனையில் இத்தருணம் வரை கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், எவ்வித உதவியோ, தொடர்போ இல்லாமல் வாழ்கைப் போராட்டத்தை மேற்கொள்வதற்குப் பதிலாக இறை உதவியை நாடியிருந்தால் அவர்கள் இன்னேரம் பாதுகாப்பாய் இருந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன”


  • மார்க்கத்தைப் பின்பற்றுபவனும், நோயாலிகளும்
  • முன்பெல்லாம் மனிதர்களிடத்தில் மார்க்கத்திற்கும் அறிவியலுக்கும் மத்தியில் பாரிய முரண்பாடுகள் காணப்பட்டன இதற்கான விடை கண்டறியப்படாமலேயே இது ஓய்ந்துவிட்டது ஆனால் தற்போதை நவீன மனோதத்துவ வளர்ச்சியில் இதற்கான விடை கிடைத்துள்ளது மனோதத்துவ நிபுனர்களின் கூற்றுப்படி மார்க்கத்தைப் பின்பற்றுவதானது (இறை நினைவு,தொழகை) மனிதனிடம் ஏற்படுகின்ற பயம், உளைச்சல், நரம்புமண்டல விறைப்பு போன்றவற்றிலிருந்து அவனை விடுவிக்கின்றது அவனுக்கு ஏற்படும் அரைவாசிக்கும் மேற்பட்ட நோய்களை இது குணமைடையச் செய்கின்றது இது பற்றி டாக்டர் பிரில் குறிப்பிடும் போது, மார்க்கத்தைப் பின்பற்றும் ஒருவர் நிச்சயம் மனநோயால் பாதிக்கப்படமாட்டார்”


  • ஆழ்ந்து சிந்தி
  • பிரெஞ்சு நாட்டு தத்துவமேதையான பேகன் என்பவர் உண்மைதான் கூறியுள்ளார் அவர் கூறியதாவது, ‘குறைந்த தத்துவவியல் ஞானம் ஒரு மனிதனை நாத்திகத்தின் பக்கம் நெருங்கவைக்கின்றது ஆழ்ந்த தத்துவஞானம் ஒருவனை மார்க்கத்தின் பக்கம் நெருங்கவைக்கின்றது’”


  • மார்க்கத்தைப் பின்பற்றுவது நோய்களுக்கான நிவாரணியாகும்
  • மனோதத்துவ நிபுனர்களின் கூற்றுப்படி மார்க்கத்தைப் பின்பற்றுவதானது மனிதனிடம் ஏற்படுகின்ற பயம், உளைச்சல், நரம்புமண்டல விறைப்பு போன்றவற்றிலிருந்து அவனை விடுவிக்கின்றது”


  • “ஆன்மீக இன்பம்”
  • மார்க்கம் என்பது, நீர், மின்சாரம், உணவு போன்ற எமது அத்தியாவசியத்தேவைகளில் ஒன்றாக இருக்க வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன் இதுவும் நாம் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ நமக்கு உதவி செய்கின்றது என்றாலும் மார்க்கம் இதையும் தாண்டி என்னை ஓர் கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது அது தான் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், வீரமும் அது என்னுள் சந்தோசம், மனநிம்மதி, போதுமென்ற மனப்பான்மை போன்றவற்றை ஏற்படுத்தி, என்னுள் இருந்த பயம், பதட்டம், உளைச்சல் போன்றவற்றை என்னை விட்டும் அப்புறப்படுத்தி விட்டது இதுவே எனக்குக் கிடைத்த ஆன்மீக இன்பமாகும்”