இஸ்லாத்தில் மணித உரிமைகள்

 இஸ்லாத்தில் மணித உரிமைகள்

இஸ்லாத்தில் மணித உரிமைகள்

இஸ்லாத்தில் மணித உரிமைகள்

ராஷித்: கணணியை திறந்து தகவல் பறிமாற்ற பகுதிக்கு சென்று அதில் மைக்கல் அனுப்பியிருந்த குருந்தகவலை பெற்றுகொன்டார், அடுத்த சந்திப்பிற்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள் நாங்கள் கலந்துரையாட வேண்டிய முக்கியமான விடயங்கள் உள்ளன. அவை பிறருடன் பலகும் முறை, அடக்கு முறை, சிந்தனை சுதந்திரம் என்பனவும் ,உங்களை மீண்டும் சந்திக்கிறேன் எனவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

ராஷித் நண்பர்கள் இருவரையிம் தகவல் பரிமாற்ற பகுதியில் பெற்றுகொன்டார் அவர்களுக்கு வந்தனத்தை தெரிவித்தவராக.

நன்பர் மைக்கல் நீங்கள் கூறீயதை போன்று மனித உரிமைகள் தொடர்பான அம்சங்கள் என்னிலடங்காதவை எனவே அவற்றை விலக்குவதற்காக முழுமையான ஒரு அடிப்படையை வகுத்துகொள்வது அவசியம் .

மைக்கல்:நான் அனுப்பிய குறுந்தகவலில் குறிப்பிட்டதை போன்று சில உதாரணங்களை கூறி விளக்கினாலும் பரவாயில்லை நடைமுறைக்கேற்றதாக இருக்கும்.

ராஷித்:ம் நிச்சயமாக அதில் எந்த ஆட்சேபனையிம் இல்லை.

ரஜீவ்: கடந்த எங்களுடைய சந்திப்பில் உரிமைகளையிம் கடமைகளையிம் மீளாய்வு செய்ய வேன்டுமெனின் அவை அமையப் பெற்றுள்ள கொள்கைகள் கோட்பாடுகளையே ஆராய வேண்டுமென குறிப்பிட்டிர்கள்.

ராஷித்:ஆம் சரி மனித உரிமைகள் சுதந்திரம் என்பன அவை தோன்றிய சிந்தனை பின்புலத்தையிம் அவை வளர்ச்சி கண்ட சமூக பொதுகலாச்சார கட்டமைப்பை அடிப்படையாக கொன்டது அந்தடிப்படையில் நண்பர் மைக்கலிடம் ஒரு கேள்வி. மேற்குலகு கூற கூடிய மணித உரிமைகள் சுதந்திரம் முதலியன தோற்றம் பெற்ற சிந்தனை பின்புலம் மற்றும் மேற்கத்தய கலாச்சார கட்டமைப்பு முதலியவற்றை எங்களுக்கு சற்று விளக்க முடியிமா.

மைக்கல்: ஆம் அவற்றை பின்வருமாறு நோக்கலாம்..

01.சுதந்திரம்,உரிமைகளை தீர்மானிப்பது சிந்தனையே புரட்டஸ்தாந்து கொள்கை லிபரல் வாதத்தில் செல்வாக்கு செலுத்தியிருப்பதை போன்று மதக் கோட்பாடுகளை இச்சிந்தனை உள்வாங்கியிருந்தாலும், அவற்றை ஏற்பதா மறுப்பதா என முடிவெடுப்பது சிந்தனை மட்டும் தான்.

02.உரிமைகளும், சுதந்திரமும் அமையப்பெற்றுள்ள கொள்கை மதச்சார்பற்றது.

03.சமூகம் பின்பற்ற வேண்டிய மிக பிரதான கோட்பாடுகள் சுதந்திரமும், சமத்துவமும் இவையிரண்டும் இன்றியமையாத முன்மாதிரியாகும் .

04.தனிமனித வாழ்க்கை சீராகவும், செழிப்பாகவும் அமைய சமூக நலன் பாதிக்காத விதத்தில் தனிமனித நலன்களில் கவனம் செலுத்தப் பட வேண்டும் .

ராஷித்:நன்றாக தெளிவுபடுத்தினீர்கள் நன்றி அப்படியென்றால் மேற்கத்தய அடிப்படை மூலாதாரம் வணக்கஸ்தளத்தை விட்டும் பிரிந்தபின்னர் சிந்தனை நடைமுறையை நோக்கி திரும்பியதே, அதே போன்று சுதந்திரம் உரிமைகள் அமையப்பெற்றுள்ள கொள்கை மதச்சார்பற்றது என்று தான் அர்த்தம்.

இன்னொரு முறையில் கூறினால் சுதந்திரம் சமத்துவம் என்பன மேற்கத்தய கலாச்சார கட்டமைப்பின் உச்சியிளிருக்கும் பிரதான அம்சமாகும் அவையிரண்டையிம் பாதுகாப்பதற்காக உரிமைகளையிம் ,கலாச்சாரத்தையிம் இலக்க நேரிடலாம் என்று கூறுவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உரிமைகள் சுதந்திரம் என்பன இஸ்லாமிய கட்டமைப்பிலிருந்து மேற்கத்தியத்திற்கு முற்றிலும் வேறுபட்டவை.

ரஜீவ்: ஆம் இஸ்லாத்தின் மனித உரிமைகளை தெளிவுபடுத்தும் சிந்தனை கட்டமைப்பை எங்களுக்கு மேற்கத்தய வியாக்கியானத்தோடு ஒப்பீடுசெய்து பார்க்கலாமே.

ராஷித்:இஸ்லாத்தில் மற்றும் இஸ்லாமிய சமூகத்திலுள்ள ஒழுங்கமைப்பு முற்றிலும் வேறுபட்டது.

01.இஸ்லாத்தை பொருத்தமட்டில் சுதந்திரம் உரிமைகளை தீர்மானிக்கும் அடிப்படை வேதவெளிப்பாடாகும். அத்தோடு மனித சிந்தனை மற்றும் நடைமுறைகளிலும் கவனம் செலுத்த தவறவில்லை.

02.இஸ்லாமிய சமூகம் அமைய பெற்றுள்ள கொள்கை இவ்வுலகத்தோடு ஒத்துப்போகும் மார்க்க கொள்கையாகும்.

03.இஸ்லாத்தை பொறுத்தமட்டில் இஸ்லாமிய சமூகத்தின் கலாச்சார பிரமிட்டின் உச்சியில் காணப்படும் மிகப்பிரதான அம்சங்கள் அல்லாஹ்வை வழிப்படுதலும் நீதமாக நடந்துகொள்வதுமாகும் இவையிரண்டிற்கும் ஏனைய சமூக்கலாச்சாரங்களும் ஒத்துபோவது அவசியமாகும்.

04.இஸ்லாத்தில் தனிநபர் சமூகம் ஆகிய இரண்டும் ஒன்றை யோன்று எல்லைமீறிச் செல்லாதவன்னம் பரஸ்பர நலன்பேணக்கூடிய விதத்தில் அமைய பெற்றிருத்தல் வேண்டும்.

ரஜிவ்:சில உரிமைகளின் சரியான தெளிவின்மை காரணமாக அவை தொடர்பான இவ்விரு (மேற்கத்தய, இஸ்லாமிய) கண்ணோட்டங்களையும் கைவிட வேண்டிய நிலையேற்படலாம்.

மைக்கல்:இஸ்லாமிய மற்றும் மேற்கத்தய கண்ணோட்டத்தில் ஒப்பு நோக்கி கொள்கை சுதந்திரம் என்றால் என்ன வென்று முதலில் வரையறுத்து கொள்ளலாம்.

ராஷித்:மதச் சுதந்திரம் அல்லது கொள்கை சுதந்திரம் ஒப்பிட்டு நோக்க பொருத்தமான துறையே, ஆயினும் மதம் மற்றும் கலாச்சார பிரமிட்டுகிடையிலான அதன்தொடர்பு (இஸ்லாமிய, மேற்கத்தய) அமைப்புகளில் வேறுபட்டவை.

மேற்குலகில் எந்தவொரு நபரும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றவும் அல்லது மத நம்பிக்கையற்ற நாஸ்திகராக இருக்கவும் உரிமையுண்டு மதச்சுதந்திரம், தனிநபர் உரிமை என்றடிப்படையில் யாரும் இதில் தலையிடமுடியாது.

ஆனால் அதேநேரத்தில் மேற்குலகிலுள்ள முஸ்லிம் தான் விரும்பியவற்றை கடைபிடிக்க முடியுமா என பரீசீலணை செய்து பார்த்தால் தான் விரும்பிய கொள்கையை கடைபிடிக்க அவனால் முடியவில்லை மார்க்கத்தை தன் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க மேற்குலகம் அனுமதியளிப்பதில்லை எடுத்துகாட்டாக ஒரு முஸ்லிம் இஸ்லாமிய முறைப்படி அறுப்புமுறையை மேற்கொள்ளவோ, இரண்டாம் திருமனம் செய்துகொள்ளவோ, அல்லது ஒரு இஸ்லாமிய பெண் மார்க்கம் விதியாக்கியுள்ள ஆடையை அணியவோ பெரும்பாலான மேற்குலக நாடுகளிள் முடியாதுள்ளது இவற்றை முஸ்லீம்கள் மார்க்கத்தின் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர் இதற்கென்ன விளக்கம் கூறுகிறீர்கள்.

மைக்கல்:ஏனென்றால் அவை மனித உணர்வுகளுக்கும் கொள்கை சுதந்திரத்திலுள்ள அவனுடைய உரிமைகளுக்கும் அப்பாற்பட்டவை அதே போன்று பெரும்பாலானோர் வாழ்க்கை அலுவல்கள் சமயத்தைவிட்டும் விலகியிருக்க வேண்டுமென்றே விரும்புவர் அத்தகைய தனிநபர் ஒழுங்கு முறைக்கும் ,சமூக வாழ்விற்கும், அவற்றில் அச்சுறுத்தல் உள்ளது.

அதே நேரத்தில் அந்த முஸ்லிமுக்கு திருமண முறையல்லாமல் அவர்கள் விரும்பும்பட்சத்தில் வேறு பெண்களுடன் சட்டரீதியாக உறவாட முடியிம் .

ராஷித்:என்றாலும் இந்த சட்டரீதியாக ஆகுமாக்கபட்ட நடவடிக்கை அவன் பின்பற்றும் மார்க்கத்திற்கு முரணாகவல்லவா இருக்கிறது!.

நீங்கள் ஒரு முஸ்லிமுக்குரிய இக்கட்டுபாடுகளை உரிமைமீறலாக கருதமாட்டீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் ஏனெனில் இந்த கட்டுபாடுகளுக்கும், மார்கத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை மாறாக நீங்கள் மனிதனாக நினைக்கும் மதச்சார்பற்ற சடவாத செயற்பாடுகளை சுட்டிகாட்ட கூடியன என்பதை நன்கு அறிவீர்கள் .

இதனால் சமய கண்ணோட்டம் வாழ்க்கையும், ,சமயத்தையும் இரு கூறுகலாக பிரித்துநோக்கும் மேற்கத்திய மதச் சாற்பற்ற கொள்கையுடன் இசைவானதாக தோற்றம் பெற்றது. எனவே இவ்வடிப்படையில் சமயத்திற்கும் ,சமூகவொழுங்கிற்கும் எவ்வித தொடர்புமில்லை. ஆனால் நீங்கள் ஏற்கனவே கூறியதைப் போன்று வாழ்க்கை நடைமுறை மார்க்கத்தைவிட்டும் பிரிந்திருக்க வேண்டுமென்ற உள்ளுனர்வு தனி மனிதனுடைய உள்ளத்தில் மறைந்து காணப்படுகிறது.

ரஜீவ்: இப்போது நான் இஸ்லாமிய கண்ணோட்டத்தின் போக்கை புறிந்து கொள்கிறேன்.

றாஷித்: இஸ்லாமிய பார்வையில் கொள்கை சுதந்திரம் முழு சமுதாயத்தினரையும் கவனத்திற்கொன்டு அல்லாஹ்வை மாத்திரம் வழிப்படவேண்டுமென்பதை உத்தரவாத மளித்தலாகும். அந்த அடிப்படையில் அல்லாஹ்வின் அதிகாரத்தை ஏற்றுகொள்கின்ற ஒவ்வொருவரையும் இஸ்லாமிய சமூகம் அதன் குடையின் கீழ் ஏற்றுகொன்டு அதை புறக்கணிக்கின்ற ஒவ்வொருவரையிம் ஒதுக்கின்றது. இறைவனால் அருளப்பட்ட மார்கங்கள் அல்லாஹ்வை வழிப்படவேண்டு மென்ற குடையின் கீழ் உட்படுகின்றன. இதனடிப்படையில் யூத ,கிறிஸ்தவ மதங்களையும் இஸ்லாமிய சமூகம் உள்வாங்கி முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது. அதே நேரம் இவையல்லாத நாஸ்தீக கொள்கையோ சிலைவணக்க வழிபாடுகளையோ இஸ்லாமிய சமூகம் உள்வாங்கவில்லை.

எனினும் அவ்விரு(கிறிஸ்தவ,யூத)மதங்களிள் அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டுமென்ற அடிப்படைகொள்கையில் ஏற்பட்ட நெறிபிரல்வால் கருத்துச்சுதந்திரம் என்ற வட்டத்தை சுறுகியதாக காணப்பட்டது. இதனால் அவர்களால் சமய கொள்கையை பரப்பமுடியாத நிலையிலுள்ளனர். அவ்வாறு பரப்புவது அல்லது நெறிபிறள்ந்த கருத்துகளை தெரிவிப்பது சமூக கலாச்சார கட்டமைப்பிற்கும் சமூக ஒழுங்கிற்கும் பங்கம் விளைவிக்கும்.

மைக்கல்: இஸ்லாம் மாற்று மதங்களுக்கு செல்வதை தடுத்துள்ளது. அதைபற்றி என்ன கூறுகிறீர்கள்.

றாஷித்: இப்பிரச்சினை நான் கூறிய அம்சத்துடன் தொடர்புபடுகின்றது. இஸ்லாத்தை விட்டும் மதம் மாறுபவர் தொடர்பான சட்டம் இஸ்லாமிய கண்ணோட்ட அடிப்படையிலான கொள்கை சுதந்திரத்துடன் தொடர்புபட்டது இஸ்லாத்திற்கு ஆரம்பமாக நுழையாதவர்களை இஸ்லாம் தண்டிப்பதில்லை அவர்களை நுளையுமாறும் வற்புறுத்தவில்லை. இஸ்லாத்தில் எத்தைய நிர்பந்தமும் இல்லை ஏனெனில் வழிகேட்டிலிருந்து நேர்வழி திட்டமாக தெளிவாகிவிட்டது. ஆகவே எவர் தாகூத்தை ((ஷைத்தானை) நிராகரித்து விட்டு அல்லாஹ்வை விசுவாசிக்கிறாரோ அவர் திட்டமாக அறுந்து போகாத பலமான கயிற்றை பற்றிபிடித்து கொண்டார். மேலும் அல்லாஹ் செவியேற்கிறவன் நன்கறிகிறவன் [அல் பகரா வசனம் 256] நபியே நீர் கூறுவீராக (உங்கள் இரட்சகனிடமிருந்து வந்திருக்கும் இவ்வேதமானது சத்தியமானதாகும் ஆகவே எவன்நாடுகிறாரோ அவர் இதை விசுவாசித்து கொள்ளட்டும் இன்னும் எவர் நாடுகிறாரோ அவர் (இதை)நிராகரித்து விடட்டும் ) [அல்ஹக்ப் வசனம் 29] [அல் காபிரூன் வசனம் 6] உங்களுக்கு உங்கள் மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம் அதே நேரம் இஸ்லாத்திலிருந்து மதம் மாறி செல்வதை தடுக்கிறது அவ்வாறு செல்பவர்களை வண்மையாக கண்டிக்கிறது.

இஸ்லாத்திலிருந்து மதம்மாறுவது ஒரு சமூகம் நிலைத்திருக்க முடியிமான உன்னதமான அடித்தளத்தை குறை கண்டதாக கருதப்படும் அல்லது அம்மார்க்கத்தின் பரிபூரன தன்மையில் குறைகண்டாதகவோ அல்லது மனிதனுக்கு அது அவசியமில்லை என்பதாகவே கருதப்படும் எனவே இவ்வாறு கருதுவது அம்மார்க்கம் சரியென நம்பி அதன் அவசியத்தை வழியுறுத்த கூடிய ஒரு சமூகத்திடம் ஏற்றுக்கொள்ளப்பட்டவொன்றல்ல.

மேற்குலகில் சுதந்திரம் பெயரில் மார்க்கத்தை விட்டு வெளியேறினால் போதும் உடனே அதற்கெதிராக எதிர்ப்பலைகள் எழுந்துவிடும்.

மைக்கல்: ஆம் றாசித் உங்களுடைய இவ்விளக்கத்திற்கு நன்றி இப்படியான கலந்துரையாடல்கள் எனக்கு மகிழ்ச்சி யூட்டுகின்றன இதைதொடர ஆசைபடுகிறேன்.




Tags: