ஒரே மனைவி போதுமா?!..

 ஒரே மனைவி போதுமா?!..

ஒரே மனைவி போதுமா?!..

ஒரே மனைவி போதுமா?!..

றாஷித் உடன்பட்ட தவனையில், குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்ததும் வட்ட மேசையில் மைக்கல் தனக்காக எதிர்பாத்திருப்பதைக்கண்டார். அவர் பருகுவதற்காக குடிபானம் ஒன்றையும் தயாரித்து வைத்திருந்தார். அவருக்கு வந்தனம் தெரிவித்துவிட்டு தன்னுடைய இடத்தில் அமர்ந்து கொண்டான் றாஷித்.

மைக்கல்: உங்குக்குப்பிடித்த குடிபானத்தை கொண்டுவந்திருக்கிறேன்; எழுமிச்சப்பழச்சாற்றிலான தேனீர்!.. எப்போதும் நீங்கள் விரும்பியதையே பருக வேண்டும் என நினைக்கிறேன்.

றாஷித்: ம்ம்.. நல்ல வரவேற்பு, இதை நான் மிக விரும்பினாலுமகூட எப்போதும் மாற்றத்தையே விரும்புவேன். அது மனிதனின் பொதுவான இயல்பல்லவா?.

மைக்கல்: ஆம் அதை ஏற்றுக்கொள்கிறேன்.. சரி இவற்றை ஒரு புறம் வைத்துவிட்டு நாம் தலைப்பிற்குச் செல்லலாம். மண்ணிக்கவும், உங்களுக்கு இன்னுமோர் பானத்தை வேண்டவா?

றாஷித்: இல்லை இல்லை.. நன்றி, நீங்கள் வாதத்திற்கு மும்முரமாக தயாராக இறுக்கிறீர்கள் போலும்..

மைக்கல்: அப்படியொன்றுமில்லை, சென்ற சந்திப்பைப்போல் இந்த முறையும் எங்கள் நேரத்தை வேறொரு தலைப்பு எடுத்துவிடாமல் இருக்க வேண்டுமல்லவா?

றாஷித்: அப்படியென்றால்.. தயவுசெய்து.

மைக்கல்: நான் ஏலவே கூறியதைப்போன்று இந்த தலைப்பில் எனது கருத்திற்கு உடன்படுவீர்களென நம்புகிறேன் நான் அறிந்தமட்டில் அக்கொள்கை உங்களுடைய சமூகத்தில் பரவலாக இருக்கிறது.

றாஷித்: ம்.. மிக அறுமை, நானும் பிரச்சினையை விரும்புபவன் அல்ல. இந்த கலந்துரையாடல்களின் நோக்கமே இருவரும் ஓர் பொதுவான தீர்வை எட்டுவதுதான் அல்லது குறைந்த பட்சம் சரியானதையாவது விளங்கிக்கொள்ளவேண்டும். சரி என்ன தலைப்பு.?

மைக்கல்: சுருங்கக்கூறின், திருமன உறவைப் பொருத்தமட்டில் கணவன், மனைவி இரு சாராரிடமும் சமத்துவம் அவசியமென கருதுகிறேன்; இன்னும் தெளிவாக சொன்னால், பலதார மணவுரிமையை இஸ்லாம் ஆகுமாக்கியிறுப்பதை பெண்ணிற்கு புரியும் ஒரு வகை அநியாயமாகவே பார்க்கிறேன். என்ன சரிதானே?..

றாஷித்: எந்தப்பெண்ணை நாடுகிறீர்?

மைக்கல்: பெண்! அவள்தான் மனைவி! இத்தொடர்பில் பெண்ணல்லாத வேறுயாறுமுண்டா?!

றாஷித்: நாம் ஏலவே உடன்பட்டதற்கிணங்க, ஒரு விடயம் சம்பந்தமான ஆய்வு அதன் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய முழுமையான வடிவில் அமைய வேண்டும்.

மைக்கல்: நல்லது, அதற்கும் எமது தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

றாஷித்: சம்பந்தம் இருக்கிறது. அதாவது; பெண்ணென்ற அடிப்படையில் அவளுடைய தனிப்பட்ட நலன், சமுதாய நலன், ஆணுடைய நலன், மற்றும் ஆண், பெண் என இரு சாராருக்குமிடையிலுள்ள வேறுபாடுகள் என அனைத்தையும் கவனத்திற்கொள்ளவேண்டும்.

உடனே மைக்கல் (குறிக்கிட்டவராக): ஆம், இதோ! வேறுபாடுகள் என பெண்ணை ஒதுக்கிவைக்கும் இன்னொரு தலைப்பிற்கு வந்துவிட்டோம். இந்த வேறுபாடுகளெல்லாம் பெண்ணை அடக்கியாள்வதற்காக கீழைத்தேய ஆண்சமூகத்தால் உருவாக்கப்பட்டவை. அதென்ன வேறுபாடுகள்?! ஏன் அவளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ள முடியாது?! இது அச்சமூகவாழ் ஆண்களின் மிலேச்சஉணர்வை பிரதிபலிக்கிறதே?!

றாஷித்: நன்பரே! சற்று அமைதி... என்மீது ஒரே நேரத்தில் பல கேள்விக்குண்டுகளையல்லவா போட்டு விட்டீர்கள். அதை ஒவ்வொன்றாக ஆராயலாம். சரி, முதலில் இதற்கோர் தீர்வு காண்போம். அதாவது: ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை நம்பமாட்டீர்களா?

மைக்கள்: என்ன வேறுபாடுகள்?

றாஷித்: முதலில்... உயிரியல் வேறுபாடுகள்.

மைக்கல்: உயிரியல் வேறுபாடுகள் பல உள்ளன. ஆனால் அவற்றிக்கும் நமது தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

றாஷித்: நான் நம்புகிற மார்க்க அடிப்படையிலன்றி நீங்கள் நம்புகிற அறிவியல், சிந்தனைரீதியாக அவற்றை விளக்குகிறேன்... நண்பரே கேளுங்கள்:

ஆண், பெண் இருவுக்குமிடையிலுள்ள அன்புணர்ச்சியில் வேறுபாடுகளுள்ளன என்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. . பெண்ணின் மரபணு தனிநபர் மற்றும் திறந்த நிலைத் தொடர்பை தூண்டக்கூடிய அதே வேளை ஓர் ஆணின் மரபணு பல்வகைத் தொடர்பை தூண்டக்கூடியது என்ற உண்மையையும். ஒரு நபர் ஒருவரையொருவர் பாதிக்காத வண்ணம் ஒன்றிற்கும் அதிகமான பெண்களை நேசிக்க முடியும் என்ற உண்மையையும் இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது.

ஆணின் பல்வகைமைத்தொடர்பு அவர்களின் உடல் கட்டமைப்பினால் ஏற்படக்கூடியவொன்று. இதற்கு பல்வேறுபட்ட உயிரியல் ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்காவின் யுதா மாநிலத்தின் பல்கலைக்கழக உலவியற்துறை பேராசிரியை லிஸா டயமன்ட் தனது இணயத்தள பக்கமான CNN இல் தெரிவித்துள்ளார்.

பெண்கள் ஆண்களுக்கு மாற்றமானவர்கள்; [Aloxtosen] அலொக்ஸ்டோஸன் என்ற ஓமோன் காரனமாக அவர்களின் முழுக்கவனமும் அவர்களுடைய மேணியில் அல்லது குழந்தையில் தங்கியிருக்குமென பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் (OXFORD) பல்கழைக்கழகத்தின் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆண்களின் மூலையிலுள்ள குறிப்பிட்ட சில பகுதிகள் பெண்களுடைய மூளையை விட பருமனில் பெருதானவை; பெண்ணை விட ஆணிற்கு இரண்டரை மடங்கதிகமான பாலியல் உணர்வை தூண்டக்கூடிய பகுதி மூளையில் இருப்பதால் பெண்ணைவிட ஆணுடைய மூளையில் பெரும் வித்தியாசங்கள் இருப்பதாகவும் புதிய பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நண்பரே! இவ்வாறான வெறுபாடுகளால் நடைமுறையில் தாக்கம் இல்லையென நினைக்கிறீர்களா?!

மைக்கல்: இத்தகவல்கள் உண்மையாக இருந்தால்... தாக்கம் இருக்கலாம்.

றாஷித்: அப்படியென்றால் நீங்கள் கூறிய பலதார(பெண்)தொடர்புடைமைக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சரி, இப்பொழுது நான் உங்களிடம் ஓர் கேள்வியைக் கேட்கிறேன், அதற்கு நீங்கள்.. மிகத்தெளிவாக பதிலளிக்கவேண்டும்; உங்கள் நண்பர்களில் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களில் எத்தனைபேர் பலதாரப் பெண் தொடர்பற்றவர்களாக இருக்கிறார்கள்? நான் உங்களைப் பற்றி ஒன்றும் கூரவில்லை.

மைக்கல்: நீங்கள் என்னைப்பற்றிக் கேட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் அது எங்களிடம் சாதாரன விடயம், ஆனால் திருமணரீதியாக அல்ல.

றாஷித்: அப்படியென்றால்... எங்கள் சமூகத்தில் இருப்பதாக நீங்கள் கூறிய விடயம் மிகப்பெரிய வித்தியாசத்தில் உங்கள் சமூகத்திலும் உண்டு,

அதற்குமுன்.. பலதாரமண வொழுங்குமுறையை இஸ்லாம் புதிதாக உருவாக்கவில்லை மாறாக பண்டய நாகரீகங்களிலும் ஏனைய பரலோகமதங்களிலும் காணப்பட்டது. பண்டயகால ஆண்களிடம் பலதார மணம் எண்னிக்கையில் மட்டுப்படுத்தப்பட்டதாகக்கூட இருக்கவில்லை. சன்னியாசியர் கொர்ஷோம்அல்இஷ்கன்ஸி (கி.பி 960-1040) தடைச்சட்டத்தை அறிவிக்கின்ற வரை மத்திய கால யூதகுலத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. கிறிஸ்தவ திருச்சபையை பொருத்தமட்டில் பதினேழாம் நூற்றாண்டிற்கு முன்னர் பலதார மணம் தடைசெய்யப்பட்டிருக்கவில்லை ஏன் இன்றுகூட மர்மூன் பிரிவினரிடம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

மைக்கல்: அப்படியென்றால்.. இவையனைத்தும் பண்டயகாலத்திற்குரியவை, தற்போதுதான் மனிதன் முன்னேற்றமடைந்துவிட்டானே.

றாஷித்: முன்னேற்றம், நாகரீகமென்பன மனித இயல்பிற்கு முரணானதல்ல. பண்டயகால மனிதன் கால் நடைகளை சாப்பிட்டு, கம்பளிகளை அணிந்துவந்தான். இவ்வாறு இறைச்சி சாப்பிடுதல், கம்பளி அணிதல் போன்றன காலப்போக்கில் நாகரீகமற்ற செயலாக மாறிவிட்டன என்று கூறமுடியுமா ? நிச்சயமாக இல்லை. என்றாலும், நாகரீக எழுச்சியானது மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் முறையில் வளர்ச்சியை ஏற்படுத்தகூடியது எனக்கூறலாம்.. இஸ்லாமும் இதைத்தான் செய்தது.

மைக்கல்: எப்படி?

றாஷித்: பாலியல் தொடர்புகள் உங்களுடைய சமூகத்தில் சாதாரண ஒன்றென கூறினீர்களே. அதுதான் பெண்ணிற்கு புரியும் மிகப்பெரும் அநியாயம்; அவைகளால் மனஅமைதியைக் கொண்டுவரவோ, உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கவோ, அல்லது ஓர் சீரான சமூகத்தை கட்டியெழுப்பவோ முடியாது . பண்டய நாகரீகங்களில் பாலியல் தொடர்புகள் கட்டுப்பாடின்றி காணப்பட்ட நேரத்தில்தான் இஸ்லாம் உதித்தது; பெண்ணிற்கு நீதத்தைப் பெற்றுக்கொடுத்தது; திருமணத்தில் அவளை ஓர் சட்டரீதியான பங்காளியாக மாற்றியது; சமூகக் கட்டமைப்பின் வெற்றிக்காரணிகளில் மிகமுக்கியமான ஒன்றை பாதுகாப்பதற்காக இத்திருமணத்தில் பல விதி முறைகளை வைத்தது... முக்கியத்துவம் வாய்ந்த காரணியென குடும்பத்தைச் சொன்னேன்.

இஸ்லாம் பெண்ணுடைய நலன்களில் கரிசணை காட்டுகிறது; ஒரு ஆண் இச்சையை அடக்கி வைப்பதற்கும் அதை வெளிப்படுத்துவதற்குமான சில வரையறைகளை வைத்துள்ளது. குடும்பக் கட்டமைப்பு உங்கள் நாடுகளில் சீர்குலைந்து காணப்படுகிறதே.

மைக்கல்: எனினும் கணக்கெடுப்புகள் ஆண்களின் பிறப்பு வீதம் பெண்களின் பிறப்பு வீதத்திற்கு சமனானவை என கூறுகின்றன. இந்நிலையில் நாம் பலதார மனவுரிமைக்கொள்கையை அமுல்படுத்திமானால் பல ஆண்கள் மணைவியற்றவர்களாக இருக்கவேண்டிய நிலையேற்படும். இது பாரதூரமானதாகத் தெரியவில்லையா?!

றாஷித்: அதே கணக்கெடுப்புகள்தான் ஆண்களின் ஆயுற்காலத்தை விட பெண்களின் ஆயுற்காலம் அதி கூடியது எனவும், மேற்கத்திய நாடுகளில் வாழும் ஆண்கள் பெண்களை விட அண்ணளவாகவாக ஏழு வருடங்கள் குறைவாகவே வாழுகிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. ஜேர்மனியில் வசிக்கும் ஒரு பெண்ணின் ஆயுற்காலம் சராசரியாக 80 வருடங்கள்; ஓர் ஆணின் ஆயுற்காலம் 70 வருடங்கள்; என்ற அடிப்படையில் காணப்படுகிறது. 1900 ஆம் ஆன்டுகளில் இரண்டு வருட வித்தியாசத்தில் இருந்த இவ்விடைவேளை கடந்த நூற்றாண்டில் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் மிஷ்பன் பல்கலைக்கழக விஞ்ஞானி நடால் க்ரொகர் “ உலகில் பெரும்பாலான நாடுகளில் பெண்களை விட ஆண்கள் மிகக் குறைவான ஆயுட்காலமே வாழ்கின்றனர். ஆணிற்கும் பெண்ணிற்கும் மத்தியில் உள்ள ஓமோன்களின் வேறுபாடும் இதற்குக்காரணமாகும். குறுதிச்சுற்றோட்ட மற்றும் இருதய நோய்களுக்கு காரணமாக அமையும், மரபணுக்களை தூண்டக்கூடிய ஓமோன்கள் ஆணுடலில் உள்ளன.” எனக்குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நானும் ஒன்றைக் கூறுகிறேன்: மோதல்கள், வன்முறைகள், அபாயகரமான வேலைகளிலுள்ள ஆபத்துக்கள், வீதி விபத்துகள் இவையல்லாத இதர நிகழ்வுகள் போன்றவற்றால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். அவற்றில் பெரும்பாலானோர் ஆண்களே.

அதாவது; சமூகத்திலுள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரித்து வருகிறது; உலக நாடுகளில் பெரும்பாலானவற்றின் சனத்தொகைக் கணக்கெடுப்புகளை பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி விதவைகள், விவாகரத்தான பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

எனவே, திருமணம் முடிக்காத பெண்களை உளவியல், சமூக பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க அப்படியே விட்டு விடுவதா, அல்லது சமூகபாதகங்களை ஏற்படுத்தக்கூடடிய விதத்தில் பாலுணர்வுகளை மறைமுகமாக நிறைவேற்றுவதற்கு அவர்களைத் தூண்டுவதா, அல்லது ஓர் சமூகஒழுங்கமைப்பை கடமையாக்கி எவரும் பாதிப்படையாவண்ணம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதா?!

இதைப்பற்றி பிரான்ஸ் சமூக ஆய்வாளர் ஜொன்ஸ்டன் லொபொன் கூறியிருப்பதை பாருங்கள்: “ கீழைத்தேய பலதார மணவுரிமை மிகச்சிறந்த கோட்பாடாகும்; ஓர் சமூகம் விலியுறுத்தக்கூடிய பண்பாட்டு மட்டத்தை அது உயர்த்துகிறது; குடும்பக் கட்டமைப்பை வலுப்படுத்துகிறது. ஐரோப்பாவில் நீங்கள் காண முடியாத அந்தஸ்த்தை ஒரு பெண்ணிற்கு வழங்குகிறது”...

ஹ்ம்ம்...சரி, எனக்கொரு கோப்பை எழமிச்சச்சாறும், தேனீரும் பருகலாமா?




Tags: