உதிரும் ரோஜா

 உதிரும் ரோஜா

உதிரும் ரோஜா

உதிரும் ரோஜா

றாஷித் வட்ட மேசையில் அமர்ந்து, தனது பையில் இருந்த மடிக்கணனியை வெளியில் எடுத்து, அதை இயக்கியவாறு மைக்கலோடு உரையாட ஆரம்பித்தான்.

இன்றிரவு வழமைக்கு மாற்றமாக அறைநிமிட நேர கானொலியொன்றைக் காட்டுகிறேன். அது எங்களுக்கு ஓர்நூற்றாண்டின் வரலாற்றைப் படமாகக்காட்டும் .

(http://www.youtube.com/watch?v=Rb6R7Mmhjq8)

மிகஆர்வமாக திறையை பார்த்தவர்களாக மைக்கல், றாஷித் இருவரும் தமது தலைகளை கணனிக்கு அருகாமையில் கொண்டு சென்றனர்.

மைக்கல்: வாவ்வ்.. மிக அருமையாகவுள்ளது! நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எனது பிரித்தானியாவின் வாழ்க்கை மாதிரியைப் பார்ப்பதையிட்டு பூரிப்படைகிறேன்... பாதையில் செல்பவர்களின் முகத்திலுள்ள வசீகரத்தை பாருங்கள்!.. வாழ்க்கை இயல்பிற்கு மிக நெருக்கமாக இருந்தது.. உள்ளம் குளிர்ந்த எவ்வளவு ஒரு நிம்மதியான வாழ்க்கை.

றாஷித்: காணொலியை இன்னொரு முறை இயக்குகிறேன், நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள்.

றாஷித் காணொலியை மீண்டும் இயக்கிக்கொண்டு மைக்களுடன் பேசலானார்:

இதோ... இந்தப்பெண்ணை பாருங்கள் இவர்கள் இருவர்... இதோ...இந்த ஐந்தாறு பேர், என்னோடு கூர்ந்து கவனியுங்கள்... அவர்களுடைய மணிக்கட்டுகளையும் (தொப்பியால் மறைக்கப்பட்ட) தலைகளையும் தவிர வேறொன்றும் தென்படவில்லை. மேனியை எடுத்துக்காட்டா வண்ணம் அவர்களுடைய ஆடைகள் அகன்றதாகவுள்ளன.

மைக்கல்: ம்ம்.. நீங்கள் கூறுவது சரி!

றாஷித்: அப்படியென்றால் அவர்களுக்கு என்ன நடந்தது?!

மைக்கல்: எதில் கேட்கிறீர்?

றாஷித்: உங்கள் சமுதாயத்தில்...

மைக்கல்: அறை நிர்வாண நிலையைப்பற்றியா ?!

றாஷித்: ஆம், அதைப்பற்றிதான்.. அதை ஒரு பண்பாட்டுச்சீர்கேடாகவே பார்க்கிறேன்.

மைக்கல்: அது தனிமனித சுதந்திரம்; நாங்கள் சுதந்திரத்தை மதிப்பவர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ அவனுக்கு உரிமையுன்டு.

றாஷித்: ஆம், எனக்கும் விளங்குகிறது அதைப்பற்றி ஓரமர்வில் கலந்துரையாடவேண்டும். இதில் கவனத்தையீர்க்கக்கூடிய விடயம் என்னவென்றால்; பண்பாடில் ஏற்பட்ட மாற்றமே; சமூகத்திலுள்ள தனிமனிதர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே தெரிவை நோக்கி சென்றதைப் போன்றிருக்கிறது!.

மைக்கல்: தனி நபர் அனைவரும் பின்பற்றும் சமூகக் கலாசாரமமென ஒன்றிருக்கிறதை நன்கு அறிவீர்கள். இக்கலாசாரத்தை தேர்ந்தெடுப்பதற்கு மத்தியில் தனிநபர்கள் வித்தியாசப்படலாம்.

றாஷித்: மிக அருமையான விளக்கம், இது தொடர்பாக உங்களுடைய பரிசுத்த வேதாகமம் என்ன கூறியிருக்கிறது எனப்பார்த்தால், அதிலுள்ள சரி, பிழைகளைக் கண்டறியலாம். புனித பவ்ல் திமோதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: {ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல் * தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்} [தீமோத்தேயு: அதிகாரம்2: வசனம்9,10]

மைக்கல்: தலைவரே! இவ்விடயம் தேவாலயத்திலுள்ள சன்னியாசிகளுக்கு பொருந்தும். ஆனால் நாங்களோ; தேவாலயத்திற்கு வெளியே இருப்பவர்கள். நான் உங்களுக்கு ஏற்கனவே கூறியதைப்போன்று சமயம் வளர்ச்சி கண்ட காலம் தொட்டே நாங்கள் அதை பின்பற்றுவதில்லை.

றாஷித்: ஆனால் நண்பரே! நாங்கள் பார்த்த கானொலியில் மிக ஒழுக்கமாக பாதையில் சென்று கொண்டிருந்த பெண்கள் தேவாலயத்தில் உள்ள சன்னியாசிகள் அல்ல. இந்நவீன கோட்பாடுகளிலிருந்து மார்க்கம் வெளியேறிவிட்டதென வைத்துக் கொண்டாலும், நவீனத்திற்கு முன் பல நூற்றாண்டுகள் இருந்தன. நான் மீண்டும் அதே கேள்வியை கேட்கிறேன்: உங்களுடைய பெண்கள் அறை நிர்வாணிகளாகவும், கூச்சமற்றவர்களாகவும் மாற்றியது எப்படி?.. அவர்களுக்கு என்ன நேர்ந்தது?...

மைக்கல்: உங்களுக்கு புதுமையாக இருந்தாலும், எனக்கு அது சாதாரனமானவொன்று. அந்தக் காணொளியை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், அது குளிர் காலக்காட்சி என்பது உங்களுக்கே புரியும். அந்நேரத்தில் குழந்தைகள், ஆண்கள், பெண்களென அணைவரும் கடும் நிறத்திலான ஆடைகளையே அணிவார்கள். அந்த அடக்க ஒழுக்கம் குளிர் காரனமாகவும் இருக்கலாமல்லவா?! அப்படித்தான் நீங்கள் கூறுவதைப்போன்று இருந்தாலும், அதை எவராலும் மறுக்க முடியாது. ஏனன்றால், அக்காலத்து பெண்கள் மிக ஒழுக்கமானவர்களாக இருந்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்குப்பிறகு என்ன நடந்தது என்றால்; சமூகமும், கோட்பாடுகளும் மாறிவிட்டன.

றாஷித்: ம்.. இது பன்பாடு சம்பந்தமான வேறொரு பிரச்சினை இதுற்றி பிரிதொரு அமர்வில் உரையாடலாம். பண்பாடு, கோட்பாடுகள் என்பன விஞ்ஞானம், கருவிகள், சாதனங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்துவதில் வித்தியாசப்படுகின்றன.

மைக்கல்: இப்போதே உரையாடினாலும் பரவாயில்லை.. றாஷிதே என்னை மன்னிக்கவும்!... ஏனெனில், பெண்கள் என்றால் அவர்களுடைய உடல்தான் என்று சொல்லும் அளவு ஏன் இவ்வாறு பேசுகிறீர் ? அதற்கான காரணம் என்ன?---

றாஷித்: இஸ்லாம் ஆண், பெண் இருவரையும் மனிதன் என்றடிப்படையிலேயே நோக்குகிறது. மனிதன் உடல்,ஆவி,சிந்தனை முதலியவற்றினாலான ஓர் படைப்பினமாவான். பேசும் பிராணியான இவன் சிறந்த பண்பாடு,ஆன்மா,சமூகஅமைப்பு என்பனவற்றால் முழு மனிதண் என்ற நிலையை அடைகிறான். நீங்கள் நாகரீகமடைந்து விட்டதாக எண்ணி வாழ்க்கையிலிருந்து மார்க்கத்தை தூரப்படுத்தி விட்டீர்கள். சிந்தனை மார்க்கத்துக்கு அப்பாற்பட்டதென மாயக்காரணங்காட்டி, உடலால் நீங்கள் நினைத்தவற்றைப் புரிவதற்காக, தேவாலயத்தை ஆன்மீகத்தால் தனிமைப்படுத்திவிட்டீர்கள். சடவாத நாகரீகத்தின் அராஐகக்காரர்கள் மிலேச்சுத்தனமான உடலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்காக பெண்களின் அங்க அவயங்களை அவர்கள் வெளிப்படுத்தவேண்டுமென வலியுறுத்துகிறார்கள்; அதற்கு சுதந்திரம்,உரிமைகள் என நாமம் சூட்டுகிறார்கள்.

மைக்கல்: நாங்கள் காலையிலும் மாலையிலும் பெண்களை அறை நிர்வாணத்துடன்தான் காண்கிறோம்; ஆனால் நீங்கள் கூறுகிற மிலேச்சத்தனமான மனோ இச்சைகள் எங்களுக்கு வருவதில்லையே.

றாஷித்: இதை நீங்கள் நற்செயலென நினைக்கிறீர்களா? இவ்வாறு ஒரு நபர் இச்சையைத் தூண்டக்கூடிய காட்சிகளை வழமையாக பார்த்தால், அவரை பல்லினச்சேர்க்கை போன்ற குறுகிய விளைவுகளுக்கு இட்டுச்செல்லும். காலப்போக்கில் அது அவருக்கு பழகிப்போகவே உணர்ச்சியை தூண்டும் வேறொன்றைத் தேட ஆரம்பிப்பார்; அது காலப்போக்கில் அவரை ஓரினச்சேர்க்கைக்கு இட்டுச் செல்லும்.

மைக்கல்: தலைவர் றாஷித் அவர்களே! குறுகிய விளைவு தூர விளைவுகளென உங்களிடம் பல விளைவுகள் உள்ளன.

றாஷித்: ஆம், விளைவுகள் எண்ணிலடங்காதவை. ஒருவர் சில காரணிகளால் அவருடைய மனோஇச்சையை அடைய முடியாது போகுமிடத்து அதை எப்படியாவது அடைய வேண்டுமென்ற தாக்கங்களுக்குள்ளாகிறார். இதனால் கற்பழிப்புச்சம்பவங்கள் நிகழுகின்றன. இவ்வாறு புள்ளிவிரபவியல்களால் பதியப்பட்ட கற்பழிப்புகள் சிலவற்றைக் கூறுகிறேன்

பிரான்ஸில் ஓராண்டுக்கு இரண்டு மணித்தியாளத்திற்கு ஒன்று என்றடிப்படையில் 4412 கற்பழிப்புகள் இடம்பெறுவதாக பிரான்ஸிய உள்விவகார அமைச்சிற்குரிய புள்ளிவிபரவியல் சுட்டிக்காட்டுகிறது.

பிரித்தாணியாவின் தலைநகர் லன்டன் பொலிஸ்பிரிவு, ஆண்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்ற நேரத்தில் அவர்களிடம் சரணாகதியாக மாறுவதற்கு மாற்றீடாக சாதகமான நிலவரங்களை உருவாக்கிக்கொள்வது தொடர்பான தற்பாதுகாப்புக்கலைகளை பயிழ்வதில் பெண்களை ஊக்குவித்துவருகிறது. லன்டன்மாநகர் வீதிகளில் கொடூரமான கற்பழிப்புகள் நிகழும் வீதம் ஓராண்டிற்கு 11% என்றடிப்படையில் உயர்ந்து செல்வதனாலேயே இவ்வாறானதொரு திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

அமெரிக்காவின் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தேசிய புணர்வாழ்வு மையம்; ஐக்கிய அமெரிக்காவில் பருவ வயதை அடைந்த பெண்களின் கற்பழிப்பு ஒரு நிமிடத்தில் மூன்றுகொன்று(1/3) என்ற வீதத்தை அடைந்திருப்பதாகவும், அவர்கள் எட்டிக்கு ஒன்று (1/8) என்ற வீதத்தில் கற்பழிப்புக்குள்ளாக்கப் படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது.. இவையனைத்தும் 1991 ஆம் ஆண்டிற்குரியவை

ஆனால் 2009 ஆண்டின் அறிக்கைப்படி வாலிபப் பெண்கள் மூன்றிட்கு ஒன்று(1/3) என்ற வீதத்தில் பதினான்கு வயதிலேயே கற்பழிக்கப்படுகிறார்கள் என புள்ளி விபரவியல் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவில் வருடாந்தம் அரை(1/2) மில்லியன் கற்பழிப்புச்சம்பவங்கள் அரங்கேறுகின்றன; அமெரிக்காவைச்சேர்ந்த பெண்பிள்ளைகளில் 61% பன்னிரென்டு வயதிற்கு முன்னரே கன்னித்தன்மையை இழந்து விடுகின்றனர்.

அது மட்டுமன்றி பேசப்படாத குற்றங்கள் என்றழைக்கப்படும் வேறு பல குற்றங்களும் உள்ளன. அவைகள்; அலுவலக உத்தியோகத்தர்கள், தலைவர்கள் அவர்களுக்குக்கீழால் பணிபுரியும் பெண்களிடம் புரியும் சில்மிசங்களாகும் அந்தப்பெண்களின் உத்தியோகம் பறிபோய்விடும் என்ற பயத்தினால் இவ்வாறான குற்றங்கள் வழமையில் பதியப்படுவதில்லை.

இக்கணக்கெடுப்புக்கள் யாவும் யதார்தத்தை முற்று முழுதாக பிரதிபலிப்பவையன்று;பதியப்படாதவை ஏராளமாகவுள்ளன.

மைக்கல்: என்றாலும் இதுபோன்ற குற்றங்களுக்கு உள, சமூக, வளர்ப்புமுறை, பொருளாதாரம் என பல காரணிகள் உள்ளன.

றாஷித்: ஆம் நீங்கள் கூறுவதும்... சரிதான். என்றாலும் உடல் கவர்ச்சியே மிக முக்கிய காரணியாக திகழ்கிறது என்பதை எம்மால் மறுக்க முடியாது. மாரிகாலத்தில் பாலியல் குற்றங்கள் கணிசமடைவதாக அமெரிக்க ஆய்வொன்று குறிப்பிட்டுள்ளது; இதற்கான காரணம் மாரி காலங்களில் அவர்கள் அணியும் ஆடைகள், அதேபோன்று மக்கள் அக்காலங்களில் அதிகம் வெளியேறுவதில்லை இதனால் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் மிகக்குறைவு. எது எவ்வாறாயினும்இவ்விரு அம்சங்களும் ஒரே காரணத்தையே வலுப்படுத்குகின்றன.

மைக்கல் எனினும் இறுதியில் அப்பெண்கள் தாங்களாகவே அவற்றை(அரைகுறை ஆடைகளை) விரும்புகிறார்களே... உங்களுக்கு ஏலவே கூரியதைப்போன்று அது ஓர் தனிமனித சுதந்திரம்; அதை எம்மால் தடுக்கமுடியாது

றாஷித் வெளிப்படையில் அவ்வாறு தோன்றினாலும், யதார்த்தம் என்னவெனில் மேற்கத்திய சமூகத்தை வழிநடாத்த கூடியவர்கள் குறிப்பாக ஆண்களே இவ்வரைநிர்வாண கலாச்சாரத்தை மெருகூட்டி புதுமுகப்படுத்தி காட்டுகிறார்கள்; அதற்கு வழிகோழக்கூடிய ஆதாரங்களையும், சாதனங்களையயும் கண்டுபிடிக்கிறார்கள் அதுமட்டுமன்றி பெண்ணிற்கு அநியாயம் இழைக்ககூடிய பலசட்டங்களையும் இயற்றுகிறார்கள். மேற்கத்திய சட்டங்கள் சில பாலியலை விலைக்கு வாங்க வழிகோலுகின்றன; பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்ற பெண்ணை விட வல்லுறவுக்குள்ளாக்குகின்ற ஆணை சீர்தூக்கிப்பார்க்கக்கூடியனவாக இருக்கின்றன. அதுமட்டுமன்றி இன்னும் சில மேற்கத்திய நாடுகள் பாலியல்வல்லுறவை ஒரு குற்றமாகவே பார்ப்பதில்லை.

பெண்கள் விடயத்தில் கரிசணை செலுத்தக்கூடிய முன்னனி நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் இடம்பெற்ற சம்பவத்தை எடுத்துக்கொள்வோம்: ஒருவன் வாகனத்தரிப்பிடத்திலுள்ள கலிவறைக்குச்சென்று ஒரு பெண்ணின் தலையை சுவரில் அடித்து மிகக்கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றிருக்கிறான். அவன் மேற்கொண்ட வழிமறை பாரதூரமற்றது என்பதைக்காரணங்காட்டி அதையொரு வல்லுறவாகவே கருதவில்லை, கற்பழிக்க முயன்ற குற்றத்திற்காக அவனுக்கு வெறுமனே ஏழு மாதகால சிறைத்தண்டனையே தீர்ப்பளிக்கப்பட்டது!!

எனதருமை நண்பரே! பண்பாடு மிக்க சமூகம் எது: இன்றைய சமூகமா, அல்லது கடந்ந நூற்றாண்டு சமூகமா?! என்ன..மீண்டும் ஒரு முறை அந்தக்காணொளியைப் பார்க்க விரும்புகிறீர்களா?!

மைக்கல்: தலைவர் றைஷித்! விடயம் தெளிவானது. இதைப்பற்றி இஸ்லாம் என்னகூறுகிறது?

றாஷித்: அதைக்கூற ஒன்றல்ல பல அமர்வுகள் தேவை.




Tags: