சுதந்திரத்தின் பின் பெண்

 சுதந்திரத்தின் பின் பெண்

சுதந்திரத்தின் பின் பெண்

சுதந்திரத்தின் பின் பெண்

மைக்கல், ராஷித் இருவருமாக பகற்போசனம் உண்டனர்........ராஷித் தனது பார்வையை உயர்த்தியவராக நண்பரை நோக்கி:

எனதருமைத்தோழர் மைக்கலே! என்மீது விமர்சன அம்புமாரிப் பொளிந்துவிட்டீர்கள், என் நாகரீகத்தை சந்தேககூண்டுக்குள் அடைத்து விட்டீர்கள்.

மைக்கல்: நண்பரே இது அம்போ, சந்தேகங்களோ அல்ல. சத்தியத்தை நோக்காகக்கொண்ட உரையாடல். இதன்மூலம் சத்தியத்தை நெருங்கி பல சுற்றுக்களை கடந்துவிட்டோமேன நினைக்கிறேன். அத்தோடு உங்களினால் கருத்துக்களை ஏற்கக்கூடிய பரந்துபட்ட உள்ளத்தை பழக்கப்படுத்திக்கொண்டேன். நான் முன்னர் கூறிய வார்த்தைகளில் ஏதாவது உங்களை துன்புறுத்தியதா?

ராஷித்: இல்லை, துன்புறுத்தவில்லை.. என்றாலும் ஒரு வடிவம் முழுமையடைய வேண்டுமெனின், அதன் அனைத்து பக்கங்களையும் கடப்பது அவசியமென நினைக்கிறேன். உங்களுடைய நாகரீகத்திற்கும் எங்களுடைய நாகரீகத்திற்கும் இடையிலுள்ள பெண்களின் நிலமைகளை ஒப்புநோக்குவதால், அவ்வடிவம் முழுமையடையுமென நினைக்கிறேன். கடந்த எங்களுடைய உரையாடலில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பெண்கள் தொடர்பான சில விளக்கங்களைப் பெற்றுக்கொண்டோம். ஆகவே இது தொடர்பாக உங்களுடைய நாகரிகக் கண்ணோட்டத்தையும் பார்க்கலாமே...

மைக்கல்(சிரித்தவராக): ஆ.. இதோ.. இந்தவிடயம்தான் அம்புகளுக்காக எனது உள்ளத்தையும் (சந்தேகக்)கூண்டிற்கான கதவுகளையும் திறந்து வைக்கிறது.

ராஷித்(சற்று புன்னகைத்தவராக): ஏன் நாங்களே எங்களை ஒரு முறுகல் நிலைக்குத் தள்ள வேண்டும்? ஏற்கனவே கூரியதற்கிணங்க, இவ்வுரையாடல் சத்தியத்தை சென்றடைவதற்காக ஒருவரையொருவர் உதவிபுரிவதை நோக்காகக்கொண்டிருப்பது நல்லது.

மைக்கல்: ஆம், முழுமையாக உடன்படுகிறேன்; எங்கிருந்து ஆரம்பிக்கலாமென விரும்புகிறீர்கள்?

ராஷித்: முதலாவதாக.. பண்டைய நாகரீகங்களில் பெண்ணுடைய அந்தஸ்த்தைப் பற்றி பார்க்கலாம்.

மைக்கல்: பெண்கள் தொடர்பான கண்ணோட்டம் ஒருவருக்கொருவர், கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் என அனைத்திலும் வேறுபடுவதால், அது ஒரு பிரச்சினையே ஒரு பிரச்சினையே அல்ல.

ராஷித்: அது சரிதான், அதேநேரம்... ஒரு தனி நபருடைய கோட்பாடுகளை பிரதிபலிக்கக்கூடிய, மூலக்குறிப்புகளை விட்டும் நாம் பராமுகமாக இருந்து விட முடியாது. மூலக்குறிப்புகள் எனும்போது தகவல்களைக்கொண்ட மூலநூல்களை மாத்திரம் நான் நாடவில்லை, மாறாக தனி மனிதனுடைய சிந்தனை, கலாசாரம் முதலியவற்றில் தாக்கம் விளைவிக்கக்கூடிய அணைத்தையும்தான். சில வேளை நாட்டுப்புறத்தை சித்தரிக்கும் கட்டுக்கதைகளாகவும் இருக்கலாம்.... அந்த வகையில் மூலாதாரங்கள் அதன் வளர்ச்சியிலும், எழுச்சியிலும் தாக்கம் விளைவிக்கக்கூடியன.

மைக்கல்: பெண்கள் தொடர்பாக பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் ஏனைய வேதநூட்களில் உள்ளவற்றிட்கு பெரியஅளவில் வித்தியாசப்படாது என நினைக்கிறேன்; அதேபோன்று, எங்களுடைய பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் அதிகமானவை உங்களுடைய வேத நூலான குர்ஆனில் உள்ளவற்றிக்கு ஒத்துப்போவதை காணலாம்; இவற்றில் பெண் படைக்கப்பட்ட விதம்; அவள் ஆணிலிருந்து படைக்கப்பட்டால், முதல் தவறுக்கும், சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கும் காரணமாக இருந்தால், மற்றும் அவளுடைய சமூக நிலை போன்ற அம்சங்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

றாஷித்: நீங்கள் இறுதியாகக் கூறிய சில விடயங்களுடன் முரண்படுகிறேன். அதாவது; முதல் தவறு மற்றும் ஆதம், ஹவ்வா ஆகியோர் சுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டமை சம்பந்தமாக வேதாகமத்தில் வந்துள்ள விளக்கங்கள் குர்ஆனில் உள்ளவற்றிட்கு முரண்படுகின்றன. ஆதாம் அவர்களை ஷைத்தான் ஏமாற்றியதற்கு ஹவ்வா பொருப்பல்ல என்றே அல்குர்ஆனில் வந்துள்ளது. அதேபோன்று சுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டதற்கான பொறுப்பு ஒரு பெண் மீது சுமத்தப்படமாட்டாது.

வேதாகமத்தில் பெண்களைப்பற்றி குறிப்பிடும்போது; பெண்குழந்தைகளின் பிறப்பு தாய் மார்களின் அசுத்தத்தை பண்மடங்காக்குகிறது என வந்துள்ளது. ஒரு தாய் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தால், ஏழு நாட்கள் அசுத்தமாக இருப்பதாகவும்; அதேநேரம் பெண்குழந்தையைப் பெற்றெடுத்தால், இரு வாரங்கள் அசுத்தமாக இருப்பதாகவும் இன்ஜீல் வேதம் குறிப்பிடுகிறது.

கிறிஸ்தவ மதத்தில் பெண்கள் தேவாலயத்தில் வாய்திறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளார்கள்; பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் முதலாம் கொன்சொஷ் கடிதத்தில் குரிப்பிடப்பட்டுள்ளதாவது: “தேவாலயங்களில் உங்களுடைய பெண்கள் மௌனமாக இருக்கட்டும், ஏனென்றால் அங்கே அவர்களுக்கு பேசஅனுமதியில்லை, மாறாக அவர்கள்(வேதாகம)சட்டம் கூறுவதைப்போன்று அடிபணியட்டும், எனினும் அவர்கள் எதாவது ஒன்றை கேட்கவிரும்பினால் வீட்டினுள் அவர்களின் ஆண்களிடம் கேட்கட்டும். ஏனெனில் தேவாலயத்தில் பெண்கள் பேசுவது வெறுக்கத்தக்கது”... இவ்வாறான விடயங்கள் குர்ஆனில் இல்லை.

மைக்கல்: புரோட்டஸ்த்தாந்து மதச்சீர்திருத்த இயக்கம், ஐரோப்பிய மறுமலர்ச்சி, பிரான்சியப்புரட்சி, கைத்தொழில் புரட்சி முதலியவற்றின் தாக்கங்கள், அதேபோன்று கிரேக்கக, உரோம கலாச்சார வேர்கள் என்பன எம் சமூகத்தில் ஊடுருவவில்லையாயின் அதன் வலர்ச்சியை விளங்கிக்கொள்ள முடியாது போய்விடும்.

ராஷித்: கிரேக்க மற்றும் உரோம கலாச்சாரங்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள், ஆனால் அதிலே அக்காலம் தொடக்கம் நாங்கள் காணக்கூடிய இற்றைய நவீன காலம்வரை பெண்கள் தொடர்பான கண்ணோட்டத்தில் பெரும்புரல்வு காணப்படுகிறது. நாம் கிரேக்க காலத்து பெண்களின் வரலாற்றை பிரட்டிப்பார்ப்போமேயானால், சுதந்திரம்,,சமூக அந்தஸ்த்து என அனைத்தும் பறிக்கப்பட்டனவாகவே இருந்தாள்; அவளை வாங்குவதும், விற்பதுமான ஓர் மிருகமாகக் கருதினார்கள். நிர்வாக உடமையை அவளிடமிருந்து பறித்தார்கள், சட்ட ரீதியான அனந்தரச்சொத்திலிருந்து அவளை தடுத்தார்கள். கிரேக்க நாகரீகம் சடுதியாக முன்னேறி வளர்ச்சியடைய ஆரம்பித்தபோது அந்நாகரீக பெண்களின் நிலை மிகதுரிதமாக தீவிர அமைப்பபில் மாற்றமடைந்தது. கழகங்களில் பங்குபற்றவும், ஆண்களுடன் இரண்டரக்கலக்கவும் ஆரம்பித்தனர். இவ்வாறான நிலை விபாச்சாரம் போன்ற மானக்கேடானவைகள் பரவுவதற்கு இட்டுச்சென்றது. கலை, அரசியல் முதலியவற்றில் கேந்திரஸ்த்தளமாக விபாச்சார விடுதிகள் தோற்றம் பெற்றன. இலக்கியம்,கலை என்ற பெயரில் பெண்களின் நிர்வாண சிலைகள் வடிக்கப்பட்டன.

பெண்கள் தொடர்பான ரோம நாகரீகத்தின் நிலைப்பாடு சம்மந்தமான பெறப்பட்ட தகவல்களின் சில முரண்பட்டவைகளாயினும், அவை அடிப்பை அம்சத்தில் ஒன்று பட்டவையே. அவ்வடிப்படை அம்சம் யாதெனில்; பெண்களை மதிப்பிடுதலாகும். ஒரு ஆண் அவளை விரும்பியவாறு நிர்வகிக்கலாம் என்று சொல்லும் அளவு அவளுடைய அந்தஸ்த்து மிகக்கீழ்த்தரமாக கணிக்கப்பட்டது. வாழ்கையில் பல கட்டங்களிலுள்ள சிவில் உரிமைகளில் பெரும்பாலானவற்றை விட்டும் உரோம சட்டங்கள் அவளைத்தனிமைப்படுத்தின. பின்னர் பெண்கள் தொடர்பான உரோம நாகரீகத்தின் கண்ணோட்டம் மாற்றமடையத்துவங்கியது. அவ்வாறே அவர்களுடைய ஒழுங்கு, குடும்ப சம்பந்தப்பட்ட சட்டங்கள், விவாக ஒப்பந்தம், விவாகரத்து என அனைத்தும் மாற்றமடையத்துவங்கின. திருமண ஒப்பந்தம் என்ற ஒன்று அவர்களிடம் இல்லை என்று கூறும் அளவு நிலைமை தலைகீழாக மாறியது. ஆட்சி, அனந்தரச்சொத்து முதலிய அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட்டன. பின்பு அவர்களின் பார்வை சட்டரீதியாக அன்றி ஆணிற்கும், பெண்ணிற்கும் மத்தியில் நிலவக்கூடிய உறவுகள் மற்றும் தொடர்புகளை நோக்கி நகர்ந்தது.

மைக்கல்: அத்தோடு நானும் ஒன்றைக்கூறுகிறேன்: பெண்கள் தொடர்பான உரோம, கிரேக்க நாகரீகக்கன்னோட்டங்களுக்கும், ஆன்மீகக்கன்னோட்டத்திற்கும் இடையிளுள்ள தாக்கங்கள் ஐரோப்பிய உலகம் கிறிஸ்த்தவ மதத்தில் நுழைந்ததன் விளைவாக எற்பட்டவை. அவர்கள் வாழ்ந்த காலகட்டத்திலிருந்த கிறிஸ்த்தவ திருச்சபை மதகுருக்களுடைய கருத்துக்கள் பெண்கள் தொடர்பான அவர்களுடைய கான்னோட்டத்தில் தாக்கம் செலுத்தின.

றாஷித்: ஆம் முன்னைய கிருஸ்தவ ஆண் சமூகம் உரோம சமூகத்தில் பரவிக்காணப்பட்ட மிக மோசமான பண்புகளை பின்பற்ற துவங்கினர், இதனால் அவர்களை விட்டும் பிரிந்து சென்றிருந்த அப்பண்புகள் அவர்களை மீண்டும் ஆட்கொண்டன... மாது என்பவள் ஷாத்தானின் வாயல், அவளுடைய அழகு இப்லீஸின் ஆயுதம் எனவே அதிலிருந்து பாதுகாப்பு பெறவேண்டுமென்றும் பகிரங்கமாக அறிவித்தனர். இவையனைத்திற்கும் அவளே பொருப்புதாறியெனவும் கருதினர். மேற்க்கத்தியர்கள் பெண்ணை துச்சமாக கருதக்கூடிய இந்நிலை மத்திய நூற்றாண்டு முழுவதும காணப்பட்டது. அதுமட்டுமன்றி பெண்ணென்பவள் சமூக அந்தஸ்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டவள் என்று என்னும் அளவு இந்நிலை பாரசீகர்களின் காலம் வரைத்தொடர்ந்தது. கணவனுடைய அனுமதியின்றி சொத்தில் எந்தவொன்றையும் நிர்வக்கிக்கமுடியாத ஓர் அற்பப் பிராணியாக கருதப்பட்டாள்.

மைக்கல்: நண்பரே நாங்கள் பழமையான வரலாற்றைப்பற்றியல்லவா கதைத்துக்கொண்டிருக்கிறோம்?! இதை ஒருபுறம் வைத்துவிட்டு தற்கால மாற்றத்திற்கு காரணமான ஐரோப்பிய மறுமலர்ச்சி, பிரான்சியப்புரட்சி மற்றும் அதைத்தொடர்ந்து வரக்கூடிய காலங்ககளைப்பற்றி உரையாடலாம்.

றாஷித்: இவை வெறும் வரலாறுகள் அல்ல; இதற்கும் மேற்கத்திய பெண்ணின் இன்றைய நிலைக்கும் மத்தியில் பலமான தொடர்புகள் இருப்பதை அவதானிக்கவில்லையா?

இவ்விரு நிலைகளும் சற்று ஒரேமாதிரியாக இருப்பதை கவனிக்கவில்லையா?

மைக்கல்: எப்படிக்கூறுகிறீர்?

றாஷித்: பெண்களை உள்ளாசப்பொருளாக பயன்படுத்தப்படுகிரார்களே! பெண் எல்லாவிதத்திலும் ஒரு ஆணுக்கு சமமானவள் என்ற சட்ட அறிக்கை வெளியிடப்பட்டபோது முழுச்சுதந்திரத்தையும் அவள் பெற்றுவிட்டதாக நினைத்தாள், ஆனால் அவள் இயல்பிலேயே ஒரு ஆணைச்சார்ந்திருப்பவள் என்றடிப்படையில் அவர்கள் கைகளில் தவழும் ஒரு விளையாட்டுப்பொருளாக மாறிவிட்டால் என்பதை உணர்ந்தாள். .இவ்வாணாதிக்கம் இருவதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தொடர்ந்திருந்தது.

மைக்கல்: ஆனால் இறுதியில் அவள் முழு உரிமையையும் பெற்றுக்கொண்டாள்; எல்லாத்துறைகளிலும் ஆணுக்குச்சமமானவளாக மாறிவிட்டாள்; அனைத்து உத்தியோகங்களிலும் நியமிக்கப்பட்டாள்.

றாஷித்: பேரளவில் அவள் உரிமையை பெற்றுக்கொண்டாலும் இன்று ஆண்கள் சுகம் அனுபவிக்கும் ஒரு மோகப்பொருளாகவும்,களியாட்டங்களில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வேடிக்கைப்பொருளாகவும் மாறிவிட்டாள். இது பெண்களுக்கு புரியும் மிகப்பெரும் அநியாயம். பெண்கள் வர்த்தக விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து பல நாடுகளில் அவர்கள் ஆர்ப்பாட்டமும் மேற்கொண்டனர்.

சுவீடன் நீதிபதி ப்ரிகன் ஒப் ஹார் இதைப்பற்றி குறிப்பிடுகையில் “சுவீடன் பெண் உண்மையான சந்தோஷத்தைக் கொடுத்து மிகப்பெரும் துண்பத்தை விளைக்கு வாங்கிவிட்டாள்.” என தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளில் பெண் உரிமை எவ்வித அர்த்தமற்ற சுலோகமாக இருப்பதைப்பற்றி ஐரோப்பிய ஆணைக்குழு அறிக்கை வெளியிடுகையில், ஐரோப்பிய நிருவணங்கள் உயர் நிர்வாக உத்தியோகங்களில் பெண்கள் பணிபுரிவதற்கான தடையை நீக்க போதிய நடவடிக்கையெடுப்பதில்லை, எனத்தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழு சமூக அலுவலக பொறுப்பாளர் டயமன் போலோ குறிப்பிடுகையில் “தொழில் மற்றும் வியாபரச்சந்தையில் பணிபுரியும் ஆண் , பெண்களுக்கிடையிலான எண்ணிக்கையில் பாரிய வித்தியாசம் காணப்படுகிறது . ஐரோப்பாவில் அரசதுறை உயர்மட்டப்பிரிவில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 25% மாக இருக்கக்கூடிய அதேநேரம் தனியார்துறையை எடுத்துக்கொண்டால் பிரான்சில்2% ,ஜெர்மனியில்3%,பிரித்தாணியாவில் 6.3% என மிகசொற்பமானவர்களே பணிபுரிகின்றனர். வங்கிகளில் வெறும் 5% மானவர்களே பணிபுரிகின்றனர்.” எனத்தெரிவித்தார்.

ஆண்களின் கொடுப்பணவுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அதில் 16% இலும் குறைவாகவே பெறுகின்றனர்.

மைக்கல் (குறுக்கிட்டவராக): புகையிரதம் இறுதி நிலையத்தை வந்தடைந்துவிட்டது ..வாருங்கள் சென்று எங்கள் பொதிகளை எடுபபோம்.




Tags: