கடவுளை அறிந்துகொள்

 கடவுளை அறிந்துகொள்

கடவுளை அறிந்துகொள்

கடவுளை அறிந்துகொள்

சீன் நதிக் கரையோரம் குறிப்பிட்ட தினத்தன்று தெளிவாத மாலைப்பொழுதில் நண்பவர்கள் மூவரும் சந்தித்து கொண்டனர். ரஜீவ் தனது நண்பவர்கள் இருவரையும் உல்லாசமாக நீராவிக்கப்பல் விடுவதற்கு அழைத்தார். நண்பவர்கள் மூவரும் நதிக்கரைகாட்சிகளையும், அதைச் சூழவுள்ள பசுந்தரைகளையும் கண்டுகளித்தனர். றாஷித் அடி வானத்தை பார்த்தவராக நண்பர்களுடன் உரையாட ஆரம்பித்தார்:

நதிகள், கடல்கள். தாவரங்கள், விலங்குகள், மலைகள், மனிதன் என இவ்வுலகில் நாம் கண்களால் பார்க்க்கூடிய மற்றும் பார்க்க முடியாத அனைத்தும் அவற்றை மிக நுட்பமாகவும் கட்சிதமாகவும் உருவாக்கிய ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்பதை சான்று பகர்கின்றன. என்ன.. நான் கூறுவதை ஏற்கிறீர்களா?

ரஜீவ்: கடந்த அமர்விற்கு முன்னருள்ள அமர்வில், இவ்வுலகை படைத்த படைப்பாளன் இருக்கவேண்டும் என்ற விடயத்தில் நாம் ஒன்று பட்டோம். ஆனால் அதோடு தொடர்புபட்ட சில சிக்கல்களையும் நாம் கலந்தாலோசிப்பது நல்லது.

மைக்கல்: உன்மையான கடவுள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் தொடர்பாக பொறியியலாளர் றஜீவ் எழுப்பிய கேள்விவிலிருந்து இன்றைய விவாதத்தை ஆரம்பிப்பது நல்லதென நினைக்கிறேனே.

றாஷித்: நாங்கள் வாழக்கூடிய இப்பிரபஞ்ச உருவாக்கத்திற்கும் நீங்கள் எழுப்பிய கேள்விக்கும் பலமான தொடர்புள்ளது. அல்லாஹ் ஓருவனே உண்மையான ஏக இறைவன் என்ற நம்பிக்கையின் அடிப்படை இப்பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் உருவாக்கம், அதில் உள்ள படைப்பினங்களின் நோக்கங்கள் என இப்பிரபஞ்சம் தொடர்பான சரியான கண்னோட்டத்தில் தங்கியுள்ளது.

மைக்கல்: இப்பிரபஞ்சத்தை படைத்த இறைவன் இருக்கிறான் என்பதை நாம் நம்புகிறோம். என்றாலும் அவ்விறைவன் தொடர்பான எண்ணக்கரு மதங்களுக்கேற்ப வேறுபடுகிறது. இவ்வேறுபட்ட கண்ணோட்டங்கள் மக்களை இது தொடர்பாக ஆய்வு செய்வதைவிட்டும் விரட்டி வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாவிடிலும் ஒரு நாஸ்திக வாழ்க்கையை நோக்கி இட்டுசெல்கின்றன.

றாஷித்: நன்பரே! நீங்கள் கூறுவது உன்மைதான். எனினும் அவ்வாறு விரன்டோடுவது அவர்கள் வணங்குவதற்காக ஏதோவொன்று தேவையென்பதையும் உணர்த்தத் தவறவில்லை. அது மட்டுமன்றி அவர்களிள் சிலர் தங்கள் மனோ இச்சையை கடவுளாக எடுத்துகொள்கின்றனர். இறைவன் தொடர்பான தவறான கண்ணோட்டத்திலிருந்து வேறுவழியின்றி விரண்டோடக்கூடிய நாஸ்திகர்கள் அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுகொள்வதைவிட்டும உண்மையான கடவுளுக்குரிய எந்த பண்புகளும் அற்ற சிலதை கடவுள்களாக எடுத்துக்கொள்கின்றனர்.

ரஜீவ்: எங்களுடைய தலைப்பை நோக்கினால் ஒன்றைக் கூறலாம். அதாவது; கடவுள் என்பவன் அனைவராலும் விரும்பப்படக்கூடியவனாகவும் அச்சப்படக்கூடியனாகவும் இருப்பது அவசியமாகும். அதேநேரம் மனிதன் அவனுடைய (கடவுளுடைய) தேவையை உணர்பவனாகவும் இருக்கவேண்டும். எனினும் யதார்தத்தில் இப்பன்புகள் அதிகமானோரை ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை எடுத்துக்கொள்ளகூடிய நிலையை தோற்றுவிக்கின்றன.

றாஷித்: நீங்கள் கூறுவது மிக அருமையானது. சரியான விடயம்; ஆரம்பித்த இடத்திற்கே வருகிறுது. கடவுளின் அவசியத்தை ஏற்றுகொள்வதனூடாக இப்பிரபஞ்சத்தை நிர்ணயித்த, அதை மூலப் பொருளின்றி உருவாக்கிய ஓர் படைப்பாளன் இருக்கிறான் என்ற விடயத்தில் உடன்படுகிறோம். அப்படைப்பாளனையே இறைவன் என அழைக்கிறோம். அவன் எங்களையும், உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவன். உண்மையான அவ்விறைவனே வணக்கத்திற்கு தகுதியானவன். அவனை மாத்திரமே வணங்கவேண்டும். அதாவது; நீங்கள் கூறியதைப் போன்று அவனை தவிர வேறு யாறையும் பயப்படவோ, அன்புகொள்ளவோ, ஆதரவுவைக்கவோ கூடாது. இதிலிருந்து நாங்கள் உண்மையான கடவுளின் பண்புகளை அடையாளப்படுத்தலாம்.

ரஜீவ்: நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொன்டால் எங்களுக்கு இவ்வாறு கூறலாம்: அனைத்தையும் இரட்சிக்கும் அக்கடவுள் எவ்வாறு ஒருபடைப்பாளனாக இருக்கவேன்டுமோ அவ்வாறே நித்தியஜீவனாகவும் இருக்க வேண்டும்.

றாஷித்: நீங்கள் கூறுவது சரி, அப்படியாயின் அக்கடவுள் ஒரு படைப்பாக இருக்கமுடியாது என்ற இன்னொரு தோற்றத்தையும் அது கட்டாயபடுத்துகிறது. படைப்பாளன் ஒரு படைப்பினமாக இருக்கமுடியாது. அவ்வாறு இருப்பின், அவன் எங்களைப்போன்ற படைப்பினமே, எனவே அவனை வணங்கவோ வழிப்படவோ கூடாது; அதேபோன்று எந்தவோரு படைப்பினமும் படைப்பாளனாக முடியாது.

மைக்கல்: அப்படியானால் படைப்பாளன் என்பதன் பொருளை எப்படி நாம் அறிந்துகொள்வது?

றாஷித்: சுறுங்கக்கூறின்; படைப்பாளன் என்போன் வஸ்துக்களை முன்னூதாரணமிண்றி உருவாக்கும் ஆற்றல் படைத்தவன்; அவற்றை பல நோக்கங்களுக்காக படைப்பவன்.

படைப்பினங்களை பொருத்தமட்டில் அவற்றிக்கு ஆரம்பமும் முடிவும் இருக்கவேண்டும். அவற்றின் சக்திகளும் ஆற்றல்களும் வரையறுக்கப்பட்டவை. பிறரின் உதவி அவைகளுக்கு எப்பொழுதும் தேவை.

ரஜீவ்: ஒரு படைப்பாளனாக இருந்தால் அவன் படைத்தவற்றிக்கு உரிமையானவனாகவும் இருக்க வேண்டும்.

வானங்களில், பூமியில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது என்று நாம் கூறினால், அவை அனைத்தையும் அவன் நன்கு அறிந்திருப்பது அவசியமாகும். அவற்றில் ஏதேனும் ஒன்று அவனை விட்டும் மறையுமானால், அது தனித்துவமான ஒன்றாக மாறிவிடும். நாங்கள் படைப்பினங்களில் காணக்கூடிய அவனுடைய நுற்பங்களும் திறைமைகளும் அவன் பரிபூரணம் என்பதற்கான ஆதாரமாகும்.

றாஷித்: வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. எனவே அவற்றை நிறுவிகிப்பதும் அவனாகவே இருக்கவேண்டும். அவைகளை நன்கு அறிந்திருப்பதால், வஸ்துக்களின் நியதிகளையும், சட்டங்களையும் இயற்றும் பணி அவனுக்கே உரியது.

மைக்கல்: நானும் சில பொருட்களின் சொந்தகாரன்; எனக்கும் அதிகமான விடயங்களைபற்றி தெரியும், அதனால் நானும் கடவுளின் பண்பைப் பெற்றவனாகி விடுவேனா?... அது சரியான ஒன்றாக எனக்குத் தென்படவில்லை.

றாஷித்: நண்பரே நீங்கள் குறிப்பிட்ட விடயம் மிகமுக்கியமானது. இவ்வாறு ஒவ்வொறு பண்பாக ஆராய்வது அவற்றின் முக்கியத்துவங்களை நீட்டி கொன்டே செல்லும். எனவே அவற்றிக்கான பிரமானமாக ஒரு பொது விதிமுறையை கையாண்டு அதிலிருந்து ஒவ்வொரு பண்பாக எடுத்துநோக்கலாம். இஸ்லாமிய கண்ணோட்டத்தினாலான அப்பொது விதிமுறையை கூற எனக்கு அனுமதி தாருங்கள்.

மைக்கல், றஜீப் இருவருமாக:தயவு செய்து.

றாஷித்: சுறுங்க கூறின்:

முதலாவது: அல்லாஹ்வின் தனித்துவமான பண்புகளை; குறைபண்புகள், நிறைபண்புகள் என இரு வகையாக நோக்கலாம்

நிறைபண்புகளை பொருத்த மட்டில் அவற்றிலுள்ள நற்பண்புகளால் அவனை வர்ணிக்கலாம். அவற்றின் (நற்பண்புகளின்) எதிர்கருத்தை அறிவிக்க கூடிய பண்புகளை விட்டும் அவன் தூய்மை படுத்தப்பட வேண்டும் .

குறைபண்புகளை பொருத்தமட்டில் அவற்றிலுள்ள பண்புகளை விட்டும் அவனை தூய்மை படுத்தவேண்டும். அவற்றின் எதிர்கருத்தை அறிவிக்க்கூடிய பண்புகளால் அவனை வர்ணிக்கவேண்டும்.

நிறைபண்புகளிலுள்ள எதிர்மறை பண்புகளை விட்டும் அவனை தூய்மை படுத்துவது, அவற்றிலுள்ள நேர்மறை பண்புகளால் அவனை வர்ணிப்பதை கட்டாயபடுத்தும் அவ்வாறே குறைபண்புகளும்.

இரண்டாவது: படைப்பினங்கள் வெறுக்கக்கூடிய ஒரு பண்பை படைப்பாளனுக்கு சேர்க்கக் கூடாது. அதாவது; படைப்பினங்களை விட்டும் தூய்மை படுத்தப்படும் குறைமிக்க, இழிவான பண்புகளினால் இறைவன் எவ்வாறு வரணிக்கபடுவான்? எனவே, அவன் படைப்பினங்களை விட அவற்றைவிட்டு நீங்கியிருக்க தகுதி படைத்தவன்; அனைத்திலும் பூரணமாணவன்.

மூன்றாவது: படைப்பினத்திற்கும், படைப்பாளனுக்கும் மத்தியிலுள்ள பூரண இடைவேளை. அதாவது; படைப்பாளனைபோன்று எதுவுமில்லை. ஆயினும் அன்பு, இரக்கம், அதிகாரம் என இரண்டிக்கும் (படைப்பாளன்,படைப்பு) சேர்க்கப்படகூடிய பண்புகளை பொருத்தமட்டில் அவற்றிக்கிடையிலான அர்த்தம் வித்தியாசப்படும். ஏனெனில்; படைப்பினங்களின் பண்புகளோ குறைமிக்கவை. ஆனால் இறைவனுடைய பண்புகள் எதிர்மாற்றமானவை; பரிபூரமானவை.

மைக்கல்: நீங்கள் கூறுயதை உதாரணங்கள் கொண்டு விளக்கக்கூடாதா....

ரஜீவ்: நீங்கள் குறிபிட்ட புள்ளியை நடைமுறை உதாரணங்களோடு விளக்கினால் என்ன...

றாஷித்: நல்லது, முதற்குறிப்பு: பலவீனம் ஒரு குறைபண்பு என்பது அனைவரும் ஏற்றுக்கொன்ட விடயம். அவ்வாறே பிரவற்றில் தங்கியிருப்பதும் ஒரு குறைபண்பாகும். உண்மையான இறைவன் இவ்வாறான பண்புகளை பெற்றிருக்கக்கூடாது; மாறாக இவற்றை விட்டும் தூய்மைபடுத்தப்பட வேண்டும். அதேநேரம் இவற்றிக்கு எதிர்மையான பலம், சக்தி, யாவரையும் விட்டு தேவையற்றல் போன்ற பண்புகளால் போற்றப்படவேண்டும். இதன் காரணமாகவே எங்கள் வேதநூல் அல்குர்ஆன் மூன்றே சொற்களால் ஈஸா(அலை), அவருடைய தாயார் ஆகிய இருவறையும் தெய்வீகத்தன்மையற்றவர்கள் என கூறுகிறது. {அவ்விருவரும் மணிதர்களைப் போலவே உணவு உட்கொன்டு வந்தனர்} [அல் மாயிதா: 75] குறைபண்புகளில் ஒன்றான பசியை உணர்பவன் உணவை தேடிசெல்வான். யார் உணவை உட்கொள்கிறாரோ, அவர் அதன்பால் தேவையுடையவராவார். அந்த அடிப்படையில் அவர்கள் இருவரும் கடவுளாக இருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் அவசியமின்மை என்ற இறை பண்புகளை பெற்றவர்கள் அல்ல.

அவ்வாறே பிள்ளை பெற்றெடுத்தலும்; உண்மையான இறைவன் தேவையுடைய படைப்பினங்களுக்கு ஒப்பாவதை விட்டும் தூய்மையானவன். எனவே யார் பிள்ளையை (வாரிசு, உதவி அல்லது வேறு ஏதாவது தேவைக்காக) வேண்டுகிறாரோ, இவையனைத்தும் ஓர் உன்மையான இறைவனுக்கு கூடாத குறைபண்புகளாகும்.

இறண்டாவது குறிப்பு: அனைத்து புத்திஜீவிகளும் பலவீனம் என்ற பண்புடையவர்களாக இருப்பதை வெறுக்கின்றனர். எல்லோரிலும் மேலான கடவுள் அப்பண்பை விட்டும் மிகமிக தூய்மையானவன். அது மட்டுமன்றி அதற்கு நேர்மறை பண்பான பலம், வல்லமை போன்ற நிறைபண்புகளை அவன் பெற்றிருக்கவேண்டும். எனவே இயேசு கிறிஸ்து தனக்கு ஏற்படக் கூடிய ஆபத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லையெனின், (சிலரால் கடவுளாக ஏற்றுகொள்ளபட்ட) சிலைகளும், மிருகங்களும் அவற்றை அவைகளாலே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லையெனில், அவற்றை வணங்கூடிய பிறரையும் அவைகளால் பாதுகாக்க முடியாது. முடியாத ஒருவர் கடவுளாக இருக்க தகுயற்றவர்.

புத்திஜீவிகள் தங்களை அநியாயக்காரர்கள் என வர்ணிப்பதை விரும்பமாட்டார்கள். அதனடிப்படையில் உண்மையான இறைவணும் அநியாயம் இழைப்பதில்லை. மாறாக நீதமானவன். இவ்வாறு ஒவ்வொரு குறைகளைவிட்டும் அவனை தூய்மை படுத்துவது அவற்றிக்கு நேர்மறையான நிறைகளை சேர்ப்பதற்கு சமன்.

இறுதியாக, மூன்றாவது குறிப்பு: மற்றுமொரு உதாரணத்தை நோக்கலாம்; அறிவு என்ற நற்பண்பிற்கு எதிர்மறைக் கருத்து அறியாமையாகும். இவற்றை நிறை பண்பாக நோக்குமிடத்து அவன் யாவற்றையும் அறிந்தவன், அறியாமையை விட்டும் தூய்மையானவன் என்றே குறிப்பிடவேண்டும். குறைபண்பாக நோக்குமிடத்து அவன் யாவற்றையும் அறியாதவன், அறிவை விட்டும் தூரமானவன் என்றே குறிப்பிடுவோம். ஆனால் ஏக இறைவன் அல்லாஹ் அறிவு என்ற பண்பை பரீபூரணமாக பெற்றிருப்பவன். அவன் யாவற்றையும் அறிந்தவன் அறியாமையை விட்டும் தூய்மையானவன்.

ஆனால் மனிதன் இப்பண்பை ஒப்பீட்டளவிலேயே பெற்றிருக்கிறான். சில விடயங்களை அறிந்திருக்கின்ற அதேநேரம் பல விடயங்களை அறியாமலும் இருக்கிறான். எனவே அவனுடைய பூரணத்துவம் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்டது; இவ்வாறுதான் ஏனைய பண்புகளும். .

மைக்கல்: இருட்டி விட்டதால் சற்று குளிராகவுள்ளது. இன்றைக்கு இது போதும் என நினைக்கிறேன்.




Tags: